உன் மௌனம் போதுமெனக்கு

மலரினும் இனிய
மௌனங்களால்
எனை வருடுகிறாய்

வியர்வைத் துளிகளால்
புருவம் நனைந்திட
வழிந்தோடும்
மையினை எடுத்து மயிலிறகால்
உம்முக பாவனைகளை
எழுத வரம் வேண்டுமெனக்கு

மௌனமும் பேசும்மொழியென்று
இதுவரையில் நானுணர்ந்ததில்லை

இன்றதை நுகர்கிறேன்
விழிபேசும் வார்த்தைகள்
வின்னதிற
என் செவிகளுக்கு மட்டும்
விருந்தாகிறதே
என்ன விந்தையிது

செவிபுலன் வாங்கிய
வார்த்தைகளை எனதிதயம் சேகரிக்க
உன்னைத்தான் நான்
காதலிக்கிறேனென்று
கத்திவிட தோன்றுகிறதெனக்கு

காதலியே காற்றலை
வீச்சத்தில் கரைந்துபோகாத
உன்மௌனம்
என் கனல்காற்றில்
கலந்தின்பம் காணுகிறதிங்கே

தொலைதூரத்தில் நீயிருந்தாலும் எனதருகிலேயே
எனக்காகவே அமர்ந்திருக்கிறாயென்று
உன் முகபாவனைகள்
திரண்டுவந்து தித்திக்கத் தித்திக்க காதலை சொல்கிறதே

கவிதைகளால் என் காகிதங்கள் நனைய
நிரப்பிய பக்கங்களோ
பசி தீரவில்லையென
திட்டித் தீர்க்கிறது
எனதிடத்தில்

மீண்டும் உணர்ந்தேன்
உன் முகபாவனை
வலிமையை

வாழத்தான் வேண்டுமென்றால்
உன் மௌனத்தோடும்
வாழ்ந்துவிடுவேன்
கடைசி வரை உம்முக
பாவனைகளை
கண்டுரசிக்கும் காதலனாக இருப்பதே
போதுமெனக்கு,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்