கம்யூனிஸ்ட்டுகளின் தீண்டாமை எதிர்ப்புக் களம்


தீண்டாமை எதிர்ப்பு மற்றும் சாதி ஒழிப்பு என்று வருகின்றபோது கம்யூனிஸ்டுகள் மீதான விமர்சனம் மேலெழும்பிச் செல்கிறது . காரணம் முதலாளித்துவம்,
நிலபிரபுக்களின் ஆதிக்கம்.
கார்ப்பரேட்டுகளின் ஏகாதிபத்தியமென்று
மார்க்ஸிய லெனினியத்தின் மூலமாக அவற்றையெல்லாம் எதிர்த்து புரட்சி
போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள்
முன்னெடுக்கிறதேயன்றி அதனையும் தாண்டி இந்தியத்திற்குத் தேவையான சாதி எதிர்ப்பு, அல்லது பார்ப்பன எதிர்ப்பினை முன்னிருத்தாத
கம்யூனிஸ்ட்டுகள் என்று பரவலாக
கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம் இங்கே முன்வைக்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட்டுகளின் மீதான இவ்விமர்சனம் உண்மையானதா ? என்றால் முற்றிலும் உண்மையென புறக்கணித்துவிடவும்
முடியாது. காரணம் இந்தியத்தில்
நிகழ்த்தப்படும் சாதியாதிக்க வெறித் தாக்குதல்களை கண்டித்தும் அதனை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்துச் சென்று தங்கள் கடமையை சிறப்பாக
ஆற்றுகின்றது.இருந்தும் ஏன்
பாதியளவுக்கு மட்டும்
எடுத்துக்கொள்ளப்படுகிறதென்றால் அதற்கும் காரணமுண்டு. ஒரு கம்யூனிஸ
தொழிற்சங்கத்தின் நடவடிக்கைளையும் அதன்
செயல்பாடுகளையும் கவனித்தால்
விளங்கும் .அது அரசு,பொதுமற்றும்
தனியாரென்ற அனைத்து துறைகளிலும்
மறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிரு­­
க்கும் இரட்டை மாறுவேட முகங்கொண்ட
கம்யூனிட்ஸ்டுகள் ஆகும். ஒரு
கம்யூனிஸ்ட் த
உறுப்பினர்கள் வெறும் கம்யூனிஸ்ட்களாக
மட்டுமே இருப்பதில்லை மாறாக
அத்தொழிற்சாலைகளில் நிலவும்
ஆதிக்கச் சாதிய சங்களிலும் அல்லது
இயக்கங்களிலும் தங்களை
உறுப்பினர்களாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.இதன் காரணமாக
கம்யூனிஸ்ட்டுகள் எடுக்கும் எவ்வித
போராட்ட நடவடிக்கைகளுக்கும் சக
கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்குதலையே
கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்டுகளின் அழுத்தங்களை விட
ஆதிக்கச் சாதி இயக்கங்களின்
அழுத்தங்களை அவர்களை பின்னோக்கித்
தள்ளுகிறது. இவ்வகையான இரட்டை
மாறுவேட நடவடிக்கையானது வெறும்
தொழிற்சங்களில் மட்டுமே இருப்பதில்லை
மாறாக அடித்தட்டு கிராம தொழிலாள
வர்க்கத்தில் தொடங்கி அதிநவீன
தொழிற்துறை வரையில் எங்கும்
பரவிகிடக்கிறது . இம்மாதிரியான
இரட்டை மாறுவேட தோற்றத்தை எவ்வாறு
எடுத்தாளப்பட வேண்டும் அதற்கான
நடவடிக்கைகள் என்னென்ன என்பது
போன்றான தீர்வுகளை தேடியே
இத்தனையாண்டு கால கம்யூனிஸ்ட்டுகள்
தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும்
இன்றுவரையில் அதற்கான
தீர்வெட்டப்படவில்லை என்றேச்
சொல்லலாம்.தங்களுக்குள்ளேயான
நடவடிக்கைகளிலே இன்னமும் தீர்வெட்டாத
நிலையில் சாதி எதிர்ப்பை
முன்வைத்தால் இருக்கின்ற
கம்யூனிஸ்ட்டுகளும் முரண்பட்டு விலகிச்
சென்றுவிடுமென்று கம்யூனிஸ்ட்டுகள்
அச்சமுறுகின்றது. மேலும்
மார்க்ஸியத்தை பொருத்தமட்டில்
இந்தியாவில் சாதிகளும் மேலோட்டுப்
பார்வை கொண்டதாகவே இருக்கிறது.
இவ்வாறு இருக்க கம்யூனிஸ்ட்டுகள் சாதி
ஒழிப்பையும் தீண்டாமை எதிர்ப்பையும்
முன்னெடுத்தேயாக வேண்டும் என்கிற
கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால்
அதன்தேவை கருதியும் உண்மை
சோஷயலிசம் இம்மண்ணில் விதைக்க
வேண்டுமென்கிற முற்போக்குச்
சிந்தனையினாலும் கம்யூனிஸ்ட்டுகள்
இன்று தீண்டாமை எதிர்ப்பினையும்,
சாதி எதிர்ப்பினையும் முன்னெடுத்துச்
செல்வதற்கான பாதையை வகுத்துத்
தந்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்.
இனி கம்யூனிஸ்ட்டுகளின் மீதான
பார்வை அகலமாக்கப்படும் .
கம்யூனிஸ்ட்டுகளை மேற்கண்ட சாதிய
எதிர்ப்பு,மற்றும் தீண்டாமை எதிர்பின்
மீதான விமர்சனங்கள் இனி
உடைத்தெறியப்படும் எனக்கிற
நம்பிக்கையும் மாறாப்பற்றும் துளிர்விடத்
தொடங்கியிருக்கிறது என்றேச்
சொன்னால் அது மிகையாகாது. 18 மே 2015 அன்று விருதுநகரில்
நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு
முன்னணியின் மாநில மாநாட்டில்
கம்யூனிஸ்ட்டுகள் தலைமையேற்று
இதற்கான போராட்டக் களங்களை
முன்னெடுக்க முனைப்புடன் செயல்பட
தங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது.
இன்றைய தேவையில் தீண்டாமை எதிர்பே
அவசியமென்று கம்யூனிஸ்ட்
உணர்ந்திருக்கிறது. இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தில்
தீண்டாமையின் பார்வை அவ்வளவாக அலசி
ஆராயப்படவில்லையென்றாலும் .தீண்டாமை குறித்து விரிவாகக் காண http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_35.html?m=0
மனிதனின் காலணியில் தொடங்கி
உச்சந்தலை வரையில் திணிக்கப்படும்
அல்லது செயல்படுத்தப்படும் அனைத்தும்
தீண்டாமைதான் என்கிற முடிவிற்கு
கம்யூனிஸ்ட்டுகள் வந்திருப்பது
வரவேற்க்கத்தக்க ஒன்றாக இருக்கிறது .
ஆனால் இம்மாநில மாநாட்டில் சாதிய
எதிர்பினை முன்னிருத்தவில்லை என்கிற
குறைபாடு இருந்தாலும். தீண்டாமை
எதிர்ப்பினை முன்னெடுப்பதன் மூலம்
சிறிதளவேனும் சாதிய எதிர்ப்பை
முன்னெடுத்துச் செல்லலாமென்ற
தீர்வுக்கு எதிராக நாம் செயல்பட
முடியாது. கம்யூனிஸ்ட்டுகள்
இந்நாட்டிற்கு தேவையானவர்களென்று
விரைவில் நம்சமூகம் உணரும்,உணர
வேண்டும் " கம்யூனிஸ்ட்டுகளின்
இந்நடவடிக்கைகளை பாராட்டவேண்டுமேத்
தவிர அதன்மீதும் காழ்ப்புணர்ச்சியை
கொட்டுவது வேண்டாத செயலென்றே
நாம் உணரவேண்டும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்