மாவோயிஸ்ட்டுகளின் மீதான பார்வை

முதலாளித்துவ வாதிகள் நில
அபகரிப்புச் செயலில் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டு அதன்
முதற்கட்டமாக தொழிலாள வர்க்கத்து
கிராமப்புர விவசாயிகளின்
நிலங்களை கைப்பற்றி தங்களின்
ஆதிக்கத்தை இந்தியாவில்
நிலைநிறுத்தினார்கள். இதன்
பொருட்டு மீட்புக்கான புரட்சி
நமக்கு தேவைப்படும் வேளையில்
கம்யூனிஸ கோட்பாடுகளை
உதவிக்கழைக்க வேண்டிய நிலை
உறுவாகிறது. கம்யூனிஸத்தின்
தேவை நமக்கு ஏற்படும்போது
தொழிலாள வர்க்கத்து
ஒற்றுமையை
நிலைநாட்டுவதிலும்
புரட்சிக்கெதிரான
அடக்குமுறைகளை
சமாளிப்பதற்கும் ஒர் இயக்கம்
கட்டமைக்கப்பட வேண்டும்
என்பதுதான் உலக நியதியாகப்
படுகிறது. அவ்வாறான இயக்கம்
தன்செயலில்
மாறுபடுகின்றபொழுது
கம்யூனிஸத்திலும் சில
மாறுதல்களை ஏற்படுத்தியாக
வேண்டியச் சூழலை அது
தனக்குத்தானே
உறுவாக்கிக்கொள்கிறது.சனநாயகத்தில்
சமத்துவத்தை நிலைநாட்ட
வேண்டுமெனில்
கம்யூனிஸத்திற்கு கார்ல்
மார்க்ஸூம், ஃபிடரிக் ஏங்கெல்சும்
தேவைப்படுகிறார்கள்.மார்க்ஸின்
முதலனத்தின் கூடவே சோஷியலிச
கோட்பாடுகளையும்
எடுத்தாளுவதில் நாடுகளிடையே
பல்வேறு வேற்றுமைகள்
இருந்திருக்கிறது.
கம்யூனிஸத்தை ஏற்றுக் கொண்ட
நாடுகள் தங்களின்
நிலவடிவமைப்பு,
நாட்டுச்சூழல்,அன்றையத்தேவைகள்
அனைத்தையும் கணக்கில் கொண்டு
மார்க்ஸிடமிருந்து அவர்களுக்குத்
தேவையானதை மட்டும் எடுத்துக்
கொண்டார்கள் என்றேச் சொல்லலாம்.
மார்க்ஸியத்தை உலக
விரிவடைதலுக்கு
பெருந்துணையாக நின்று அதில்
அளவுகடந்த வெற்றியும் பெற்று
சோவியத் யூனியன்
உறுவாக்கத்தில் அரும்பாடுபட்ட
லெனினும் அனைத்துலக
மார்க்ஸியத்தின் செயல்திட்டத்தினை
நகரத்திலிருந்தே ஆரம்பிக்கிறார்.
சோவியத் யூனியனான ரஷ்யாவின்
நிலபரப்பும், காலச்சூழலும்
லெனினுக்கு நகரத்
தொழிலாளிர்களையே முதலில்
கைகாட்டியது அதன் படியே
பார்த்தோமானால்,லெனினின்
சோஷியலிச கம்யூனிசம் நகரத்து
தொழிலாள வர்க்கத்திடமிருந்தே
ஆரம்பமாகிறது. அவர் நகர
தோழிலாள வர்க்க முன்னேற்றம்
முழுமையடைவதின் மூலமாக
ரஷ்யாவை மீட்டெடுத்து காலனிய
ஆதிக்கத்தினை உடைத்தெறிந்து
ஒரு முழு சோஷியலிச
கம்யூனிஸ நாடாக ரஷ்யாவை
உலகுக்கு காட்டினார்.சீனத்தின்
கம்யூனிஸம்
லெனினியத்திலிருந்து
முற்றிலும் மாறுபட்டதாக
உலகறியப்பட்டது.
மார்க்ஸியத்தையும்,லெ­­
னினியத்தையும் உள்வாங்கிக்
கொண்டாலும் சினாவின்
நிலவடிவமைப்பு மற்றும்
காலச்சூழலின் காரணமாக சீன
கம்யூனிச விடிவெள்ளி மாவோ
எனும் மா சே துங் கிராம
தொழிலாள வர்க்கத்தை
மீட்டெடுப்பதன் மூலமாக
கம்யூனிஸத்தை
வென்றெடுக்கலாமென உலகிற்கு
காட்டினார். சீனா அதன்
நிலவமைப்பு முறையில் கிராமத்
தொழிற்புரட்சியே
கொண்டிருந்தமையால் மாவோ
அதனை மார்க்ஸிய வழியில்
நன்குணர்ந்து சின கம்யூனிஸத்தை
உலகறியச் செய்தார்.
தற்போது இந்திய கம்யூனிஸத்தின் நிலை?
19ம் நூற்றாண்டில் இந்தியாவில்
கால்பதிந்த கம்யூனிசம் அதன்
முதற்ச்செயல்திட்டமாக மாவோ வின்
கம்யூனிஸ கோட்பாடுகளையே
முதன்மையாக கொண்டிருந்தது.
இந்தியாவின் முதுகெலும்பு
கிராம விவசாயத் தொழிலாள
வர்க்கமாக இருந்தமையே இதற்கான
காரணமாக அமைந்தது மேலும்
இந்தியா அதன் நிலவமைப்பு
முறையிலும் காலச்சூழலமைப்பு
முறையிலும் கிராமத்தையே
முதன்மையாகவும்
பெரும்பான்மையாகவும்
கொண்டிருந்த காரணத்தினால்
மாவோவின் செயல்திட்டம்
இந்தியாவிற்குத் தேவையாக
அமையப் பெற்றிருந்தது. இதன்
காரணமாக இந்திய
கம்யூனிஸமானது
சோஷியலித்தை வென்றெடுக்க
கிராமங்களை நம்பியதோடு கிராம
தொழிலாள வர்க்கச் சுரண்டலுக்கு
எதிராக ஆயுதமேந்தும் புரட்சியில்
தங்களை ஈடுபடுத்திக் கொண்டு
நிலவுடமை
ஜமீன்தாரிகளுக்கெதிராக கிராம
தொழிலாள வர்க்கத்தின் நிலங்களை
மீட்டெடுக்கும் புரட்சிகளை செய்து
கொண்டிருந்த வேளையில்
அவர்களுக்கான அரசியல் அதிகாரம்
பெற வேண்டும் ஆயுதமேந்துவது
அரசியலதிகாரத்திற்கும்
சோஷியலியத்திற்கும் தடையாக
அமைந்து விடுமென்கிற பல்வேறு
விமரிசனங்கள் எழுந்தமையால்
இந்திய கம்யூனிஸ்ட்டுகள்
ஆயுதமேந்துவதை கைவிட்டு
விட்டு அரசியல் அதிகாரத்தை
நோக்கி பயணிக்க தொடங்கினார்கள்.
கைவிட்டதில் ஆயுதம் கூடவே
கிராம தொழிலாள வர்க்கப்
புரட்சியும் சேர இந்திய
கம்யூனிஸ்ட் கிராம
புரட்சியிலிருந்தும் மாவோவின்
கொள்கை செயல்திட்டத்திலிருந்­­
தும் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக
விடுவித்துக் கொண்டது. மேலும்
அதற்கான வழிவகைகளை சீன
கம்யூனிஸ்டின் இந்திய ஆக்கிரம்பு
மற்றும் போர்தொடுத்தலும்
காரணமாக அமைய
வேறுவழியின்றி இந்திய
கம்யூனிஸ்ட்
மாவோயிஸத்திலிருந்து விலகத்
தொடங்கினார்கள் .
இவ்வாறான விலகலின் காரணமாக
ஏற்பட்ட பிரிவினை , விவாதங்களின்
காரணமாகவும் லெனினியத்தின்
நகர்புற தொழிலாள வர்க்க
வளர்ச்சியினையும் முன்னெடுத்த
காரணங்களாலும் இந்திய
கம்யூனிஸ்ட் இரண்டாக உடைய
வழிகோலியதென்றே எடுத்துக்
கொள்ளலாம் . மேலும் தொடர்ந்து
விடாமல் மாவோயிஸத்தைப்
பற்றிக்கொண்ட இந்திய
கம்யூனிஸ்டுகளே மாவோவின்
கொள்கை கோட்பாடுகளிலிருந்து
விலகிய கம்யூனிஸ்டுகளை
விமர்சனம் செய்யத் தொடங்கினார் .
அவர்கள் ஆயுதமேந்துவதை
கைவிடாத மாவோவின்
கொள்கைகளை ஏற்றவர்களாக
இருந்தார்கள். இந்நிலையில் கிராம
தொழிலாள வர்க்கச் சுரண்டலுக்கு
வித்திட்ட முதலாளித்துவ
நிலபிரபுக்களின் கிராம நில
அபகரிப்பின் மீதான புரட்சிப்
போராட்டத்தில் இந்திய
கம்யூனிஸ்ட்டானது முறண்பட்டு
நின்றமையால் 1967 ஆம் ஆண்டு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்
(மார்க்சிஸ்ட்) இரண்டாக உடைந்து
பிரிவினையைக் கோரியது. இந்தப்
பிரிவினையின் காரணமாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-
லெனினிஸ்ட்) உருவாக்கத்திற்கு
காரணமாக அமைந்தது. இருவேறு
இந்திய கம்யூனிஸ்டுகளும்
மார்க்ஸிய லெனினியப்
பாதைகளில் பயணித்தமையால்
மாவோயிஸத்தை முற்றுலமாக
கைவிடும் போக்கு பெருகிக்
கொண்டிருந்தச் சூழலில் ு.சாரு
மஜூம்தார்,கானு சான்யால்மற்றும்
ஜங்கல் சந்தால் ஆகியோர் நிலச்
சீர்திருத்தம் தொடர்பாக முன் வைத்த
மாறுபட்ட அணுகுமுறை
மாவோஸியத்தை முன்னெடுத்துச்
சென்றதென்றேச் சொல்லலாம் நிலம்
இல்லாதவர்களுக்கு நிலத்தை மறு
விநியோகம் செய்ய ஆயுதம் ஏந்தி
போராடத் தயாராக இருப்பதாக
சிலிகுரி கிசான் சபையின்
தலைவர் ஜங்கல் 1967 ஆம் ஆண்டு மே
மாதம் அறிவித்தார். இவ்வறிவிப்பு
முதன்மையான மாவோயிஸ்ட்
உறுவாக்கத்திற்கு வழிகோலியது
பிறகானச் சூழலில்,நக்சல்பரி
கிராமத்தில் குத்தகைக்குப் பயிர்
செய்யும் விவசாயியை
நிலவுடையாளர் கடுமையாக
தாக்கியதன் எதிரொலியாக
விவசாயத் தொழிலாளி பதில்
தாக்குதல் தொடுக்கிறார் இதனால்
ஆத்திரமடைந்த நிலவுடமை
முதலாளித்துவமானது
காவல்துறையை அவ்விவசாயி
மீது ஏவிவிடுகிறது. 1967 ஆம்
ஆண்டு அந்த விவசாயியைக் கைது
செய்ய வந்தபோது, ஜங்கல் சந்தால்
என்பவரால் வழிநடத்தப்பட்ட
மாவோயிஸ இயக்கத்தினர்கள் சிலர்
கூடி காவல்துறை குழுவை
மறைந்திருந்து தாக்கியது. அதில்
காவல்துறை ஆய்வாளர்
இறக்கப்படுகிறார். காவல்துறை
மீது தாக்குதல் நடத்திய
இயக்கத்தவர்களும் மற்றும்
விவசாயிகள் அனைவரும்
இணைந்து ஒரு இயக்கத்தைத்
தொடங்கி நக்சல்பாரி, மற்றும் அதன்
சுற்றியுள்ள உள்ளூர் பகுதியில்
வாழும் நிலவுடமை
முதலாளித்துவத்திற்கெதிரான
தங்களது தாக்குதலின் மூலம்
அழித்தல் பணியில் தங்களை
ஈடுபடுத்தி ஓர் இயக்க ரீதியான
போராட்டத்தை முன்னெடுத்துச்
சென்றார்கள் அதுதான்
மாவோயிஸத்தின் கிராம
தொழிலாள வர்க்கத்தின் உரிமை
மீட்டெடுப்பாக ஆயுதமேந்திய ஓர்
அறசீற்றமாக இந்திய மண்ணில்
விதையாக
அமையப்பெற்றது.இந்தியா
விலுள்ள மேற்கு வங்க மாநிலத்தின்
நக்சல்பாரி என்கிற கிராமத்தில்
தோன்றிய இப்புரட்சியினால்
இவர்கள் "நக்சல்பாரிகள்" என்றும்
மாவோயிஸத்தை
முன்னிருத்துவதன் காரணமாக
"மாவோயிஸ்ட்" இந்தியத்தில்
இடம்பெற்றிருந்தார்கள்.மேற்கு
வங்கத்தில் ஆரம்பமான இந்த புரட்சி
இந்தியாவின் அனைத்து
இடங்களிலும் பரவி மிகப்பெரும்
வலுபெற்றதொரு இயக்கமாக
வளர்ச்சி பெற்ற சூழலில்
ஆயுதமேந்திப் போராடுவது
குறித்து இந்தியத்தின் வேறுபட்ட
கோணங்களினால் தீவிரவாத
இயக்கமென முத்திரை
குத்தப்படுகிறது.
ஆயுதமேந்துவதை இந்தியம்
என்றுமே ஆதரிக்காதென்றாலும்
அவசியம் ஏற்படுகின்றபோது
ஆயுதமேந்துவதைத் தவிர
வேறுவழியில்லை என்பதே
மாவோயிஸ்டுகளின் வாதமாக
இருக்கிறது. இருதுருவமும்
நியாயப்படுத்துதலை நோக்கி
பயணிக்க இந்தியத்தின் வாதத்தையே
பெரும்பாலானோர்
ஏற்கத்தயாரானார்கள்.இந்திய
தேசமும் இந்திய தேசத்து
அரசமைப்புச் சட்டமும்
அகிம்ஸையின் மூலமாகத்தான்
இங்கே உறுவாக்கப்பட்டதெனும்
காரணத்தினால் ஆயுதமேந்துவது
இந்தியம் ஆதரிக்கவில்லை , அதே
வேளையில் மாவோயிஸ்ட்டுகளின்
புரட்சிகர போராட்டத்திலும்
நியாயங்கள் இருக்கத்தான்
செய்கிறது. அதுவும் இந்தியாவின்
உயிர்நாடியான விவசாயம்
உயிர்பெற்றெழும் கிராம
தொழிலாள வர்க்கப்
போராட்டத்தினையும் மலைவாழ்
மக்களின் உரிமை மீட்டெடுப்பிலும்
அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.ஆக
மாவோயிஸ்ட் என்பது
ஆயுதமேந்துகிறது என்கிற
ஒற்றைக் காரணத்தால் அவர்களை
தீவிரவாதிகளென்று ஒருகூட்டில்
அடைத்து விடவும் முடியாது ,
அவர்களின் மாவோயிஸ கொள்கை
கோட்பாடுகளும் நியாயமானதே
என்றாலும்அவர்கள் மீதும்
கரும்புள்ளிகள் இருக்கத்தான்
செய்கிறது.கடந்த வாரத்தில்
கோவை கருமத்தம்பட்டியில் காவல்
துறையினரால் கைது செய்யப்பட்ட
மாவோயிஸ்டுகளான ரூபேஷ்,
அவரது மனைவி சைனா, அனூப்,
கண்ணன், வீரமணி ஆகிய ஐந்து
பேர்களிடமிருந்து( இதில் ரூபேஷ்
மாவோயிஸ்டுகளின்
தென்னிந்தியா தலைவராக
அறியப்படுகிறார்)காவல்
துறையினர் எவ்வித
ஆயுதங்களையும்
கைப்பற்றவில்லை என்று
தெரிகிறது. இதன் மூலம்
மாவோயிஸ்ட்டுகள் தங்களை
ஆயுதமேந்துவதிலிருந்து
கொஞ்சம் விலகியிருக்கிறார்கள்
என்றே தெரிகின்ற வேளையில்
இந்திய கம்யூனிஸ்டுகள்
மாவோயிஸ்டுகளின் மீதான
தீவிரவாதக் கரையை
களைத்தெரியவேண்டிய
வழிவகைகளைச் செய்ய தங்களை
ஆயத்தப்படுத்திக்கொள்ள முன்வர
வேண்டிய காலச்சூழலை
பெற்றிருக்கிறார்கள் என்பது
புலனாகிறது.தொடர்ந்து
மாவோயிஸ்ட்டுகளின் மீது இந்தியம்
காட்டும் வெறுப்புணர்வினையும்
தீவிரவாதச் சாடலையும்
இந்தியாவிலுள்ள இரண்டு
கம்யூனிஸ்டுகளும் பொறுப்பேற்ற
கம்யூனிஸத்தை வென்றெடுக்கும்
தீர்வுகளை ஏற்படுத்தித் தர
வேண்டுமென்பதே கம்யூனிஸத்தை
ஏற்ற அனேக மக்களின்
எதிர்ப்பார்க்காகவும்
அரைகூவலாகவும் இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டும் (CPI) ,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் CPI(M),
தொடர்ந்து இந்தியாவில்
லெனினியப் பாதையான நகரத்து
தொழிலாள வர்க்கப் புரட்சிப்
பாதையை முன்னெடுப்பதா?
இல்லை மாவோவின் கிராம
தொழிலாள வர்க்கப் புரட்சிப்
பாதையை முன்னெடுப்பதா?
என்கிற சிக்கல் நீடிப்பதனால்தான்
இந்தியாவில் கார்ப்பரேட்
கம்பெனிகளின் முதலாளித்துவ
காங்ரஸ் மற்றும் பிஜெபி க்கு
ஆட்சியதிகாரத்தை
கொடுத்துவிட்டு இழப்பைத் தேடிக்
கொள்வதோடு மட்டுமல்லாம்
தீவிரவாத இயக்கமெனவும்
முத்திரைக் குத்திக் கொள்கிறது.
இந்தச் சிக்கலிலிருந்து இரு
கம்யூனிஸ்ட்டுகளும் மீள
வேண்டுமெனில் ஒரு புதிய
ஜனநாயக சமத்துவப் பாதையை
தேர்ந்தெடுத்தேயாக
வேண்டுமென்கிற கட்டாயத்தில்
இன்று கம்யூனிஸ்ட்டுகள்
தள்ளப்பட்டிருக்கிறார­­
்கள்.கம்யூனிஸத் தந்தை கார்ல்
மார்க்ஸின் கோட்பாடுகளோடு
லெனினிய நகரத்து
பாதையையும், மாவோவின்
கிராமத்துப் பாதையையும்
இம்மூன்றும் ஒன்றாக பயணிக்கும்
புதியதொரு பாதையை
கம்யூனிஸ்ட்டுகள் இன்றையச்
சூழலில் ஏற்படுத்தியாக வேண்டும்
. இதன் மூலம் மாவோயிஸ்ட்டுகள்
ஆயுதமேந்துவதிலிருந்து
தங்களை விடுவித்துக் கொண்டு
அவர்களும் இம்மண்ணில்
கம்யூனிஸ்ட்டுகளாக மக்களால்
அறியப்படுவார்கள். வெறும்
ஆயுதமேந்துவதை மட்டுமே
மாவோ செயல்படுத்தி சீனாவின்
கம்யூனிஸத்தை
வென்றெடுக்கவில்லை எனும்
புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும் .
கிராம தொழிலாள வர்க்கப்
புரட்சியில் தொடங்கி அதன் மேம்பட்ட
படிநிலைகளை நோக்கி
தொழிலாளர் ஒற்றுமை,
நிலபுரப்புகளை நாட்டு விட்டு
விரட்டுதல், தொழிற்புரட்சியின்
மூலம் பொருளாதார
மேம்படுத்துதல் ,
அனைத்திற்குமெலான நாட்டின்
அதிகாரத்தை கைப்பற்றி
மக்களுக்கு மக்களரசு
வழங்குதலென எல்லாவற்றையும்
மாவோ வென்றெடுக்க வெறும்
ஆயுதத்தை மட்டுமே
நம்பிவிடவில்லையெனும்
புரிதலோடு இந்தியாவில்
கம்யூனிஸத்தை வென்றெடுக்க
இந்திய கம்யூனிஸ்ட்டுகள்
மும்முனைப்போடு செயல்பட
வேண்டும் . அவ்வாறு
செயல்பட்டாலன்றி
மாவோயிஸ்டுகளின் மீதான
மக்களின் மாற்று கோணப்
பார்வையானது என்றுமே
மாறிடாது . இந்திய மண்
கம்யூனிஸத்தால் அழிந்தது என்கிற
பார்வையை நீக்கி இந்திய மண்
கம்யூனிஸத்தால் வளர்ந்தது எனும்
பார்வையை நோக்கி எதிர்காலத்தை
சவாலாக ஏற்று
முதலாளித்துவத்தை நமது
காலடியில் விழச் செய்திட
வேண்டும். மேலும்
மாவோயிஸ்டுகளை மனிதர்களாக
மக்கள் பார்க்கப் பட கம்யூனிஸ்ட்டுகள்
முழு மூச்சோடு இங்கே செயல்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்