"சீமான்"கள் இனி திருந்தப்போவதில்லை

வேதாளம் முருங்கை மரமேறிய
கதையாய் மீண்டும் பெரியாரை
தூற்றும் செயலில்
ஈடுபட்டிருக்கிறார்கள் நாம் தமிழர்
கட்சித் தோழர்கள். தலைமையானது
பெரியாரை வழிகாட்டியாக
ஏற்றுக்கொண்டிருக்கிறது அதனால்
பெரியாரை இழிபடுத்தும்
செயலில் யாரும் ஈடுபடுதல்
கூடாதென்று அறிக்கை
வெளியிடப்பட்டிருந்தும் .
அவ்வறிக்கையினை பரப்புரை
செய்த நிர்வாகிகளே மீண்டும்
எல்லைமீறியிருக்கிறார்கள் .
என்பது பார்ப்பானிய
இந்துத்துவத்தின் மீது அவர்கள்
வைத்துள்ள அசைக்கமுடியாத
பற்றினைத்தான்
பறைசாற்றுகிறது. புலித்தோல்
போர்த்திக்கொண்டு தமிழ்த்தேசிய
நரிகளாக வலம்வரும் நாம்தமிழர்
கட்சியானது இனியும்
திருந்துவதாக
தெரியவில்லை.ஆதலால் அவர்களின்
பார்ப்பானிய பற்றினை
எடுத்துகூறுதலே ஆகச்சிறந்ததாக
எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ்த்தேசியம் என்ற ஒன்றையும்
அத்தமிழ்த்தேசியத்தில் விடுதலைப்
புலிகள் தலைவர் மேதகு
பிரபாகரனையும்
உள்ளிழுத்து போலியாய்
புரட்சியெனும்
பெயரில் திராவிடத்தையும்
திராவிடப்பெரியாரையும்
கடுமையாக
விமர்ச்சித்து மக்களை
ஏமாற்றுவதில்
இந்த
நாம் தமிழர் இயக்க சீமான் தான்
எவ்வளவுபெரிய கெட்டிக்காரர்
அதைவிடவும் இவ்வியக்கத்தில்
இருக்கும்
மாநில மாவட்ட பொருப்பாளர்கள்
அனைவரும் படித்த வழக்கறிஞர்கள்.
எப்படி இவர்கள் இந்த வலையில்
சிக்கிக்கொண்டார்களோ
தெரியவில்லை ஆமாம்
எப்போதும் சமூக அக்கரையுடன்
அநீதிக்கெதிராக கரம்பிடிப்பதில்
வழக்கறிஞர்கள் தான்
முன்னிலை வகிப்பார்கள் என்ற
உண்மை சீமானுக்கு மட்டும்
தெரியாமலா போய்விடும்
ஈழவிடுதலை என்ற
ஆசை வார்த்தைகளில்
தன்னுடையதும் தன்னுடையதைச்
சார்ந்த
திரைத்துறையையும்
அத்திறைத்துறையை இன்று வரை
இலாபகரமாக
நடத்திக்கொண்டிருக்கும்
இந்துத்துவ
பார்ப்பானிய
கம்பெனிக்காரர்களைகயும்
சிறப்பான முறையில்
காப்பாற்றி வருபவரல்லவா சீமான்
பெயருக்கேற்றபடியே
சினிமாத்துறையை
தக்கவைத்துள்ள
சீமானல்லவா சீமான்
இவர்களின் முக்கிய எதிர்பான
திமுகவின் எதிர்ப்பு எதனால்
ஏற்படுகிறது என்பது
ஆய்வுசெய்தால்
உண்மை நிலை புலப்படும்
சீமானையும்
சீமான் உடன் இருப்பவர்களையும்
யார்
இயக்குகிறார்கள் இந்துத்துவ
பார்ப்பானியத்தை
பிடித்துக்கொண்டு
சினிமாத்துறையை
இன்றுவரையில்
தன்வசம் வைத்திருக்கும்
முதலாளிகள்
தானே இயக்குகிறார்கள் கடந்த
ஆட்சி காலத்தில் திமுக செய்த
குற்றங்கள்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு
ஈழப்படுகொலையில்
மவுனம் என பல
தவறுகளை செய்தது அதிலும்
முக்கியமாக
திரைத்துறையில் கலைஞர் மற்றும்
முரசொலிமாறனின் வாரிசுகளின்
ஆதிக்க
உள்நுழைவு என்பதைத்தான்
குறிப்பிடவேண்டும்
அந்தப்பெருந்தவறினால் இன்றைய
பாராளுமன்ற தேர்தல் வரையில்
அவ்வளவு பெரிய
கட்சி ஒரு இடத்திலும்
வரமுடியாமல்
அடிவாங்கிக்கொண்டிருக
்கிறது இந்த திமுக கட்சி செய்த
பெரும்
தவறே அதுவாகத்தான் இருக்கும்
(இன்று இந்திய அரசியலிலிருந்து
நம்
உள்ளூர் அரசியல் வரையில்
திரையுலக
ஆதிக்கம் தான்
கொடிக்கட்டி ஆட்சியை
நிர்ணயிக்கிறது)
தமிழ்நாட்டு நடிகர் நடிகைகளின்
ரசிகர்களிடம் ஒரு கவுன்சிலர்
பதவிக்கு உங்கள் வார்டில்
அடிப்படை பிரச்சனைக்காக
போராடி தீர்வு பெற்றுத்தந்த
ஒருவரும்
அவருக்கு போட்டியாக
உங்களுக்கு பிடித்த
நடிகனும் நின்றால்
யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என
கேட்டால்
உடனே பதில் வரும்
நடிகனுக்குத்தான்
என்
ஓட்டென்று (பொது விஷயமா
கேள்வி கேட்டாக்கூடஇவ்வளவு
வேகமா பதில்சொல்லமாட்டான்
)ஆக இன்றைய சூழலில்
அரசியலை யார்
அதிகார நாற்காலியில் அமர
வேண்டும்
என்று தீர்மானிப்பது
திரையுலகமும்
திரையுலகை ஆட்டிப்படைக்கும்
இந்துத்துவ பார்ப்பானியர்களும்
தான்
நிர்ணயிக்கிறார்கள் இதில்
முக்கியமான
இருவர் இன்றைய முதல்வர்
ஜெயலலிதாவும் அவரின் ஆலோசகர்
சோ.ராமசாமியும் அங்கம்
வகிக்கிறார்கள். ஆக இந்த
இந்துத்துவ
பார்ப்பானியர்களின் இயக்கவியலில்
ஒரு துண்டுச்சீட்டு நம்முடைய
திராவிட
எதிர்ப்பாளர் செந்தமிழன் என்ற
பட்டப்பெயருடைய சீமான் அவர்கள்
அவர்
தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க
பயன்படுத்திய ஆயுதமாக திமுக
வின் குற்றச்செயலில் ஒன்றான
ஈழப்படுகொலைக்கு
துணைபோனதைதான்
2ஜி யை கையிலெடுக்க
முடியாது ஏனெனில் இவர்களும்
இவர்கள்
சார்ந்த சினிமாத்துறையுமே
ஊழல்
பெருச்சாலிகள் என்பது
அவர்களுக்குத்
தெரியும்
கடந்த திமுக ஆட்சியில் கலைஞர்
வாரிசுகளின் திரையுலக
ஆதிக்கத்தை நாம்
கண்முன்னே பார்த்திருப்போம் அந்த
தவறில்
இருந்து திமுக பாராளுமன்ற
படுதோல்வி சந்தித்ததையும்
பார்த்திருப்போம். சன்பிக்கர்ஸ்,
ரெட்ஜெய்ன்ட், கிளவுட்நைன்,
சன்டிவி நெட்வொர்க், கலைஞர்
டிவி நெட்வொர்க், திரையில்
வாரிசுகளின்
கதாநாயகன் வேடம் என பட்டியல்
நீண்ட
திமுக ஆதிக்கத்தினால்
அன்று கதிகலங்கி போனார்கள்
திரையுலக
இந்துப்பார்ப்பனர்களும்,திரையுல
கார்ப்பரேட்
கம்பெனிகளிளும்
எடுத்துக்காட்டாக
ஐங்கரன்
நிக் ஆர்ட்ஸ் போன்ற கம்பெனிகள்
காணாமல்
போயின (இந்த தவறை திமுக
இனியும்
தோடர்ந்தால் நிச்சயம்
கட்சியே இருக்காது திமுக
வை பொருத்தவரையில்
திரையுலகில்
அரசியல்
தலையிடு எதிர்பே
தேவையானதாகவும்
அதற்கான விழிப்புணர்வும் செய்தல்
வேண்டும்) இதனால் கதிகலங்கி
போன
திரையுலக தயாரிப்பாளர்களும்
இயக்குனர்களும் நடிகர்
நடிகைகளும்
மிரண்டு போனார்கள்(இதை துக்ளக்
ஆசிரியர் இந்துபார்ப்பன
திரையுலக
காவலர்
சோ.ராமசாமியே அப்போது
சொல்லி அடிக்கடி புலம்புவார்)
இதனால் அன்றைய திரையுலகில்
அரசியல் ரீதியாக தமிழ்த்தேசிய
வாதியாக
காட்டிக்கொண்ட சீமானின்
உதவியை அவர்கள் நாடினார்கள்
இதற்கு பக்க பலமாக சிமானின்
திரைஇயக்குநர் துறையைச் சார்ந்த
அமீர்
கருபழனியப்பன் சேரன் மனிவண்ணன்
போன்றோரும் இன்னும் பலரும்
உறுதுணையாக
நின்று செயல்பட்டு திமுக
எதிர்ப்பை செயல்படுத்த
தொடங்கினார்கள்
இதற்கு சாதகமாக தமிழீழத்தையும்
தமீழீழத்தில் தமிழ்தேசியத்தையும்
புகுத்தி அதன் மூலம்
இனப்படுகொலை துரோகி
கலைஞர்
என்று பரப்புரை செய்ய
முடிவெடுத்து இந்துத்துவ
பார்ப்பானிய
முதலைகளின் உதவியுடன்
திராவிட
எதிர்ப்பு அரசியலை
முன்னெடுத்தார்கள்
சீமான் உண்மையில் திராவிட
எதிர்ப்பு காட்ட வேண்டுமெனில் அ
தி மு க
தலைவி ஜெயலலிதாவையும்
எதிர்க்க
வேண்டுமே அதையேன்
முன்னிருத்தவில்லை என்று
சீமானிடமே கேட்டுப்பாருங்கள்
பதில் வராது அப்படியே வந்தாலும்
பார்ப்பன ஆதரவு முறையில் பதில்
வரும்
ஏனெனில்
முன்னமே குறிப்பிட்டது போல்
திரையுல முக்கிய
புள்ளியானவர்கள்
சோ ராமசாமியும் ஜெயலலிதா
வும்
இவ்விரண்டு இந்துத்துவர்களிடம்
திரையுலகம் உள்ளதென்ற
உண்மை சீமானால் எப்படி
தைரியமாக
சொல்ல முடியும்
போலி தமிழ்தேசியத்தில்
தங்கள் சார்ந்த திரையுலகின்
கோடீஸ்வர
வாழ்க்கைக்காக
திராவிடத்தை தூற்றி பிழைப்பு
நடத்துகிறார்
சீமான் தமீழீழ விடுதலைக்காக நான்
சிறைக்கு சென்றேன்
என்று மூச்சிக்கு முன்னூறு
தடவை சொல்கின்றாரே சீமான்
அப்படியெனில் கொளத்தூர்
மணி வைகோ சுபவீ திருமாவளவன்
போன்றோர்
சிறைவாழ்க்கை
அனுபவிக்கவில்லையா அவர்கள்
திராவிடம் வளர்த்த
பெரியாரை
தூற்றிப்பேசுகிறார்களா என்ற
அனுபவ நுட்பத்தை நாம் தமிழர் கட்சி
பெற்றுவிடவில்லை என்பதை
உண்மையாக இருக்கிறது. இது
போதானென்று பார்ப்பன
இந்துத்துவ காவியுடைக்கு
பதிலாக பச்சையாடை
அணிகிறார்கள் பச்சைத் தமிழர்கள்
என்கிற பொய்ப்போர்வையில்,
முருகன் முப்பாட்டக் கடவுளென்று
பரப்புரை செய்துகொண்டு அதற்கு
வீரத் தமிழர் முண்ணனி எனக்கிற
பெயரும் வைத்துக்கொண்டு
மார்க்ஸிய, பெரியாரிய,
அம்பேத்கரிய கருத்தியலுக்கு
எதிராய் மக்களை திசைதிருப்பும்
பணியை முன்னெடுக்கிறார்கள்.
எம்மதத்தினையும் சாராது
இரண்டடியில் உலகை அளந்த
வள்ளுவனை ஏன் முப்பாட்டனென்று
முன்னெடுக்க முடியவில்லை?
அதற்கும் காரணமுண்டு
வள்ளுவனை விட பார்ப்பன
இந்துத்துவ முருகனே
இவர்களுக்கு அவசியமாகிறது
பார்ப்பானியத்தின் பல
பிரிவுகளில்
இதுவுமொன்றாதலால்,
வெளிப்படையாகவே இந்துத்துவ
அடிமைகளாக நாம்தமிழர்
கட்சியானது தெரிகிறது. எதற்கும்
எல்லையுண்டு என்பது போல
சீமானின் பார்ப்பன பற்று விரைவில்
வெளியுலகத்திற்கு தெரிய வரும்
அதுவரையில் மக்கள் நம்பட்டும் "
இலை மலர்ந்தால் ஈழம் மலருமென்று"
முற்போக்கு நடவடிக்கைகளுக்கு
எவ்வித எதிர்ப்பும்
ஏற்படக்கூடாதென்பதில்
திராவிடத்தையும்,
மார்க்ஸியத்தையும்,
அண்ணலையும் ஏற்றவர்கள் நாங்கள்
தெளிவாகவே இருக்கிறோம் ,
விரைவில் இந்தியத்தை விட்டு
விரட்டிடுவோம் இந்துத்துவத்தை'
அது நமக்கான கடமையாக
இருக்கிறது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்