ஏமாற்றும் "ADDICTION KILLER" விளம்பரங்கள்

கேடி பில்லா கில்லாடி ரங்கா என்றொரு திரைப்படத்தினை யாராலும் மறந்து விட
முடியாது , அப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் நம்மை வயிறு குலுங்க
சிரிக்கவைத்து விடும் அதேவேளையில் சிற்சில நகைச்சுவை காட்சிகள் நம்மை
சிந்திக்க வைத்தாலும் சிரிப்பை மட்டுமே நாம் அதற்கு செலுத்திவிடுகிறோம் .
ஒரு காட்சியில் அரசியல்வாதியானவர் மேடையில் மேசுகின்ற பொழுது ஏற்கனவே
தயார்நிலையில் ஏற்பாடு செய்திருந்த பார்வையாளர்களில் குறிப்பிட்ட சிலரின்
பெயரை மட்டும் அழைத்து சௌக்கியமா! என நலம் விசாரிப்பார் அதற்கு அந்தநபர்
" தலைவரே இன்னமும் என்னைய நியாபகம் வச்சிருக்கீகளே" என நெகிழ்வார்கள்,
முன்னேற்பாடான இந்நடவடிக்கை நகைச்சுவையை அவ்வளவு எளிதாய் கடந்துவிட
முடியாது. பொது அரசியல் மேடைகளில் தொடங்கி மோகமேற்றும் திரை விளம்பரங்கள்
வரையில் இந்நகைச்சுவை உணர்த்தும் நிகழ்வுகள்தான எதார்த்தமானதாக
இருக்கிறது.அந்த வகையில் இடம்பெற்ற விளம்பர யுக்தியானது மக்களை ஒரு
முட்டாளாகவே வைத்திருக்கிறது எனலாம். அதற்கான சிறு உதாரணம்
ராஜ்டிவி,பாலிமர்,மெக­ா, அந்தசேனல் இந்த சேனலென அனைத்து டிவி
சேனல்களிலும் ஒளிபரப்பப்படும் விளம்பரதார "ADDICTION KILLER" எனும்
நிகழ்ச்சியினை எடுத்துக்கொள்ளலாம். மதுவால்,புகைப்பழக்கத­்தால்,
மாற்றுவழி போதைப் பழக்கத்தால் அடிமையாகப்பட்டவர்கள்­ இவ்விளம்பர
மூலப்பொருளான மாத்திரைகளை உண்பதனால் முற்றிலுமாக குணமடைந்து போதை
பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள் என விளம்பரம்
பரப்பப்படுகிறது, இதற்கு தொகுப்பாளர்கள் சின்னத்திரை பிரபலங்களும்
வெள்ளித்திரை பிரபலங்களும் இருக்கிறார்கள் . அவர்களுக்கு வேண்டியது
வெறும் பணம்மட்டுந்தானே அதனால் அவர்கள் தொழிலான நடிப்பினைச் செவ்வனே
செய்கிறார்கள். உண்மையில் இந்த ADDICTION KILLER ஆல் எவ்விதப்
பயனுமில்லை, பணமிழப்பை மட்டுமே அதுசார்ந்திருக்கிறது­. இந்நிகழ்ச்சி
கண்டு அம்மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட பலர் தாங்கள்
ஏமாற்றப்பட்டுவிட்டோம­ெனும் புலம்பல்களை நிறைய வலம் வலம் வருகிறது.
மேற்குறிப்பிட்ட நகைச்சுவை காட்சியினை போலவே கொஞ்சமும் மாற்றமின்றி
அப்படியே தொகுத்துக் காட்டி மக்களை முட்டாளாக்குகின்றன இந்த விளம்பரதார
நிகழ்ச்சிகள்.
உண்மையில் போதை பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வதென்பது நம்முடைய
மனதால் மட்டுமே முடியும் வெறெந்த வழிவகை மருத்துவ மாத்திரைகளும் இதற்கு
தீர்வாகாது, சில நாட்களுக்கு வேண்டுமானால் மருந்து மாத்திரைகள் போதைப்
பழக்கத்தினை மறக்கடிச்செய்யும், மற்றபடி அவைகளால் எவ்வித பலனுமில்லை,
சிறுவயதில் பாட்டிக் கதைகளில் "தாயத்து" கதையினை நாம் கேட்டிருப்போம் ,
உழைக்காமலிருந்த ஒரு விவசாய்க்கு மந்திர வாதி தாயத்து கட்டியவுடன்
உழைத்து உயர்ந்திடுவான் " உழைக்கத் தூண்டியது தாயத்துதான் எனும்
நம்பிக்கையை கொண்டிருந்த விவசாய்க்கு "வியர்வையில் நணையும் தாயத்து
வெறும் மூட நம்பிக்கையென முடியும் கதையைப் போலவே அந்த தாயத்தின்
அவதாரங்களாக இன்று காட்சியளிக்கின்றன ADDICTION KILLER விளம்பரங்கள்.
இவற்றையல்லாம் நம்பி பணத்தை இழந்து நிற்காமல் " மனதை கட்டுப்படுத்தும்
"யோகாசனம்,தியானம்" போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாகவே போதைப்
பழக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும் . கூடுதலாக
இயற்கைச் சத்துக்களை உடம்புக்களித்து செம்மைபடுத்தும் பச்சைக்
காய்கறிகள், கீரைகள், மூலிகைத் தாவரங்களை உட்கொள்வதன் மூலம் நமது மனதின்
சிந்தனைகளை ஒரு கட்டுக்கோப்பாக அமைப்பதனை கற்றுக்கொண்டோமானால்
இம்மாதிரியான ADDICTION KILLER போலி விளம்பரங்களிலிருந்து­ எளிதாக நாம்
விடுதலை பெற்றுவிடலாம் . மனதின் ஓட்டம் எதுவோ அதுவாகவே நாம் மாறிவிடுவது
என்பது மானுட இயல்பு , ஆகவே மனதினை கட்டுப்படுத்தி போதைப்
பழக்கத்திலிருந்து இந்தச் சமூகம் விடுபட வேண்டும் என்பது அனைவரின்
எதிர்ப்பார்ப்பாகவும்­ இருக்கிறது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்