அவனுக்கு தாயான இயற்கையன்னை

அமைதியின்
அணிவகுப்பாய்
தெருக்களெங்கும்
தேங்கி கிடக்கும்
நிசப்த அலைகளில்
அவன் மெதுவாய்
அண்ணநடை
போடுகிறான்

அழைப்பிதழ்
யாருக்கும்
தரவில்லை
அவன்

இருந்தும் அவனது
இன்ப மயமான
வரவேற்பிற்கு
வந்து சேரும்
இளங்காற்றிற்கு
முகமலர்ந்து
விருந்தோம்பல்
புரிகிறான்

புரியாத புதிர்கள்
ஒவ்வொன்றாய்
புலப்படுகையில்
பூமித் தாயின்
மடியில்
உறங்கி விட
துடிக்கிறான்
அவன்

அனைத்தும்
அவனுக்கு
முன்னால்
அணிவகுத்து
நிற்க

புதியதொரு
பறவையின்
சிறகாய்
பறக்க துடிக்கிறான்
பாவங்கள்
எதுவும் செய்துவிட
தோன்றவில்லை
அவனுக்கு

அவனுக்கொரு
உலகம் அமைத்தான்
அவனும் அதிலொரு
குழந்தையாய்
தாலாட்டும் இயற்கையின்
மடியில்
தவழ்கிறான்

இப்போதே
தூங்கிவிட
தோன்றிய மனதின்மேல்
கோபம்
அவனுக்கு

அது பொய்க்கோபமென
தெரிந்தே
தேவதையாகிறான்
அவன்

அவனொரு ஆண்தேவதேதான்
இயற்கைத்
தாய்க்கு
இனியும் எதுவும்
தேவையில்லை

அவனொருவனே
போதுமென
போதிக்கும்
அடிமனதிற்கு
அடிமையாகித்தான்
போனதந்த
இயற்கை அன்னை,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்