அவளே என்னவள்

பூமிதொடும்
பனிதுளிகளை
ஒவ்வொன்றாக
சேகரித்தேன்,,,

அவளின் நினைவாக
விட்டுச் சென்ற
கூந்தல் முடியில் சேகரித்த பனிதுளிகளை கோர்த்துக் கொண்டே
இரவை நகர்த்தினேன்,,,

இனிதாய் விடிந்தது
காலை,,,

பனிமாலையை
பூக்களுக்கு விருந்தாக்குவதென விரும்பிய மனதில்
அரும்பியது
என்னவளின்
புன்னகை,,,

கதிரவனே
வருகையை தானாக
தாமதித்தான்,,,

என்
தவத்தாலல்ல
அவனும்
சொக்கித்தான்
போனான்
என்னவளின்
அழகில்,,,

காலைக்
கதரவனும்
அவளின்
கண்ணக்குழியகை கண்டுபிடித்து
விட்டானோ,,,

மயக்கம் தெளிந்து மயில்தோகை
விரித்த கதிரவனுக்கு முத்தத்தால்
முகமறைத்த
பூக்களோடு இணைந்திருந்தது என்னவளின் புன்னகையும்தான்,,,

தென்றலினூடே
தேனும் கலந்திருக்க ஆழிப்பேரலையில்
அவளின் மீதான
அன்பும் சேர்ந்தெழ,,,

மூச்சுக் காற்றோடு முக்கடலும்
சங்கமிப்பது போன்றதொரு நெருக்கத்தில்
பனியால் கோர்த்த
மாலைக்கு
பொன்மின்னும்
மென்மையான
கழுத்தில் அவளும் இடமளித்தாள்,,,

நான்கொண்ட
காதலை போலவே
பனிதுளிகளும்
அவள் நெஞ்சில்
கரைந்தோடிட
கண்டேன்,,,

சுடர்கொடிக்கு
சூடிய பனிதுளி
மலர்மாலை
போதுமென்கிறது
மணப்பந்தல்,,,

திங்களவனின்
சாட்சியாக இருமனம்
கலந்த திருமணம்
இனிதே
நடந்தேறியது,,,

தேனிலவுக்கான
தெவிட்டாத
காத்திருப்பு எங்களுக்குள்ளே
ஏனோ கசந்துதான்
போனது,,,

இனி எப்போது
வருமோ இரவென்று
யாழிசை மீட்டு
இருவருமே
இயற்கையோடு
இசைப்
பழகலானோம்,,,

பழங்களை பரிசாக
காதலும்
கைகளிலேந்தி
காத்திருக்கிறதங்கே,,,

இரவே! தாமதம்
செய்யாதே
ஊடலும்,கூடலும்
உன்னோடு
கலந்திருக்க
காற்றோடு நீயும்
காதல் புரிவாயாக
விரைவில்
வா!!! எனதிரவே,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்