05/04/2015

கோடையில் அம்மைநோய்

கோடை ஆரம்பமாகிவிட்டது கூடவே அதுவும் அம்மை நோயுடன் நம்மை வாட்ட
வருகிறது.கோடையை வரவேற்று விரும்புவர்கள் நாமில்லை என்பதை வரண்ட வானமும்
வரட்சி பூமியும் தெரிந்தே வைத்திருக்கிறது . வேறுவழியின்றி இந்த கோடை
காலத்தை நாம் கடந்துதான் போகவேண்டுமென்ற சூழலுக்குள்ளோம் . எங்கும்
வீற்றிருக்கும் அனல் காற்றுடன் கூடவே நமை தாக்கவருகின்றது "அம்மை" எனும்
நோய்.
தடுத்து நிறுத்துவது நமக்கு நல்லதுதானே,,, அம்மையில் பெரியம்மை,சின்னம்மை
, புட்லாம்மை(இவ்வம்மை வட்டார மொழிக்கேற்றவாரு பெயர்களை
தாங்கியிருக்கிறது) ஆகிய பல வகையான அம்மைகள் நம்மை தாக்க எப்போது
வாய்ப்பு ஏற்படுமோ என்று காத்துக்கொண்டிருக்கி­றது. குறிப்பாக குழந்தைகளை
குறிவைத்தே இவ்வம்மைகள் நோயாக பரவுகிறது. சுற்றுப்புர
தூய்மையின்மை,புழுதிய­ில் விளையாடுதல்,அதிக உஷ்ணத்தை உடலில்
ஏற்றுதல்,போதிய கவனமின்மை போன்ற காரணங்களால் எளிதாக மனித உடலில் கலந்து
சிறுசிறு கொப்பளங்களாக கிளம்பி அளவுக்கதிகமாகன
எரிச்சலையும்,உடலரிப்­பையும் ஏற்படுத்திவிடுகிறது இந்த அம்மை நோய்,நமது
மக்களோ எவ்வத அறிவும் பெற்றிடாமல் போதிய மருத்தவ அறிவின்மை காரணமாக
இந்நோயையும் கடவுளாக்கிவிடுகிறார்­கள். மருத்துவ மனைக்குச் சென்று உரிய
மருத்துவத்தை எடுப்பதிலோ அல்லது மருத்துவ ஆலோசனைகளை பெறுவதிலோ
அச்சப்படுகிறார்கள். ஆளும் அரசும் இதற்கேற்றார்போல் நோய்க்கு தேவையான
வசதிகளையும் ஏற்படுத்தாமல் காலம் தாழ்த்தி அம்மைநோய் தானே என்று
அலட்சியப்படுத்திவிடு­கிறது.சிலவகை அம்மை நோயானது
தொற்றுநோயாகவும்,சிலவ­கை அம்மை நோய்கள் தொற்றில் தோன்றாமலும் பரவுகிறது .
இதற்கான பாதுகாப்பு முறைகளை எடுத்துக்கொள்வது அவசியப்படுகிறது . கோடை
காலத்தில் அதிகம் பரவும் இந்நோய்க்காக பயப்படத் தேவையில்லை பாதுகாப்பாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் போதுமானது அவ்வாறு
முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாத சமயத்தில் உயிரிழப்பென்பது
தவிர்க்கமுடியாதொன்றா­க ஆகிவிடுகிறது. அம்மை நோயால்
பாதிக்கப்பட்டோருக்கு­ உடனடியாக மருத்துவ உதவிகளையும் ஆலோசனைகளையும்
வழங்க வேண்டுமேயன்றி கோவிலில் அவர்களை குடிவைத்தல்,கோவில் சுற்றுதல்
என்பதை தவிர்க்கப்பட வேண்டும். நம்பிக்கையின் பால் அவர்களின் நலனில்
அக்கரை கொண்டால் மருத்துவ ஆலோசனைகளை ஏற்று அதன்பின் தங்களின் நம்பிக்கையை
நிறைவேற்றிக்கொள்ளுங்­கள். அம்மையால் பாதிக்கப்பட்டோர் மற்றும்
அவ்வம்மைநோயானது பரவாமலிருக்க முன்னெச்சரிக்கையாக
செயல்படவேண்டுமெனில்.­அளவுக்கு அதிகமான உடல் உஷ்ணத்தை அளிக்கும்
உணவுப்பொருட்களை தவிர்த்துவிட வேண்டும் இதில் கோழி ,ஆடு போன்ற இறைச்சி
உணவுகளும் அடங்கும்,மேலும் உடலுக்கு குளிர்ச்சியான
பழவகைகள்,கேழ்வரகுகூழ­்,இளநீர்,வெள்ளரி,மாத­ுளமென உட்கொள்வதன் மூலமாகவும்
உண்ணும் உணவினை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் அம்மை நோய் வராமல்
தவிர்க்கலாம். குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை குறைத்து கொள்ளவும் ,மணல்
புழுதியிலோ மற்ற புழுதிகளிலோ குழந்தைகள் விளையாடுவதை தடுத்தும்
பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோடை
என்றவுடன் மனதிலெழும் குளிர்பானங்கள் மற்றும் குளிர்சாதன பட்டி
குளிருட்டு குடிநீரினை பருகுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் இவைகள் அதிகம்
நமது உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்திவிடும். முடிந்தால் பானைநீரை பருகிடுதல்
நல்லது. வாரத்தில் ஒருமுறையேனும் எண்ணெய் குளியலும்,வேப்பங்கொழ­ுந்தினை
அறைத்து உண்பதும் அம்மைநோய் வராமல் தடுத்திடும். இந்த முன்னேச்சரிக்கை
நடவடிக்கைகளை நாம் இக்கோடை காலத்தில் மேற்கொண்டோமானால் அம்மைநோயினை
முழுமையாக விரட்டியடித்துவிடலாம­் .முக்கியமாக மருத்துவத்தின் ஆலோசனைகளை
மறந்துவிடாமல் மக்கள் ஒத்துழைப்பு தந்திடுதல் அவசியம். அரசும்
இக்கோடைகாலத்து நோய்க்கான தடுப்புமுறைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
வருமுன் காப்போம் அம்மைநோயினை நாமும் விரட்டிடுவோம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

ஏது இங்கே மனிதத்தன்மை

Suba Veerapandian ஐயாவின் "கருப்பு வெள்ளை " யில் ஒன்று சொல்வார்... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்லாதீர்கள்...