மத்திய அமைச்சருக்கே இந்ந நிலையெனில் பொதுமக்களுக்கு?

நமது நினைவுகளை புதுப்பித்துக்கொள்வு­ம் வரும் சந்ததிப் பெருக்கத்தில்
அவர்கள் நம்மை நினைவுக்குள் அடக்கி வைப்பதற்கும் அறிவியல் கண்டெடுத்த
மிகச் சிறந்த சாதனமாக விளங்குகிறது கேமராக்கள் அதன் வளர்ச்சியானது
தற்போது வெப்கேம் மற்றும் சுயமி யெனும் செல்ஃபி வரையில்
வளர்ந்திருக்கிறதென்ப­தை நாம் கண்முண்ணே காண்கின்றோம் . அதேவேளையில் எந்த
அளவிற்கு அறிவியலின் கண்டுபிடிப்பு நன்மை பயக்கிறதோ அதைவிட அதிகமாக
விஷமங்களை ஏற்படுத்துகிறது சில விஷமியகளால்,, இந்த விஷமங்கள் குறிப்பாக
பெண்ணினத்தை குறிவைத்தே தாக்கப்படுகிறதெனும் போதுதான் நாம் மனிதனா இல்லை
மிருகமா எனச் சந்தேகம் எழுகிறது. சமூகத்தை சீரழிக்கும் இதுபோன்றச்
செயல்களை கண்டித்து சட்டமியற்ற நாமோ அரசியலாளர்களை உறுவாக்கினால்
அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டு பாராளுமன்றத்திலேயே அவ்விஷம காணொளியை
பார்த்து அவர்களும் ரசிக்கிறார்கள் இதுதான் இன்றைய இந்தியத்தின் நிலை.
இச் சமூக அவல நிலை நம்மை விட வேகமாக வளர்த்தெடுக்கப்படுகி­றது.சமீப
காலங்களில் வாட்ஸ்அப் எனும் செய்திப்பகிர் மென்பொருளே இதற்காகத்தான்
கண்டுபிடிக்கப்பட்டாத­ மாபெரும் பிம்பமாக வளர்ந்திருக்கிறது. சமூகத்து
பெண்ணின மக்கள் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலிலும் இதே நிலைதான்
காணப்படுகிறது. பெரும் சர்ச்சைக்குரிய அன்சிகா மத்வானே எனும் நடிகையின்
குளியல் காட்சியை படமெடுத்து வெளிவிடுகின்ற வரையில் இவ்வலம்
உறுவாகியிருக்கிறது அவருக்கு முந்தையதான பல நடிகைகளையும் இந்த
விஷமியங்கள் விட்டுவைக்கவில்லை . காலத்தின் கொடுமை இந்த அவலத்திற்கு
தற்போது ஒரு அமைச்சரே சிக்கித் தவிப்பதுதான். மத்திய அமைச்சர் ஸ்மிருதி
இரானி கோவாவிலிருக்கும் ஃபேப்இண்டியா துணிக்கடையின் ஆடை மாற்றும் அறையில்
ரகசிய காமிரா இருப்பதைக் கண்டுபிடித்த செய்தி இந்தியாவில் தனி மனித
அந்தரங்கம் என்பது எந்த அளவுக்குஆபத்திலிருக்­கிறது என்பதை
உணர்த்துகிறது. இதுபோன்று பல நிகழ்வுகள் நமக்குத் தெரியாமல் நம்மை யாரோ
சிலர் படமெடுத்துக்கொண்டுதா­ன் இருக்கிறார்கள். கழிவறையில் தொடங்கி
கல்லறை வரையிலும் பெண்ணினத்திற்கெதிரான­ இம்மாதிரான அந்தரங்கம்
படமெடுக்கப்படுவது மிகவும் வேதனையான ஈனச் செயலாக இந்த விஷமச் சமூகம்
செய்து கொண்டிருக்கிறது.
இங்கே கல்லறை வரையில் குறிப்பிட்டதற்கான காரணம் உண்டு .இந்த ஈனப்பிறவிகள்
கல்லறைப் பிணங்களையும் தோண்டியெடுத்து காணொளி எடுத்து காசு
பார்த்துவிடுகிறது. தீர்வுதான் என்ன என்று பார்த்தோமானால் பாராளுமன்றமும்
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. நமக்கு நாமே தான் இதற்குத் தீர்வினை தேட
வேண்டும் . "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்"என்று எழுதிவைத்தானே
தமிழன் அதுதான் நமக்கான தீர்வாக அமைகிறது.தனிமனித அந்தரங்கத்தை
கேள்விக்குறியாக்குவோ­ரை பொதுமக்களாகியே நாமே முன்னின்று முறியடிப்பதைத்
தவிர நமக்கு வேறுவழியில்லை.குறிப்­பாக இவ்விஷயத்தில் பெரும்பாலும்
பாதிக்கப்படுவது பெண்களாதலால் பெண்களுக்கு இவற்றுக்கெதிரான விழிப்புணர்வு
பிரசாரத்தை நாம் முன்னிலை படுத்த கடமைபட்டுள்ளோம். எங்கும் எதிலும்
சர்வசாதாரணமாக கண்ணுக்குப் பலப்படாத ரகசிய கேமராக்கள்
பதியப்பட்டிருக்கலாம்­ அதற்காகவேனும் வேற்று இடங்களில் உடைகளை மாற்றுதோ
அல்லது உடைகளைக் கலைவதோ தவிர்த்து விடுதல் நல்லது. அவரவர் மனங்களில்
படிந்திருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டுமெனில் முதலில் நமக்கு நாமே சுய
ஒழுக்கம் பெற்றிட வேண்டும் அவ்வாறு அமைந்தால் மட்டுமே இம்மாதிரியான
குற்றச்செயல்களை நம்மால் முழுமையாக ஒழித்து ஒரு நல்ல சமூகத்தை
வளர்த்தெடுக்க முடியும் . இனியேனும் இக்குற்றச் செயல்களுக்களுக்கு
முன்னுரிமையளித்து அரசியளர்கள் சட்டத் தீர்வினை கொண்டு வர முன்வர
வேண்டும் .எங்கே பார்த்தாலும் பெருகிக்கொண்டிருக்கி­ற தனிமனித அந்தரங்க
உரிமை மீறல்கள்களுக்கு உங்களின் சந்ததிகளும் ஒருநாள் பாதிக்கப்படும்
.அதுவரையில் காத்திருக்காமல் காலம் தாழ்த்தாமல் அரசானது மிகவிரைவில்
புதுச்சட்டத்தையோ அல்லது ஏற்கனவே இருக்கும் சைபர் கிரைம் சட்டத்தைப்
மறுசீராய்வு செய்யவோ தயவுசெய்து முன்வாருங்கள்.

Comments

  1. Living as per Hindu dharma is the only way out

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்