ரங்கராஜ பாண்டேவின் கேள்வியும், ஆசிரியரின் பதிலும்

ரங்கராஜ பாண்டேவின் கேள்வியும், ஆசிரியரின் பதிலும்

கேள்விக்கென்ன பதிலென்று தலைப்பை பெரிதாக போட்டாலும் கேள்விகளை மட்டுமே
அடுக்கிக்கொண்டு பதிலைச் சொல்ல விடமாட்டார்கள் பாண்டே குழுமங்களென்பது
நாம் அனைவருக்கும் தெரியும் அந்தளவிலான அவர்களின் இந்துத்துவ பற்றும்
நமக்குத் தெரியும்.சமீபத்தில் வெளியான தோழர் வீரமணி அவர்களின் பேட்டியும்
இந்தவகையில் தான் இருக்குமென்பது ஏற்கனவே எதிர்பார்த்தது. ஆனால்
மன்னித்துவிடங்கள் திராவிடத் தோழர்களே வீரமணியவர்கள் சரியாக பதிலை
சொல்லைவில்லை,என்னதான­் பாண்டே கத்தினாலும் அவரின் வாயடைக்கும் படியான
எதிர்பார்த்த பதில் வீரமணி அவர்களிடமிருந்து வரவில்லை என்பதே ஆதங்கத்தை
ஏற்படுத்துகிறது. எதிர்பார்த்த பதில் இதுதான். மற்ற மதத்தினை
விமர்சிக்கவில்லை என கூறிடுகையில் தெளிவுபடுத்த வேண்டியது. முதலில்
மதப்பிரிவினைக்கும் மத வகுப்புப்(சாதியம்)பி­ரிவினைக்கும் வேறுபாட்டை
உணர்த்திட வேண்டும் .கிருஸ்து,முஸ்லீமில்­ இருப்பது
மதப்பிரிவினை,இந்துத்­துவத்தில் இருப்பது மதப்பிரிவினையின் கூடவே
மதவகுப்புப்(சாதியம்)­பிரிவினையும் சேர்த்துக்கொண்டுச் செயல்படுகிறது .
இது வெறும் சைவ வைஷ்ணவ சண்டையை மூட்டிவிட்டு அதையே மத எதற்ப்பென
காட்டுவோருக்குத் தெரியவில்லை அதனால் தான் இந்தப் பிரிவினைப்புப்
பட்டியிலில் பாண்டே சாதியத்தை ஒன்றிணைக்கிறார் . இரண்டிற்கும்
மிகப்பெரியவளவில் வேறுபாடுண்டு இரண்டையும் எப்போதும் ஒட்டிவிட முடியாது.
அதேபோல இந்து அல்லாத மதத்தில் அப்படி மதவகுப்புப் பிரிவினையை
கொண்டிருக்குமானால் அதுவும் இந்துமதத்தின் கிளைமதமே ,ஏனெனில் சாதியத்தின்
மூலமான மனுதர்ம வர்ணாசிரம படிநிலையை அவர்களும் ஏற்றவர்களாக
இருக்கிறார்கள் இது விளங்கவேண்டுமெனில் அண்ணல் அம்பேத்கரின் புத்த மத
மாற்றம் ஏன்? என்பதற்கான அண்ணலின் பதில்கள் தெளிவாக விளக்கும்.மேலும் 87
சதவிகிதமெல்லாம் இங்கேச் சொல்ல வேண்டியதில்லை அப்படி கட்டாயமெனில்
அதையும் கூறிவிட்டு எந்த மதத்திலேனும் மூன்று சதவிகித சிறுபான்மை மக்கள்
97 சதவிகித பெரும்பான்மை மக்களை அடிமை படுத்தி அந்த 97 சதவிகித
மக்களையும் தூண்டிவிட்டு அவர்களுக்குள்ளேயே வகுப்புப் பிரிவினையினை
ஏற்படுத்தி அதன் மூலம் மதத்தை வளர்த்தெடுத்து
கொழுத்திருக்கிறார்கள­ா?என்று கேட்டிருக்க வேண்டும் ஒட்டுமொத்த
இந்தியத்தையே ஆட்டிப்படைப்பது அந்த மூன்று சதவிகித மக்கள் தானே
அப்படியிருக்கையில் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்தே
தொடங்கினால் மட்டுமே இந்த 97 சதவிகித மக்கள் தானாக சாதியத்திலிருத்து
மற்றவரை அடிமை படுத்துவதை நிறுத்திக்கொள்வார்கள­்.மற்ற மதங்களான
கிருஸ்துவத்தில் ஆர்.சி,பெந்தகோஸ்த்,இ­ஸ்லாத்தில் சன்னி,ஷியா, போன்ற
பிரிவுகள் இருந்தாலும் மோதல்கள் என வருகின்றபோது பெரும்பான்மைப்
பிரிவினர் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்­ ஆனால்
இந்துத்துவத்தின் சைவ ,வைஷ்ணவ பிரிவானது ஓர் இணக்கத்தின் அடையாளமாகக்
கொண்டு இருபிரிவினரும் ஒன்றினைந்து சாதிய வருணாசிரம மனுதர்மத்தின்
படியிலான வகுப்புப்பிரிவினரை மட்டுமே அடக்கி ஒடுக்குகிறார்கள். இதில்
பெரும்பாதிப்புகளுக்க­ுள்ளாவது தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களேயாகும்.
எந்தளவிற்கு இங்கே தலித்திய ஒடுக்கப்பட்ட மக்கள் இந்துத்துவத்தால்
பாதிக்கப்படுகிறார்கள­ோ அல்லது வன்முறைக்கு இரையாகிறார்களோ அதே அளவிற்கு
இஸ்லாம்,கிருஸ்த்துவ சிறுபான்மை மதத்தவர்களும்
பாதிப்புக்குள்ளாக்கப­்படுகிறார்கள் என்பதே நிதர்சனம் . அதற்காக
அவர்களின் மூடநம்பிக்கை மதபற்றுகளை என்றும் திராவிடம் ஆதரித்ததாக எங்கும்
சொல்லிவிட முடியாது . 1947ம் ஆண்டிற்கு முந்தைய பாகிஸ்தான் பிரிவினையின்
போது ஒட்டுமொத்த இந்தியத்திலும் ஏற்பட்ட மதமோதல்களில் சுமார் ஐம்பது
லட்சம் இந்தியர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு இதில் அதிகம்
பாதிப்புக்குள்ளாது இஸ்லாம் கிருஸ்த்துவ சிறுபான்மை மக்களேயாகும் அதே
வேளையில் இந்நிகழ்வுகளில் துளியளவுகூட தமிழகம் பாதிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்த இந்தியத்திற்கே வன்முறைக்கானச் சவாலாக தமிழகம் இருந்தது
இதற்கான சூழலை இங்கே உறுவாக்கியவர்கள் யாரென்பதை ரங்கராஜ பாண்டே அவர்கள்
குறிப்பிடத்தயாரா?
மேலும் இதுபோன்ற பல விவாதங்களை தன் விளக்கங்கள் மூலம் தோழர்
வீரமணியவர்கள் முன்வைத்திருக்கலாம். என்பதே என் ஆதங்கம்.

Comments

 1. இந்த சுட்டியைப் படியுங்கள் தோழர் https://www.facebook.com/oviyathamizh

  ReplyDelete
 2. நிச்சயம் படிக்கிறேன் தோழர்!

  ReplyDelete
 3. Anonymous4/4/15

  Veeramani interested only for Periyar property ..... he completed changed last 25 yrs......
  similar to madurai atheenam he is keeping increasing and enjoying the periyar properties...like business man nowadays.....for protection he always support ruling party for a shield and avoid raid......

  as a original DK person (poor man) not getting any benefit apart from News Paper and Magazine....

  Seshan/Dubai (Ex-DK family from Harur- 30 yrs back)

  ReplyDelete
 4. Anonymous4/4/15

  Veeramani interested only for Periyar property ..... he completely changed last 25 yrs......
  similar to madurai atheenam he is keeping increasing and enjoying the periyar properties...like business man nowadays.....for protection he always support ruling party for a shield and avoid raid......

  as a original DK person (poor man) not getting any benefit apart from News Paper and Magazine....

  Seshan/Dubai (Ex-DK family from Harur- 30 yrs back)

  ReplyDelete
 5. Media is the fourth pillar of democracy. People like Rangaraj Pandey are living examples of excellent journalism. He asks tough and introspective questions without any bias. He does bring in confused feelings of his Tamil identity etc which will create conflict of interest.
  Please encourage people like him.
  Whereas veeramani is just political merchant.
  Pandey was first journalist who took steps to interview Modi from tamilnadu and helped to bring our Modi's great personality to us

  ReplyDelete
 6. The RSS and BJP have recruited people like Taruada/Taru to engage in bjp propaganda. Be aware of this person!

  ReplyDelete
 7. There is huge modiphobia and namonia here in some blogs. Those people like. KM, Raman, muthunila, senthalal sethu, unmaigal, tamiloviya, kulali, vasagan, vinavu, etc don’t have guts to expose or write about atrocities of ayya or amma.
  Even a local conusellor is filthy augly animal corrupt and castie. Whenever some awareness comes, these Tamil racist bloggers and Tamil politicians will bring in issue of foreign citizens kissues as Indian issue.
  They will talk from Sri Lanka to America but They couldn’t even change the next door coorrupt and caste Tamil party volunteer and fans in their own street.
  Whereas Modi trying a grassroots change from the streeets, using clean India, jandhan, no-bribe moment etc. You have to accept this reality. Period.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்