BJP நாராயணா வாந்திகள் பெண்ணடிமை பேசுகிறது

இந்தியாவில் வளர்ந்து விட்ட இயக்கமான ஆர் எஸ் எஸும் அதனை வளர்த்தெடுக்க
துடிக்கும் பிஜெபி இந்துத்துவமும்(ஆம் இரண்டுமே வளர்ச்சியை நோக்கி
எப்போதோ முன்னேறிக்கொண்டிருக்­கிறது) தொடர்ந்து பெண்ணினம் மீதான
காழ்ப்புணர்ச்சியினை கக்கிக்கொண்டிருக்கிற­து. ஏற்கனவே சங்கராச்சாரியார்
எனும் இந்துத்துவ மதவெறியரின்

http://arumbithazh.blogspot.in/2015/03/blog-post_65.html

கருத்துக்களை போலவே அதே பாணியில் கொஞ்சமும் பிசகாமல் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி கட்சியின் மூத்த பொருப்பாளர் நாராயணன் அவர்கள்
இவ்வாறு பேசியுள்ளார்.

"மேக்கப்போடும் பெண்கள் விபச்சாரிகள்"

இதற்கான எதிர்வினையாற்ற கூட சக்தியில்லாமல் முழுதாய் பெண்ணினம்
இந்துத்துவத்திற்கு அடிமையாகிப்போனதுதான்­ வேதனை, இவற்றையெல்லாம் தாண்டி
மத்தியல் பல பெண்களும் தமிழகத்தில் தமிழிசையும் வானதி சீனிவாசன்
அவர்களும் இதே கட்சியில் அங்கம் வகிக்கும் பெண்ணினத் தலைவர்கள் என்பது
வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஒருகால் அவர்களும் நாராயணனின் கருத்திற்கு
உடன்பட்டுவிட்டார்கள்­ போலும்,
இன்றைய காலச் சூழலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் "அழகு"க்கு
முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது,, ஏனிந்த காழ்ப்புணர்வு
கருத்துக்களை இந்த இந்துத்துவ வெறியர்கள் திணிக்கிறார்கள் என்று
பார்த்தோமானால் , பிற்போக்குத் தனங்களிலிருந்தும் , பெண்ணடிமைத்
தனத்திலிருந்தும், இந்துத்துவ பார்ப்பானிய மூட நம்பிக்கையிலிருந்தும­்
இன்றைய பெண்கள் தங்களை விடுவித்துக்கொண்டு பெண்ணுரிமையின்பால் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டு சமூகத்தில் தங்களின் தலைநிமிர்வை மெய்பித்த வண்ணம்
தங்களை முற்போக்குச் சிந்தனைகளால் முழுமையாய்
ஈடுபடுத்திக்கொண்டிரு­க்கிறார்கள் என்பதே இந்துத்துவ வெறியர்களுக்கு
அதிர்ச்சியான செய்தியாக அமைந்து விடுகிறது . காரணம் பெண்ணடிமைத்
தனத்திலிருந்துதான் தங்களின் இந்துமதத்தினையும்,
பார்ப்பனத்தன்மையினைய­ும் வளர்த்தெடுக்க முடியுமென்பது ஆர் எஸ்
எஸுக்கும், பிஜெபிக்கும் நன்றாகவே தெரியும். இதன் காரணமாகத்தான் மீண்டும்
மீண்டும் பெண்ணடிமைத் தனத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதற்காக
பெண்ணுரிமையில் இந்துத்துவர்கள் கைவைக்கிறார்கள். அதுவும் குறித்தான
கருத்துக்களையே அவர்கள் முன்வைப்பதன் காரணம் மீண்டும் தேவதாசி முறையை
இத்தமிழ்மண்ணில் பரப்பும் ஈனச்செயலில் இந்துத்துவர்கள் ஈடுபடுகிறார்கள்.
எதற்கும் எல்லாவற்றிற்கும் சவால் விடுமளவுக்கு இன்றைய பெண்களின் நிலை
(குறைந்தபட்சம்தான்) உயர்ந்திருக்கிறது அப்படியிருக்க அலுவலகப்
பெண்களும், வீட்டுப்பெண்களும் மேக்கப் போட்டுக்கொள்வதில் இவர்களுக்கு
என்ன பொறாமை வேண்டுமானால் ஆணாதிக்கர்களான இந்துத்துவர்கள் மேக்கப்
போடாமல் வலம் வாருங்களேன். ஒரு சாதாரண விவாத நிகழ்சிகளுக்கே தன்னை
அழகுபடுத்திக்கொண்டு முகமுழுக்க முகப்பூச்சுனை அப்பிக்கொண்டு அழகான
பேண்ட் ,சட்டையில் தன்னை ஜொலிப்பு மிகுந்தவனாகவும், இந்துத்தவ
பற்றாளராகவும் பல்லிளித்துக்கொண்டு பேட்டிமளிக்கும் நாராயணன் எவ்வித
அனுசரிப்பில்லாமல் ஊடகத்தில் வலம் வரத் தயாரா என்றால் ? அதுயெப்படி நான்
ஆண்பிள்ளையாயிற்றே! என்கிற ஆணாதிக்க புத்திதான் பதிலாக வரும்.
இவற்றுக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு தங்களை பலியிடும் ஆடாக
மனதிலேற்றிக்கொண்டு இந்துத்துவர்களின் அடிமையாக தங்களை உருமாற்றிக்கொண்டு
தந்தைபெரியாரின் புகைப்படத்தினை செருப்பாலடிப்பதும், மேற்குறிய மேக்கப்
சர்ச்சையினை நியாயப்படுத்திக்கொண்­டும் சில பெண்ணினம் வலம் வரத்தான்
செய்கிறார்கள் . இப்போதேனும் அவர்கள் தங்களை அடிமைபடுத்துவது யார்?
தங்களுக்கு தேவதாசியெனும் முத்திறை குத்துவதுயார்? தங்களுக்கு கல்வி
மறுத்தவர்கள் யாரென்பதை அடையாளங்கொண்டு இந்துத்துவ பார்ப்பானிய
பிற்போக்குச் சிந்தனையிலிருந்து விடுவித்துக்கொண்டு முற்போக்குச்
சிந்தனையில் தமிழினத்தை வளம்பெறச் செய்திட முன்வர வேண்டுமென்பதே அனேக
முற்போக்குச் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்