கருப்புச் ச(சா)ட்டையடி வேண்டுமா எச் ராஜாக்களே

கருப்புச் ச(சா)ட்டை

ஆண்டுகள் முழுதாய்
குடியில் மூழ்கிகிடந்து
முளைக்கும் ஒருநாள்
போலிமுக்திக்கு

மண்டியிடும்
ஆடுகளின்
கூட்டங்களை போல
அவனும்
கடவுளானான்

அவனைஅவனே
சாமியென்றான்
அவனுடுத்தும்
அதீத அய்யப்ப பக்தியின்பால்
அணிந்திருக்கும்
கருப்புச்சட்டைக்கு

ஒத்தூதி ஓமம்
வளர்க்கும் ஆரியத்தை
அழிக்க வந்த
கருப்புச் சட்டையொன்றும்
சட்டையல்ல
மூடர்களை
விரட்டவந்த
சாட்டையது

அடிவாங்க முடியாமல்
சாதியத்தை அவிழ்த்துவிடும்
ஆரிய பார்ப்பானியமே
வருகிறதுபார்
உங்களுக்கான
எச்சரிக்கை

ஆரிய இந்துத்துவம்
எறியும்
எலும்புத் துண்டுகளை
பவ்யமாக கவ்விக்கொண்டு
வாலாட்டும் உங்களின்
வாலை வெட்டத்துணியும்
போர்வாள்தான்
நாங்களணியும்
கருப்புச்சட்டை

சாதியத்தை
மதவெறி மூர்க்கத்தை
முழுமூச்சாய்
எதிர்க்கவந்த
ஏகாந்த உடையணிய
எங்களுக்கேதும்
தடையிருந்தால்

தன்னுயிரை
துட்சமென எண்ணி
காத்திடுவோம்
கருப்புச்
ச(சா)ட்டையை

எத்தனை
எச் ராஜாக்கள்
வந்தாலும்
எங்களின் கருப்புச் சட்டையை
கைபற்றிட முடியாது,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்