இளைஞர்களை குறி வைக்கும் நில கையகச் சட்டம்

மத்தியில் ஆளும் இந்துத்துவ
பார்ப்பானிய மோடி அரசின் பல்வேறு
பொய்ப்பிரச்சாரங்களில­்
இதுவும் ஒன்று . என்னவென்றால் "நிலம்
கையகப்படுத்துதல் சட்டமானது அமலுக்கு
வந்தால் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்"
நாக்கூசாமல் எப்படி இவர்களால் பொய்யை
பரப்ப முடிகிறது என ஆச்சர்ப்பட
தேவையில்லை ஏனெனில் பொய்யை
உண்மையெனச் சொல்லியே ஆட்சி
பிடித்தவர்கள்தானே ஆளும்
ஆர்எஸ்எஸ்ஸான பிஜெபி. உண்மையில்
நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின்
மூலமாக பயனடைவது முதலாளித்தவ
கார்ப்பரேட் கம்பெனிகளும் அதுபோடும்
எலும்புத்துண்டுகளை கவ்வும் அடிமை
அரசுகளேயாகும் . இந்நில கையக
சட்டத்தினை பற்றி அனுபவத்தின்
வாயிலாக எழுதிவிட வேண்டுமென்று
எண்ணம் தோன்றும் போதெல்லாம் எனக்கு
நானே தடையாக இருந்தேன் காரணம்
இப்பதிவும் எப்படியும் கவனிக்கப்படாத
சமூகப் பதிவாகவே கடந்து செல்லுமென
தெரிந்து போனதால் ,,, ஆனால் என்றேனும்
ஒருநாள் இவ்வனுபவம் பேசுமென்கிற
நம்பிக்கையில் எழுதும் தருணத்தை
கட்டாயப்படுத்தி எனக்குள்ளே
ஏற்படுத்துக்கொண்டேன்.நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தின்
முதற்செயல்பாடு மக்களின் அத்யாவசிய
தேவைகளுக்காக அரசோ அல்லது அரசும்
தனியாரும் இணைந்த பொதுத்துறை
நிறுவனங்களோ நலத்திட்ட பணிகளுக்காக
மக்களிடம் நிலம் கோரப்பட்டு அந்நிலத்தை
பயன்படுத்தும் முழு அதிகாரத்தை அரசோ
அல்லது பொதுத்துறை நிறுவனங்களோ
பெரும் நிலவுரிமையாகும் . உதாரணமாக
சாலைகள் அமைத்தல் தொழிற்சாலைகள்
அமைத்தல்,போன்ற இன்னபிற
பணிகளுக்காக அரசே நிலம்கோரும்
உரிமையை எடுத்துரைக்கும் சட்டம் நிலம்
கையகச் சட்டம்.
மேற்பார்வைக்கு நல்லதொரு சட்டமாக
திரிபுநிலை பெற்றிருக்கும்
இச்சட்டத்தில் மக்களின் மீதான ஆதிக்க
ஒடுக்குமுறைகள் எண்ணிலடங்காதவாற
ு எழுதப்பட்டும் திருத்தப்பட்டும்
திணிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட
துபோல இச்சட்டத்தினை செயல்படுத்த
முதலாளித்துவ ஏகாதிபத்திய
கார்ப்பரேட்டுகள் ஏன் துடிக்கிறார்கள்
என்பதற்கான காரணத்தை
அலசத்தேவையில்லை உற்று
கவனித்தாலே அவ்வுண்மை
புலப்படும்.அனுபவம் இனி மெல்லப்
பேசும் :
மக்கள் விரோத போக்கிற்கு இரு தேசிய
கட்சிகளுமே ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லை என்பதை நாமறிவோம்
அதைப்போலவே அன்றைய வாஜ்பாய்
அரசின் பெருந்திட்டக் கனவான "தங்க
நாற்காலி திட்டம்" காஷ்மீர் முதல்
கன்னியாக்குமரி வரையிலான அகல
நான்கு வழிப்பாதை அமைப்பதான திட்டம்
அடிகல் போடப்பட்டு பின் வந்த
காங்ரஸானது அதனை செயல்படுத்தியது
என்பதனை நாமறிவோம் . மக்களின்
பயணச்சுமையினை குறைக்கும்
நற்திட்டமாக இத்திட்டத்தினை
எடுத்துக்கொள்ளலாம்.ஆனால்
உறிஞ்சப்பட்ட மக்களைப் பற்றி எப்போதும்
நாம் சிந்திக்கவில்லை என்பதே
கவலையளிக்கிறது . ஒரு சாலையை
மிதிக்கப்படும் போது அச்சாலையை
உறுவாக்க முதலாளித்துவ
ஏகாதிபத்தியர்கள் எண்ணிலடங்கா
ஏழைகளின் வயிற்றில் மிதித்து குருதி
குடித்தார்கள் . இதுபற்றி நமக்கேதும்
கவலைகள் ஏற்படவில்லையே என
ஆதங்கப்படுகிறது மனம்.இதன்
காரணமாகத்தான் இச்சட்டத்தின்
நியாயப்படுத்துதலை பலர்
முன்னெடுக்கிறார்கள்.
தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை-
திருச்சி வரையிலான தங்க நாற்காலி
திட்டம் அமலாக்கப்படுத்தப்பட்ட நேரமது ,
இரண்டு தேசியநெடுஞ்சாலைகள்
(NH45,NH66) ஒன்றாக இணையும்
திண்டிவனத்தில் எங்களின் பகுதியாக
அச்சாலையமைக்கும் பணியானது
செயல்படுத்த முடிவானது. முதலில்
பணச் செல்வந்தர்கள் அங்கம் வகிக்கும்
நிலத்தினை கையகப்படுத்தப் போவதாக
உரியவர்களுக்கு தக்க அறிவிப்பு
கொடுக்கப்பட்டது ஆனால் பயனில்லை
முதலாளித்துவர்கள் தங்களின் ஆதிக்க
பணபலத்தால் எதிர்த்து அவரவர்
நிலங்களை தக்கவைத்துக்கொண்டார்கள்.
பிறகு பெரும்பான்மையான
வறுமைகோட்டிற்கு கீழே வாழும் எங்கள்
பகுதியின் மீது ஏகாதிபத்தியர்களின்
பார்வை விழுந்தமையால் நிலம்
கையகப்படுத்தப்போவதாக எவ்வித
முன்னறிப்புமின்றி திடீரென்று செய்தி
வெளியாகி அதற்கான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டது. அரசில் தொடங்கி
நீதித்துறை வரையிலான முதலாளித்துவ
ஆதிகத்தை எதிர்த்து ஒன்றும்
செய்யமுடியாத கையறு நிலையிலேயே
வறுமையின் பிடியிலுள்ள மக்கள்
இருந்தார்கள். ஒருவழியாக அன்றைய காங்ரஸ் ஏழை
எளியோரின் நிலத்தை கையகப்படுத்துவத
ில் வெற்றியும் பெற்றது. 90களில்
பிஜெபியால் கொண்டுவந்த தங்க
நாற்காலித் திட்ட நிலபறிப்புக்கு
நிலத்திற்கான மதிப்பினை 2007ல்
காங்ரஸ் செயல்படுத்தியது கிட்டத்தட்ட
பதினேழு ஆண்டுகளுக்கான
நிலமதிப்பை இழந்தே ஏழை எளியோர்கள்
இழப்பீட்டுத் தொகையினை பெற்றார்கள் .
அதனையும் முழுமையாக அரசானது
வழங்கிடவில்லை பல்வேறு
இடைத்தரகர்கள் லஞ்சத்தில் ஊறியவர்கள்
போக சொற்பமான தொகையையே அம்மக்கள்
பெற்றார்கள் அதுவும் தவணை
முறையில்,அதற்கும் சில போராட்டங்களை
எடுத்துச்செல்லும் சூழலுக்குத்
தள்ளப்பட்டார்கள். இறுதில் வரிசையாக
நிலமிழந்தவர்கள் அப்போதைகான
இருப்பிடங்களைத் தேடி அலைவதிலேயே
இன்றளவும் காலத்தை
செலவிடுகிறார்கள் என்பதை யாரும்
கவனிக்கப்போவதில்லைதான்.
விளைநிலங்களையும்,குடி
சைமனைகளையும் நிலம் கையக
சட்டத்தால் பிடுங்கிய முதலாளித்துவ
அரசானது எவ்வித முன்னறிப்புமின்றி
அவ்வேழை எளியோர்கள் உரிய மாற்று
இருப்பிடம் தேடியலையும் முன்னரே
நிலத்திலுள்ள குடிசை வீடுகளை அகற்ற
ஒரு விடியற்காலையை தேர்ந்தெடுத்து
யாருக்கும் தெரியாமல் நிலச்சீர்
வண்டியினை(JCB எனப்படும் ஃபுல்டௌசர்)
வரிசையில் நிறுத்தி உடனடியாக
நிலத்தை விட்டு வெளியேறுமாறு
அறிவுறுத்தி கட்டளை பிறப்பித்தது. 56
குடும்பங்களின் சார்பாக 19 வயதில் நான்
தலமையெற்ற முதல் போராட்டம் அதுதான்.
உயிரை பணயம் வைத்து அணிவகுத்து
நின்றிருந்த நீலச்சீர் வண்டியின் கீழே
படுத்து "எங்களை ஏற்றிவிட்டு பிறகு
நிலங்களை எடுத்துக்கொள்"என்று
முழக்கமிட்ட தருணத்தை இன்றும்
எங்களால் மறக்கமுடியாது. போராட்ட
வெற்றியின் காரணமாக
அணிவகுத்திருந்த வண்டிகள்
பின்தள்ளப்பட்டது. பிரச்சனைகள்
மெம்மேலும் புதுப்புது வடிவங்களாக
உருபெற்றது.கொலைமிரட்டலில் தொடங்கி
பணபேரத்தில் வந்துநின்ற
பிரச்சனைகளுக்கு மத்தியில்
சமூகநீதியே வென்றது. அதன்பிறகு 15
நாட்கள் அவகாசம் கொடுப்பதாக நிலத்தை
பிடுங்கியவர்கள் தெரிவித்தார்கள்.
போதாதென்று மீண்டும் தொடங்கியது
போராட்டம். இறுதியாக எங்களின்
மூன்றுமாத கால அவகாச
கோரிக்கையினை முதலாளீத்துவ
ஏகாதிபத்தியர்கள் ஏற்றார்கள்.நிலத
்திற்கான உரிய மதிப்பினையும் இழந்து
நிலத்தின் மீதான உரிமையையும்
இழந்து, விவசாய விளைநிலங்களையும்
இழந்து வீதியில் நிற்கும் ஏழை
எளியோர்களின் உரிமைகளை
தக்கவைத்துக்கொள்ளவே பல்வேறு
போராட்டங்களை முன்னெடுக்க
வைக்கிறது முதலாளித்துவ கார்ப்பரேட்
அரசு. இதுபற்றி எவ்வித கவலையோ
வறுத்தமோ இல்லாத முந்தைய
போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலுவும்
சாலையை திறப்பதற்கு மட்டும்
வந்துவிட்டு கடமை முடிந்ததெனவும்
கிளம்பிவிட்டார். எத்தகைய ஊழல்
நடந்திருக்கிறதென்பது நாட்டிற்கே
வெளிச்சம். அவ்வாறு இருக்கையில்
தற்போது ஆட்சியிலிருக்கும் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி அரசானது, நில
கையக சட்டத்தின் மூலம்
இளைஞர்களுக்கு வேலைவாய்பானது
அதிகரிக்கும் என்று குற்ற உணர்வு
கொஞ்சம் கூட இல்லாமல் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி பிரச்சாரம் செய்வது
மிகவும் கண்டிக்கத்தக்கது. நிலமிழந்த
எங்களின் 56 குடும்பங்களில் சுமார்
இருபது இளைஞர்களின் (என் வயதொத்த)
வாழ்வினை கேள்விக்குறியாக்கியதே
அன்றைய காங்ரஸூம் பிஜெபியும்தானே,
இந்த நில கையக சட்டத்தின் மூலம்
பெரிதும் பயண்பெறும்
பணமுதலைகளான முதலாளித்துவ
கார்ப்பரேட் அரசுகள் என்றேனும்
ஒருதடவையாவது மக்களைப் பற்றி
சிந்திக்கிறார்களா? என்றால் நிச்சயமாக
இல்லையென்றேச் சொல்லலாம் . பிரதமராக
வலம் வரும் இந்துத்துவ பார்ப்பானிய
மோடியே இவர்களுக்கான பெரும் அரணாய்
விளங்குகிறார். குற்றவாளிகளை
ஆளச்செய்திடும் குடியரசு மக்களல்லவா
நாம். சிந்திக்க மறந்து இன்றும்
சீரழிந்துக்கொண்டிருக்கிறோம்.இந்த
மண்ணை நேசிப்பவர்களாக நாம் எப்போது
உருமாறப்போகிறோம் சமூகத்து
அவலங்களை இப்போதேனும் வாய்திறந்து
பேசி வேண்டாம் நில கையகச் சட்டமென
போராட்டத்தினை முன்னெடுக்கும்
காலச்சூழலை நாம் பெற்றிருக்கிறோம்
என்பதனை மறந்துவிடக்
கூடாது.இறுதியாக சமூகத்திற்கு
தேவையான தேவைகளை நாம்
பூர்த்திசெய்து அதனை புகழ்ந்து
வரவேற்பதில் எத்தவறுமில்லை ஆனால்
அத்தேவைகளால் இழந்த இழப்பீட்டு
மக்களையும் நாம் நினைவுக்கூறுதல்
வேண்டும்.இழந்த குடிசைகள்,விவசாய
நிலங்கள்,ஏரிகள்,குளங்கள்,இன்னும்
எத்தனையோ உரிமைச் சொத்துக்களின்
மீதுதான் நீங்கள் பயணப்படும் சாலைகள்
அமையப்பெற்றன. இழப்பினை என்றுமே
நினைவிலேற்றி அதற்காகவும் கொஞ்சம்
வருத்தப்படுங்கள் என்பதே என்
தாழ்மையான வேண்டுகோளாக
இருக்கிறது.வேண்டாம் எங்களுக்கு நிலம்
கையகப்படுத்தும் சட்டம்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்