அவனுக்கு வேண்டுமாம் விடுதலை

என்னவனே
நீயொன்றும் விடுமுறைக்கான
விண்ணப கடிதம்
எழுதி
என்னிடத்தில்
கையொப்பம்
கோரவில்லை,,,

கேட்டாயோ முழுவிடுதலையை
நீட்டிய விவாகரத்து
தாளில்
நம் பிஞ்சுள்ள
குழந்தையின் தவிப்புகளை
தண்ணீரில் கலப்பாயோ,,,

ஏதோ எழுதப்பட்டிருக்கிறதே
விடுதலை பத்திரத்தில்

எனது கற்பின் மீதான
காழ்ப்புணர்ச்சியா
அவ்வெழுத்துக்கள்

வேண்டாம் வேண்டாம்
தண்டனை எனக்கு
வேண்டாம்
காதலை சுவாசித்து
கல்யாணத்தில்
உயிரெழுந்து
முத்தான குழந்தையொன்றை
நாமும் பெற்றெடுத்தோமே
அதற்கான பழியா
என் கற்பின் மீதான
கேள்விக்குறி?

என்னில் தீபத்திருவொளியாய்
திகழ்ந்தவனே
தருகிறேன் வாங்கிக்கொள்
விடுதலையை

அதற்கேன் வழக்கும்
வீன்செலவும்
சட்ட புத்தகங்களில்
இறுக்கமான பிரிவுகள்
நமக்கான இறுக்கத்தை
உடைத்துவிட
வேண்டாம்

வீணான அலைச்சலும்
நமக்கிங்கே
வேண்டாம்

வேண்டுகோள்
ஒன்றை மட்டுமே
உன்னிடத்தில் வைக்கிறேன்
வாழ்ந்தது சிறுகாலமென்பதால்
சில உரிமைகளோடு
கேட்கிறேன்

முத்தான குழந்தையின்
முகத்தை எப்போதும்
நான் பார்த்திட வேண்டும்
பத்துமாத தொப்புள்
உறவை பத்தேநாளில்
அறுத்துவிடாதே
அழுது மண்றாடுகிறேன்
அந்த நிலவை
மட்டும்
என்னிடமே விட்டுவிடு
கோடி புண்ணியம்
உனைச் சேரும்

விழுதுகளை நீயறுத்தாலும்
வேருக்கும்
வலிக்கத்தான் செய்யும்
வேண்டுகோளை
ஏற்பாயோ என்னவனே,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்