பெரியார் எதிர்ப்பு ஏன்?

தந்தை பெரியாரை அவமானப்படுத்தும் பல ஈனச்செயல்களை இக்காலத்தில் தவிர்க்க
முடியாதொரு நிகழ்வாக ஆங்காங்கே பார்க்க நேரிடுகிறது. பெரியாரின்
சிலைகளுக்கு செருப்புமாலை, புகைப்படத்தினை செருப்பாலடித்தல்,பெரியாரின்
புகைப்படத்தில் சிறுநீர் கழித்தலென இணையம் வரையிலான பெரியாரிய எதிர்ப்பை
கிளப்பிவிட்டிருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். இது திராவிடத்தின் மீது
இந்துத்துவம் காட்டும் வெறிச்செயலென்றாலும் அவ்வெறிச்செயலை
தூண்டிவிடுபவர்கள் யாரென்று பெரியாரிய சிந்தனையாளர்கள் வெளிச்சம்
போட்டுக் காட்ட கடமைபட்டவர்களாகிறார்­கள். தமிழகத்தில் தற்போது வேரூன்றி
இருக்கும் ஊடக சக்தியானாலும் சரி,ஆளும் அரசானாலும் சரி ,தூண்டிவிடுவதில்
அவரவர் தங்கள் பங்கிற்கு பகிர்ந்தே இந்துத்துவத்தை
வளர்த்தெடுக்கிறார்கள­். பெரியார் மீதான அவமானங்கள் காலந்தொட்டே
நடந்தேறினாலும் இன்றைய காலச்சூழலில் எழும் எதிர்ப்பிற்கு முக்கியமாக
கருதப்படுவது சாதிய வருணாசிரம மனுதர்மத்தில் திராவிடம் கைவைக்கிறது
என்கிற பயமே இந்துத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எது அழிந்தாலும்
சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துமதமும் அதன் மூலக்கூறான
மனுதர்மத்தையும் அழியாமல் பாதுகாப்பதுதானே பார்ப்பானியத்தின் முதன்மை
பணியாக இருக்கிறது.நிஜத்தில் சொல்ல வேண்டுமேயானால் தந்தை பெரியாரால்
மிகவும் பயனடைந்தவர்கள் பார்ப்பன பெண்களேயாவர் . ஆணாதிக்கத்தின்
உச்சநிலையை பெற்றிருந்தவர்களும் தங்களின் மதத்தின் பெயரால் பெண்களையும்
அடிமையாக வைத்திருந்தார்கள் . பெண்ணடிமையை பொறுத்த மட்டில் சாதிய
பேதமின்றி கற்பிதம் கொண்ட மதத்தினை உயர்த்திப்பிடித்தார்­கள்
பார்ப்பனர்கள். இவ்வலத்தினை உடைத்தெறிந்தவர் பெரியார் என்கிற வென்தாடிக்
கிழவன் தான். காலங்காலமாக குலக்கல்வியால் கல்வி மறுக்கப்பட்டது கீழமை
சாதிகளின் கூடவே பார்ப்பன பெண்களுக்கும் சம கல்வி அந்தஸ்து மறுக்கப்பட்டே
இருந்தது. பெரியார் அப்போதும் ஒன்றைத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்
."சாதியத்தை கற்பிக்கும் வருணாசிரம மனுதர்மத்தை புறக்கணித்து சக மனிதனை
மதிக்க பார்ப்பானியம் முன்வருமேயானால் அவர்களை திராவிடர்களாக ஏற்றுக்
கொள்வோம்" என்பது பெரியாரின் பெருந்தன்மையாகவே எடுத்தாளப்படுகிறது.ஆக
இங்கே பெரியார் இந்துத்துவ பார்ப்பானியத்தை எதிர்க்கிறார் என்பதல்ல
இந்துத்துவத்தின் கோபம். அதற்கு மாறாக தங்களின் ஆதிக்கத்தன்மையை
வளர்த்தெடுக்கும் வருணாசிரம மனுதர்மத்தை பெரியார் எதிர்க்கிறார் என்பதே
இந்துத்துவர்களின் பெரியாரிய எதிர்ப்பாக இருக்கிறது. அதே போல
பெரியாரியத்தையும்,பெ­ரியாரையும் எதிர்ப்பவர்களும் பெரியார்மீது
அவமதிப்பு செய்பவர்களும் யாரென்று பார்க்கையில் பார்ப்பனரல்லாதோரே
பெரும்பான்மையாக காணப்படுகிறார்கள் . காரணம் ஒட்டுமொத்த இந்துத்துவத்தில்
அவர்களும் அடிமையெனத் தெரியாமல் , யாரையேனும் நாம் அடிமைபடுத்துவதன்
மூலமாக மட்டுமே தாமொரு ஆதிக்கச் சாதியாக வளர முடியுமென்ற நப்பாசையில்
அதற்கு தடையாக இருக்கும் பெரியாரை இழிபடுத்தி இந்துத்துத்தை
வளர்த்தெடுக்க அவர்களும் துணைபோகிறார்கள். இங்கே "ஆதிக்கம்"எனும் சொல்லை
யார் அடைவது எனக்கிற போட்டியே நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக திராவிடத்தின்
மீதான காழ்ப்புணர்சிகளுக்கு­ இடமளிக்கும் விதங்களாக இன்றைய அரசியலும்
மாறிபோயிருக்கிறது என்பதும் திராவிடமே அதன் சித்தாந்தாங்களை
தொலைத்துவிட்டு நிற்கிறது என்பதையும் மறுத்துவிட முடியாது. இதன்
காரணமாகத்தான் முன்எப்போதும் எழாத திராவிட எதிர்ப்பு தற்போது
அதிகரித்துள்ளது எனலாம். ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லிவிட முடியும்
எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் பெரியாரின் எழுத்துக்களும் ,சமூக
சீர்திருத்தங்களும் தமிழகத்தில் இந்துத்தவமானும் சரி போலித்
தமிழ்தேசியமானாலும் சரி மாற்றுமத வெறியர்களானாலும் சரி, அழித்துவிட
முடியாது.
"மனிதனை மனிதனாக மதிப்பதில்லையென எவை கற்பித்தாலும் அதற்கான எதிரிகளாகவே
திராவிடம் இருக்கும்"
-தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்