"என்ஜன்னல்"

அவளின் மௌனம்
எப்போது
உடையுமென
என்ஜன்னல்
கேட்கிறது,,,

காற்றோடு
நீயாடும்
கதகளியை
நிறுத்திவிட்டு,,,

என்னோடு
நீகலந்து
காதல் நதியில்
நீந்தப்பழகு,,,

காத்திருப்புதான்
காதலுக்கு
அழகென
அறிந்த பின்னிரவு
மலர்சூடும்
வேளையில்,,,

உடையும்
என்னவளின்
மௌனத்தோடு
எதிர்வீட்டு
ஜன்னலுமென்றேன்,,,

சிலிர்த்தெழுந்தே
சிரித்து
விட்டது
-என்ஜன்னல்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்