Posts

Showing posts from April, 2015

24 மணிநேரமும்

Image
கல்லெறிந்த
நதியில் கானக்குயிலோசை
காதல்
நினைவுகளாக

___

செடி
நட்டயிடம் தெரியவில்லை
இங்கே
வாருங்களேன் பறவைகளே!

___

பட்டத்து யானை வீதியில் பிச்சையெடுக்கும் நாடோடிகளாய்!

___

இலை சேர துடிக்கிறது புதுவரவு தளிர்களுக்கு தாயாக இன்னும் வாழ்ந்திட
வேண்டும் மரங்கள்,,,

___

ஆடையில்லா குடிசையில் கசிந்த குருதி கருணை மறந்து விதி விளையாடியதாம் ஏழையினடத்தில்

____

காய்ச்சலோடு
விடிந்த காலை
மருந்துண்ண
பணமில்லை
இருபத்து நான்கு
மணிநேர
சேவை வேண்டும்
அடகு கடைகளுக்கு

___

உருட்டும்
பூனை
நிம்மதி உறக்கும்
மிச்ச சாம்பலை
பூசிக்கொள்கிறது
பசி

____

குடி மூழ்கி
கடலில்
சங்கமிக்கிறது
என்றோ
கரையொதிங்கிய
படகொன்று
ஈரத் துணியில்
மீனவன்

___

கங்கையில்
புனித நீராடல்
பாவ மன்னிப்பு
கோரும்
மனுக்கள்
அழுக்குகளாய்
அப்படியே
கழிவு நீராக

_____+_____

அவனுக்கு தாயான இயற்கையன்னை

Image
அமைதியின்
அணிவகுப்பாய்
தெருக்களெங்கும்
தேங்கி கிடக்கும்
நிசப்த அலைகளில்
அவன் மெதுவாய்
அண்ணநடை
போடுகிறான்

அழைப்பிதழ்
யாருக்கும்
தரவில்லை
அவன்

இருந்தும் அவனது
இன்ப மயமான
வரவேற்பிற்கு
வந்து சேரும்
இளங்காற்றிற்கு
முகமலர்ந்து
விருந்தோம்பல்
புரிகிறான்

புரியாத புதிர்கள்
ஒவ்வொன்றாய்
புலப்படுகையில்
பூமித் தாயின்
மடியில்
உறங்கி விட
துடிக்கிறான்
அவன்

அனைத்தும்
அவனுக்கு
முன்னால்
அணிவகுத்து
நிற்க

புதியதொரு
பறவையின்
சிறகாய்
பறக்க துடிக்கிறான்
பாவங்கள்
எதுவும் செய்துவிட
தோன்றவில்லை
அவனுக்கு

அவனுக்கொரு
உலகம் அமைத்தான்
அவனும் அதிலொரு
குழந்தையாய்
தாலாட்டும் இயற்கையின்
மடியில்
தவழ்கிறான்

இப்போதே
தூங்கிவிட
தோன்றிய மனதின்மேல்
கோபம்
அவனுக்கு

அது பொய்க்கோபமென
தெரிந்தே
தேவதையாகிறான்
அவன்

அவனொரு ஆண்தேவதேதான்
இயற்கைத்
தாய்க்கு
இனியும் எதுவும்
தேவையில்லை

அவனொருவனே
போதுமென
போதிக்கும்
அடிமனதிற்கு
அடிமையாகித்தான்
போனதந்த
இயற்கை அன்னை,,

பூகம்ப புல்வெளிகள்

Image
அடிவிழுதுகளில்
அடிவிழுகிறது
எதுவும் நிரந்தரமில்லை
சொல்லிவிட்டுச்
செல்லும்
நேபாள பூகம்பம் புரியவைக்கும்
இயற்கை சீற்றத்திற்கு நடுவே சிக்கிய உயிர்களுக்கு
ஒருதுளி கண்ணீர் போதாதுதான்
ஓ!!! வென
அழுதுவிடுகிறேன்
அன்றே அழிக்காதே
இயற்கையை
என்றேன்
அதன் வழிதனில் குறுக்கிட்ட குறுக்குப்புத்தி கொண்டவர்கள்
நாமல்லவா
அதிரும் பூமியில் அழுதொன்றும்
பயனில்லை
இப்போதெனும்
இயற்கையை
நேசித்துவிடு
நமதுள்ளங்களில் துள்ளியெழும்
துர்நாற்ற
எண்ணங்களை
தூரே எறிந்துவிட்டு துன்பம்
பகிர்ந்து கொள்வோம்
பலிவாங்கி பசிதீர்த்தாலும் பாய்விரிக்கும்
இயற்கையை
நம்பியே
நமது வாழ்வும்
வளமும்
உள்ளதென
உணர்ந்து
ஊர்க்காவல்
புரிவோம்
உலக சீற்றத்தை
நாமும்
குறைப்போம்
நேபாள பூகம்பத்து புழுதியில்
மாண்ட எம்மின உயிர்களுக்கு
ஆழ்ந்த இரங்கல்
அனுதாப
அலைகளாக
அவரவர்
ஆத்மாவில்
உயிர்தெழட்டும்

அப்படி பார்க்காதே நரியே!

Image
போராடத் துணிவின்றி
போர்வைக்குள்
சிறை
கொண்டிருக்கிறேன்
பிறந்த மண்ணின்
மீது பற்றில்லை
எனக்கு

என் சிந்தனைகளை
நாளும் தொலைத்துவிட்டு
நானுமிங்கே
நடுவீதிக்கு வந்துவிட்டேன்

என் நாட்களையும்
நரிதின்று
போட்டிருக்கிறது
எலும்புத் துண்டுகளாய்

எதுவும் மிச்சம்
வைக்காமல் தின்ற
நரிக்கு என்நன்றிகள்

எனை தின்றுப்
பெருத்ததில்
தவறேதும்
உங்களிடமில்லை

புரட்சி மறந்தேன்
பூமியை தொலைத்தேன்

உழைப்பை மறந்தேன்
உணவையும்
உடையையும்
உறங்குமிடத்தையும்
தொலைத்தேன்

உலகத்து அன்பை
மறந்தேன்
உறவுகளை
தொலைத்தேன்

உடல்முழுக்க
ஊறிப்போனதொரு
சாதியத்தை என்னால்
மறந்தும் இருந்துவிட
முடியவில்லை
மறுத்துப் பேசாத
பிந்தையகால
பிணந்தின்னியானேன்

பேசாமலே ஓடிப்போனதிங்கே
மனிதம்

போதும் அதனால்தான்
சொல்கிறேன்
நரியே
உங்களின் மீது
தவறில்லையென்று

நான் மனிதபிறவியா?
மிருக பிறவியா?
சந்தேகக் கண்விரித்து
அப்படி பார்க்காதே
நரியே
நிச்சயமாகச்
சொல்கிறேன்
நானும் உன்னினம்
தானென்று,,,

அந்திமாலை

Image
மோகத்திரை கொண்டு
கைகளால் முகத்தை
மறைக்கத் தெரியாமல்
திணறிக் கொண்டிருக்கிறேன்,,,

திரண்டு வந்து
என்மடியில்
குழந்தையாகிவிடும்
அந்திமாலை
வானத்தை,,,

அனுவனுவாக
கொஞ்சி முத்தமிடுகிறேன்,,,

மோகமின்னும்
தீர்ந்தபாடில்லை
மேகமின்னலை
எடுத்து வாருங்கள்
ஊஞ்சலாய்
கட்டிவிட்டு
உறங்க ஒரு
தாலாட்டும் நான்
பாடிட வேண்டும்
அந்திமாலை
குழந்தைக்காக,,,

அதோ!!!
கண்களை திறந்து சமீபத்துச் சாம்பலெடுத்து
முகத்தினில் பூசிக்
கொள்கிறேன்,,,

எனைக் கொன்றுத்
திண்றிட சுதந்திரமும்
தந்து விட்டேன்
அந்தி மாலைக்கு,,,

எட்டா தூரத்தில்
நீயிருந்தும்
காலுக்கு கொலுசாகிவிடும்
கடலலைபோல
அந்திமாலையே
நீயழகாக
தெரிவது
எனக்கு மட்டுந்தானா?

நீ வேண்டும்
நீ வேண்டுமென்கிறது
உனதன்பைச்
சுமக்கும்
என்மனது,,,

அந்திமாலையே
அதற்குள் மறைந்துவிடாதே
எனதருகில்
அமர்ந்துவிடு
உனக்கு நான்
தினந்தினம்
தாயாகிடுவேன்,,,

யாரிந்த "லீலாவதி" சிந்தனைககளும், நினைவனுசரிப்பும்

Image
தோழர் "லீலாவதி" இந்தப்பெயரை இடதுசாரிகளே இன்று மறந்துபோனது மிக
வருத்தமானதொன்றாகும்.­ தன் சீறிய மார்க்ஸிய சிந்தனையால் மதுரை மாநகரை
அச்சப்பட வைத்ததுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கும் எடுத்துக்காட்டாக
விளங்கும் தமிழின மார்க்ஸிய சிந்தனைவாதிதான் தோழர் லீலாவதி .
தன்னோடல்லாமல் தான் பெற்ற மார்க்ஸிய சிந்தனையை தமிழ்ச்சமூகத்திற்கு
அற்பனித்த சிந்தனைவாதி, பெண்ணடிமையின் ஒரு பகுதியான "பெண்ணானவள்
வீட்டிற்குள் முடங்கியிருக்க வேண்டும்" என்கிற பொதுபுத்தி பிற்போக்குச்
சிந்தனையிலிருந்து இளவயதிலேயே தம்மை விடுவிடுத்துக்கொண்டு
சமூகத்து வெளியே தானுமொரு கம்யூனிசப் போராளிதான். எனக்கும்
மானுடப்பற்றுண்டென்று­ மெய்பித்துக் காட்டியவர் தோழர்
லீலாவதி.கம்யூனிஸத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மதுரை மாநகர 59வது
மதுரை மாமன்ற 59வது வட்ட உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்
லீலாவதி தொடர்ந்து சமூகத்திற்கான தனது பங்களிப்பை சீறியச் சிந்தனையோடு
நிறைவேற்றி வந்தவர்.தலித் ஒற்றுமை, சாதிமத எதிர்ப்பு, அடிப்படைத் தேவைகளை
பூர்த்தி செய்தல் என முற்போக்குச் சிந்தனையில் மக்களின் நல்வாழ்வினை
வென…

BJP நாராயணா வாந்திகள் பெண்ணடிமை பேசுகிறது

Image
இந்தியாவில் வளர்ந்து விட்ட இயக்கமான ஆர் எஸ் எஸும் அதனை வளர்த்தெடுக்க
துடிக்கும் பிஜெபி இந்துத்துவமும்(ஆம் இரண்டுமே வளர்ச்சியை நோக்கி
எப்போதோ முன்னேறிக்கொண்டிருக்­கிறது) தொடர்ந்து பெண்ணினம் மீதான
காழ்ப்புணர்ச்சியினை கக்கிக்கொண்டிருக்கிற­து. ஏற்கனவே சங்கராச்சாரியார்
எனும் இந்துத்துவ மதவெறியரின்

http://arumbithazh.blogspot.in/2015/03/blog-post_65.html

கருத்துக்களை போலவே அதே பாணியில் கொஞ்சமும் பிசகாமல் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி கட்சியின் மூத்த பொருப்பாளர் நாராயணன் அவர்கள்
இவ்வாறு பேசியுள்ளார்.

"மேக்கப்போடும் பெண்கள் விபச்சாரிகள்"

இதற்கான எதிர்வினையாற்ற கூட சக்தியில்லாமல் முழுதாய் பெண்ணினம்
இந்துத்துவத்திற்கு அடிமையாகிப்போனதுதான்­ வேதனை, இவற்றையெல்லாம் தாண்டி
மத்தியல் பல பெண்களும் தமிழகத்தில் தமிழிசையும் வானதி சீனிவாசன்
அவர்களும் இதே கட்சியில் அங்கம் வகிக்கும் பெண்ணினத் தலைவர்கள் என்பது
வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஒருகால் அவர்களும் நாராயணனின் கருத்திற்கு
உடன்பட்டுவிட்டார்கள்­ போலும்,
இன்றைய காலச் சூழலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் "அழகு"க்…

மௌனம் எழுதிய கவிதை

Image
மௌனம் எழுதிய
கவிதை :

யாரும் சொல்லாதொன்றை
எழுத துடிக்கிறது
மௌனம்

ஏனென்ற கேள்விக்கு
விடையளித்த
வினாத்தாளில்
வெறும் மூன்றெழுத்துள்ளது
கவிதையாக
அதுவும்
முளைக்கிறது

மௌனம்
கவிசொல்ல
வெட்கத்தில்
முகத்தை மூடும்
கண்ணாடி பாதரசத்திலோ

பதிந்து போன
பீனிக்ஸ் பறவையின்
கால்தடம் தெரியும்

பார்க்க
பார்வையுண்டு
எழுத கையுண்டு
எழுத்தை கோர்க்கும்
எண்ணமும் உண்டு

உதவிக்கு வராத
ஊமைமொழியினை
இப்போதேனும்
கலைத்துவிட
வேண்டுமென்று
துடிக்கிறது
ஆழ்மனது

தூரிகைச் சிதறலை
சேகரிக்க
மலர்தூவலாய்
மௌனத்தின் மீது
விழுந்தன
செந்தூவல்கள்

செஞ்சோலைகள்
சிரித்து மகிழ்ந்தாடும்
வேளையில்
உடைபட துடிக்கிறது
கவிதையின்
மௌனம்

இறுதி மூச்சிற்கு
இன்னும் சில நாழிகை
இருக்க
இப்போதேனும்
படித்து விடுங்களேன்

மௌனமெழுதிய
"காதல்" எனும்
மூவெழுத்துக்
கவிதையை,,,

கொசு வத்திச் சுருளை எப்படி பிரித்தெடுப்பது?

Image
அனேகமாக என்ன மேற்படிப்பு படிக்கலாம், மேற்படி என்ன பாடத்தை
பத்தாம்வகுப்பு முடித்தவர்கள் எடுக்கலாம் இதற்கிடையே ஐ ஏ எஸ், டி என்
பிஎஸ்ஸி , கேட், வாட்டு, நோட்டு என நீண்ட பட்டியியலில் "கொசுவத்திச்
சுருளை உடைக்காமல் பிரித்தெடுப்பது எப்படி?"யென்று கோடை சிறப்பு பயிற்சி
வகுப்புகளை ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் அந்தளவிற்கு மனுஷனை
பாடாபடுத்துகிறது இந்த "கொசு" என்னாமா கடிக்கிறது, வலிதாங்க முடியாமல்
கத்திய கதறல் சத்தங்கூட கேட்காமல் பக்கத்தில் வேறு மனைவி தானே
புலம்புகிளாள் "என்னங்க நாளைக்கு கல்யாண் ஜுல்லரி புதுஸா தெறக்கலாங்களால்
கண்டிப்பா போறோம்" ன்னு அவளை புலம்ப வைத்து தூக்கம் தொலைய வைத்த கொசுவை
என்னதான் செய்வது! "நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா
மருந்தடிச்சி கொல்லுங்கடா" என்பது போல இந்த கல்யாண் ஜூல்லரி
விளம்பரத்தையும் தலைவிதியேன்னு பார்க்கவும் வைத்துவிடுகிறார்கள்
கொசுப்பாவிகள்.இவற்றுக்கெல்லாம் இடையில் வீட்டில்வேறு ராமாயணம் ஓடுகிறது
,பாட்டி இல்லாத குறையை பையன் போக்குகிறான் , காதல்தூதாம் காலை விடிவதுகூட
தெரியாத காதல் கைபேசி கிசுகிசு, தெ…

ஆமாம்!!எங்களுக்கு வைரமுத்துவையும் தெரியாது ஜெயகாந்தனையும் தெரியாது

Image
இன்னும் என்னென்ன சர்ச்சைகளுக்குள் மாட்டி சீரழியப்போகிறதோ இந்த
தமிழ்ச்சமூகம் என பயப்படும் அளவிற்கு ஊடகங்கங்களும் அவ்வூடகங்களுக்கு
தீனிபோட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய ஜாம்பவான்களும் சமூகத்திற்கு
என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புலப்படவேயில்லை. குமுதம்
வெளியிட்டிருக்கின்ற வைரமுத்து அவர்களின் தற்பெருமைக்கு ஜெயகாந்தன்
அவர்களின் மகள் கொடுக்கும் பதிலடி இலக்கிய மோதலாகவே உறுமாறியிருக்கிறது.
இலக்கியம் தாண்டி வைரமுத்து அவர்களும் ஜெயகாந்தன் அவர்களும் மேற்கொண்ட
சமூகப் பாதைகளை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
பொதுவாகவே இலக்கியத்தில் புலமைபெற்றவர்கள் எழுப்பும் அதே இலக்கிய மோதலான
சர்ச்சைகள்தான் தற்போது கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் என
எடுத்துக்கொள்ளலாம்.
கவிப்பேரரசு என வர்ணிக்கப்படும் கள்ளிக்காட்டு புதல்வனான வைரமுத்து
அவர்கள் தான் என்னதான் திராவிடத்தில் பங்கு பெற்றாலும் தன்சாதிப்பெருமையை
உயர்த்திப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பவர் . குறியீடுகளை ஆங்காங்கே
விதைத்த வைரமுத்து அவர்களின் சாதியப்பற்றினால் புகழின் உச்சிக்கு
புகழ்ந்தும் தள்ளிவிடுகிறார்கள் இந்துத்துவ பற்றாளர…

கருப்புச் ச(சா)ட்டையடி வேண்டுமா எச் ராஜாக்களே

Image
கருப்புச் ச(சா)ட்டை

ஆண்டுகள் முழுதாய்
குடியில் மூழ்கிகிடந்து
முளைக்கும் ஒருநாள்
போலிமுக்திக்கு

மண்டியிடும்
ஆடுகளின்
கூட்டங்களை போல
அவனும்
கடவுளானான்

அவனைஅவனே
சாமியென்றான்
அவனுடுத்தும்
அதீத அய்யப்ப பக்தியின்பால்
அணிந்திருக்கும்
கருப்புச்சட்டைக்கு

ஒத்தூதி ஓமம்
வளர்க்கும் ஆரியத்தை
அழிக்க வந்த
கருப்புச் சட்டையொன்றும்
சட்டையல்ல
மூடர்களை
விரட்டவந்த
சாட்டையது

அடிவாங்க முடியாமல்
சாதியத்தை அவிழ்த்துவிடும்
ஆரிய பார்ப்பானியமே
வருகிறதுபார்
உங்களுக்கான
எச்சரிக்கை

ஆரிய இந்துத்துவம்
எறியும்
எலும்புத் துண்டுகளை
பவ்யமாக கவ்விக்கொண்டு
வாலாட்டும் உங்களின்
வாலை வெட்டத்துணியும்
போர்வாள்தான்
நாங்களணியும்
கருப்புச்சட்டை

சாதியத்தை
மதவெறி மூர்க்கத்தை
முழுமூச்சாய்
எதிர்க்கவந்த
ஏகாந்த உடையணிய
எங்களுக்கேதும்
தடையிருந்தால்

தன்னுயிரை
துட்சமென எண்ணி
காத்திடுவோம்
கருப்புச்
ச(சா)ட்டையை

எத்தனை
எச் ராஜாக்கள்
வந்தாலும்
எங்களின் கருப்புச் சட்டையை
கைபற்றிட முடியாது,,,

-கெட்டவார்த்தைகள்-

Image
கெட்ட வார்த்தைகள்முதலில் இப்பதிவிற்காக 18+
போடவேண்டுமா எனச் சந்தேகம்
எழுகின்ற பொழுது அதற்கான
தேவை ஏற்படவில்லை என்றே
தோன்றியது இருந்தாலும் மனிதச்
சிந்தனையானது ஒன்றோடொன்று
வேறுபட்டிருப்பதனால்
வேண்டுமானால் அவரவர் 18+ என
தீர்மானிக்க முழுச்சுதந்திரத்தை
இப்பதிவு வழங்குகிறது.
தமிழ்ச் சமூகத்தில் ஓரு
இனத்தையோ அல்லது தனக்கு
ஆகாத நடவடிக்கைகளில்
ஈடுபடுபவர்களையோ,
எதிராளியென அடையாளம்
கண்டவர்களையோ ,ஏதேனும்
வாக்குவாதம் செய்யப்படும்போதை,
பிடிக்காதவர்களை
அவமானப்படுத்தப்படும் போதோ
நமது வாய்ச்சொல்லில்
அனாவசியமாகவும் இயல்பாகவும்
வந்து விழுகின்றன
கெட்டவார்த்தைகள்.பெரும்பாலும்
பெண்ணின இழிவினை
மையப்படுத்தியே உறுவான இந்த
கெட்டவார்த்தைகளானது
பிற்போக்குச்
சிந்தனையாளர்களானாலும் சரி,
முற்போக்குச்
சிந்தனையாளர்களானாலும் சரி ,
சக மனிதர்களானாலும் சரி
அப்போதப்போதைக்கு
அவர்களுக்கான சிந்தனைகளை
மறந்து தொடர் பெண்ணிழிவு
கெட்டவார்த்தைகளை உபயோகித்த
வண்ணம் உள்ளனர் .
இக்கெட்டவார்த்தைகள் இணையம்
வரையில் தொடர்ந்திருக்கிறதென்­­
பதுதான் காலத்தின்
கொடுமையாக இருக்கிறது.
ஆணாதிக்கம் எங்கும் பரவி
கிடக்கிறது என்பதற்கும் இதுவே
ஒரு சான்றாக…

ஏன் மறந்து போனோம்

Image
ஒவ்வொரு அடியாக
நம் பாதம் தொடும்
பாதைகளின் அச்சு
மண்ணளவை
அளந்தவர்கள் இங்கே
ஏராளம்

ஏன் மறந்து போனோம்
ஒத்தையடி
பாதையில்
ஒத்துப்போகிறதா
நம் காலடி தடமென

தேடிப்பிடித்து
தெனாவட்டாய்
நடைபோடும்
சின்னஞ்சிறுசுகளின்
இதயத்தில்
வாழ விடுங்களேன்
அழியாத
நினைவுகளாய்

ஏன் மறந்து போனோம்
ஏர்பிடித்து உழுதோரின்
உள்ளங்கை பிடியில்
நழுவி
சேற்றுப்புழுதி யிலோடும்
மிச்சத் தண்ணீரின்
நடுவே பாலங்கட்டி
பயணப்பட்டோம்

ஏன் மறந்து போனோம்
பள்ளிக்கூட புத்தகப்பையானது
உச்சந் தலையில்
புதையுண்டு பெருச்சாலை
புதியதடம்
பதித்ததே

ஏன் மறந்துபோனோம்
எதுவும் மாறிடவில்லை
மனிதனைத் தவிர

கடந்து வந்த
பாதைகளை
நாமாகவே மறந்துபோனோம்
நினைவுகளில்
நிலைக்க மறுக்கிறதே
நிலையான
பாதையினை
நமக்களித்த
முன்னோரை

ஏன் மறந்து போனோம்!

நாம் தமிழர் கட்சி அறிவிப்பும் கொஞ்சம் வரவேற்பும்

Image
சில தினங்களாக இணையத்திலும்,பொதுவில­ும் தந்தை பெரியாரை மிகவும்
கீழ்த்தரமாக அவமானப்படுத்தும் செயலில் நாம் தமிழர் கட்சியின்
பொருப்பாளர்களும்,தொண­்டர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.­ இந்நிகழ்வுகள்
ஒன்றும் புதிதானதல்ல ஏற்கனவே திராவிடத்தை எதிர்க்கிறோம் பேர்வழிகளென்று
பெரியாரை வடுகனென்றும்,வந்தேறி­யென்றும்,கன்னடவெறியன­ென்றும்,சாதிநாயக்கரெ­ன்றும்
தொடர்ந்து பரப்புரை செய்தவர்களிடம் வேறெதுவும் எதிர்பார்க்கமுடியாது­தான்
இருந்தாலும் தற்போது வெளியாகிருக்கின்ற தலைமை அறிக்கையானது இதிலிருந்து
சற்று மாறுபட்டிருக்கிறது. இதனால் நாம்தமிழர் கட்சியின் செயல்பாடுகளில்
சிறிதளவே வரவெற்கத்தக்கதாக அமைகிறது. காரணம் இன்னும் அவர்கள் பார்ப்பன
பிடியிலிருந்து வெளியேறவில்லை. அவர்களின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தே
இருக்கும்.
வெளியான அறிக்கை இதுதான்:

ஒரு முக்கிய அறிவிப்பு.
--------------------------------------------------------------
தலைமை அலுவலகம்,
நாம் தமிழர் கட்சி. 19-04-2015
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
சீரிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுக…

இளைஞர்களை குறி வைக்கும் நில கையகச் சட்டம்

Image
மத்தியில் ஆளும் இந்துத்துவ
பார்ப்பானிய மோடி அரசின் பல்வேறு
பொய்ப்பிரச்சாரங்களில­்
இதுவும் ஒன்று . என்னவென்றால் "நிலம்
கையகப்படுத்துதல் சட்டமானது அமலுக்கு
வந்தால் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்"
நாக்கூசாமல் எப்படி இவர்களால் பொய்யை
பரப்ப முடிகிறது என ஆச்சர்ப்பட
தேவையில்லை ஏனெனில் பொய்யை
உண்மையெனச் சொல்லியே ஆட்சி
பிடித்தவர்கள்தானே ஆளும்
ஆர்எஸ்எஸ்ஸான பிஜெபி. உண்மையில்
நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின்
மூலமாக பயனடைவது முதலாளித்தவ
கார்ப்பரேட் கம்பெனிகளும் அதுபோடும்
எலும்புத்துண்டுகளை கவ்வும் அடிமை
அரசுகளேயாகும் . இந்நில கையக
சட்டத்தினை பற்றி அனுபவத்தின்
வாயிலாக எழுதிவிட வேண்டுமென்று
எண்ணம் தோன்றும் போதெல்லாம் எனக்கு
நானே தடையாக இருந்தேன் காரணம்
இப்பதிவும் எப்படியும் கவனிக்கப்படாத
சமூகப் பதிவாகவே கடந்து செல்லுமென
தெரிந்து போனதால் ,,, ஆனால் என்றேனும்
ஒருநாள் இவ்வனுபவம் பேசுமென்கிற
நம்பிக்கையில் எழுதும் தருணத்தை
கட்டாயப்படுத்தி எனக்குள்ளே
ஏற்படுத்துக்கொண்டேன்.நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தின்
முதற்செயல்பாடு மக்களின் அத்யாவசிய
தேவைகளுக்காக அரசோ அல்லது அரசும்
தனியாரும் இணைந்த பொத…