பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு?

இது என்னுடைய பழைய முகநூல்(facebook)பதிவு. 4Nov2014 அன்று எழுதியது.
குமுதம் இதழில் கமல்ஹாசன் அவர்களின் பேட்டியொன்றை அப்போது படிக்க
நேர்ந்தது அதன் விளைவாக பதிவிட்டிருந்தேன். பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு?

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நல்ல (சிறந்த)நடிகர் நல்ல இயக்குநர்
சமூகசேவையில் அக்கரையுள்ளவர் அவ்வளவே அதையே காரணங்காட்டி நடிகர்
கமல்ஹாசன் பகுத்தறிவாதியென மதிப்பிடுவதென்பது
ஆகாதொன்றாக தெரிகிறது. சுய சிந்தனையில் அவர் ஒரு பகுத்தறிவாளரா என்கிற
கேள்வி எழத்தான் செய்கிறது. ஏனெனில் தொடர்ந்து தன் படங்களில் "சைவ
,வைஷ்ணவ மோதல்களை காட்டியே அவர்களுக்குண்டான இணக்கத்தை ஏற்படுத்தும்
முயற்சியில் தான் கமல் அவர்களின் சுயமாக இருக்கிறது . "எட்டில் ஐந்துஎண்
கழியுமென்றால் ஐந்திலெட்டு எண் கழியாது" "எல்லாமுடைய சிவனே போற்றி"
என்பதை வில்லத்தனமாகவும்,இதுபோன்று பல நுனுக்கமான எல்லா குறியீடுகளும்
இன்னும் அவரின் படங்களில் வரிசை கட்டிநிற்கும் இந்த இந்துத்துவ சைவ
வைஷ்ணவ சமாச்சாரங்களை திரையில் மிளிரச்செய்வதுதான் பகுத்தறிவுபோலும்
இதற்கிடையில் "கடவுள் இல்லையென்றுச் சொல்லவில்லை இருந்தால் நல்லதெனத்தான்
சொல்கிறேனென்ற வசனங்களை காட்டியவரல்வா அவர் இன்னும் அனைத்து படங்களையும்
குறிப்பிடலாம். அவரிடம் சில கேள்விகளை அதே துறையிலிருப்பவர்கள் கேட்பதாக
குமுதம் ஒரு கேள்விபதில் பேட்டியினை வெளியிட்டது. அதில் நடிகர் சத்யராஜ்
அவர்கள் ஒரு கேள்வியினை எழுப்புகிறார், "பெரியாரிசம் மார்க்ஸியம் ஒற்றுமை
வேற்றுமை என்ன சார்?

கமல்ஹாசன் பதில் :

"ஒன்று இனம் சார்ந்தது மற்றொன்று வர்க்கம் சார்ந்தது" எல்லா இசங்களுமே
மனித வர்க்கத்தின் மேம்பாட்டிற்கானகருவிகளே! மனித இன்னல்களுக்கான நிரந்தர
தீர்வு அல்ல அவை, அப்படி ஆக்க முற்பட்டால் பெரியார் பைபிளும், மார்க்ஸிய
திருமறையும் தோன்றி அவை மதங்களாகி விடும் .
இது தான் அவரளித்த பதில்.
இப்போது பதிலை அலசிவிடலாம்
" மார்க்ஸியம் பெரியாரிசம் முழுக்க முழுக்கு கடவுள் மறுப்பினை ஆணித்தரமாக
அறிவுறுத்தும் இஸங்கள்.

புத்தக எழுத்துக்களில் வேண்டுமானால் கம்யூனிசம் வர்க்கமாகவும்
பெரியாரிசம் இனமாகவும் அலங்கரிக்கப்பட்டிருக்காலாம், ஆனால் இரண்டுமே
இனம், வர்க்கம் ஆகிய இரண்டினையும் பற்றி மிகத்தெளிவாக குறிப்பிடுகிறது.
ஒன்று ஒன்றை மட்டுமே பேசுவதாக ஏற்றுக்கொள்ளமுடியாது அனைத்து தளங்களிலும்
தன்பங்களிப்பினை அங்காங்கே செதுக்கி வைப்பதில் பெரியாரிசமும்,
மார்க்ஸியமும் இனைந்தே செல்கிறது. அவை மனித மேம்பாட்டிற்கான நெறியினையும்
கற்றுக்கொடுக்கிறது. நிரந்தரத் தீர்வுக்கான வழிகாட்டியாகவும்
விளங்குகிறது.மதமொரு அபின் என்கிற மார்க்ஸியமும் மதத்தை கற்பித்தவன்
முட்டாளென்கிற பெரியாரிஸமும், மனித மூளையை விலைபேசும் அனைத்து
மனிதர்களின் திமிரையடக்கி மன்னிப்பினை கோரச்செய்துவிடுகிறது . பெரியார்
பைபிளும் மார்க்ஸிய திருமறையும் எப்படி உறுவாகுமென்று இவர் நினைக்கிறாரோ
என்று தெரியவில்லை. ஒருவேளை தம்மதப்பற்று அவ்வாறு கமல்ஹாசனுக்கு
கற்பித்துத்திருக்கலாம்.

மார்க்ஸிய சித்தாந்தம் ரஷ்யாவில் பரப்புரை செய்கின்ற காலத்தில் அதன்
வளர்ச்சியை தடுக்க முடியாமல் திணறிய நிலபிரபுக்கள் ஒன்றிணைந்து
மார்க்ஸியம் ஒர் "புது மதத்தினை பரப்புகிறது" மக்கள் அம்மதத்தினை
போற்றிப் புகழ்பாட வேண்டுமென்பதே அதன் நோக்கமென பரப்புரை செய்தது. ஆனால்
கம்யூனிசத்தை ஏற்றவர்கள் அதற்கு செவிசாய்க்காமல் அப்பொய்புரட்டினை
அடியோடு கலைத்தெறிந்தார்கள். கம்யூனிசம் எப்போதும் மதமாகாது
மதத்திணிப்பின் அவசியமும் கம்யூனிசத்திற்கில்லை. என்பது தான்
கம்யூனிஸத்தின் நூற்றாண்டு வெற்றி இதுபோலத்தான் பெரியாரிசமும்
தமிழ்நாட்டில் பெரியாரின் எழுத்துக்களை மதமாக்கப்படுமென்ற எண்ணமிருந்தால்
அதற்கான சூழ்ச்சிகளை களைத்தெறிவதில் தான் பெரியாரிஸத்தை ஏற்றவர்களின்
முதல் பணியாக இருக்கும். இன்றும் இடைவிடாது அப்பணியும் நடந்து
கொண்டிருக்கிறது. எப்படித்தான் தமிழை திருப்பிப்போட்டு இருக்கு? இல்லை?
என்கிறமாதிரியே பேசினாலும் இவ்விரு இஸங்களை ஏற்றவர்கள் எங்களை நாங்களே
ஒருபோதும் பகுத்தறிவாளனென சொல்வதில்லை கமல்ஹாசன் சார், இன்று வரையில்
கருத்தியலாளராகத் தான் நாங்கள் செயல்படுகிறோம். நாங்கள் நாங்களாவே
இருக்கின்றோம். நீங்கள் நீங்களாவே இருங்கள் இதற்கிடையில் பகுத்தறிவென்பதை
அடகு வைக்காதீர்கள். நினைவுபடுத்த வேண்டிய நிகழ்வொன்றும் இதில் உள்ளது.
இட்லியில் கம்யூனிசத்தை சுட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விலைபோன
குளிர்பான நடிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் ஒன்றும் அதற்கு இணையானவரில்லை
என்பதே குறிப்பிட்டே ஆக வேண்டும் ஏனெனில் அன்பே சிவம் என்றொரு படத்தில்
அழகான கம்யூனிஸத்தை புறக்கணித்தவர்கள்தானே நாம். கம்யூனஸ எழுச்சியில்
முக்கிய பங்காற்றிய வீதி நாடகம் வீழ்ந்து விடவில்லை என்பதை
எடுத்துரைக்கும் 910 என்கிற வீதிநாடகத்தை அவ்வளவு சிறப்பாக
காட்டியிருப்பார் கமல்ஹாசன் அப்படத்தில். அதன் இயக்குநர் சுந்தர். சி
அவர்கள் அன்பே சிவம் படம் போல இனியும் எடுக்கப்போவதில்லை என மனம்
வருந்திச் சொன்ன வார்த்தைகளில் அப்படத்தின் படுதோல்வியடையச் செய்த
நம்மவர்களுக்கு ஏனோ வருத்தமொன்றே வருவதில்லை காரணம் சினிமாவில் சமூகம்
காட்டினால் நமக்கு சலிப்புதானே வருகிறது. எது எப்படியோ தற்போது
அடுத்தடுத்து வெளியாகப்போகும் "உத்தமவில்லன்,பாபநாசம்,விஷ்வரூபம்2, ஆகிய
படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் . அப்படத்திலேயும் சைவ வைஷ்ணவ
குறியீடுகளை கான ஆழ்ந்த எதிர்பார்ப்புடன் கருத்தியலாளன்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்