காதல் செய்யும் குரும்பு

வீட்டிற்கு
அழைத்தாள்
வந்தேன்

வருகையில்
வாசற்
கதவுகள்
விசாலமாய்
கேள்வி
எழுப்பின
எங்கும்
ஒலித்தது
நல விசாரிப்புகள்

உதடுகள்
பொய்யுரைத்தன
அவளுக்கும்
எனக்குமான
காதலை
உணரவில்லை
வாசற்
கதவுகள்

ஒரே படபடப்பு
உடலெங்கும்
பரவியது
ரத்தகொதிப்பு

கவனித்து
விட்டாளவள்
கண்பார்வை
நகரவேயில்லை
என்
பார்வையும்தான்

உபசரிப்புகள்
முடிந்து
வாசற்கதவுகள் வழியனுப்பும்
வரையிலான
காலம்
முழுதும்
கார்மேகம்
சூழ்ந்ததொரு
இருளாகவே
தெரிந்தது

விடைபெற்று
வீடடைந்தேன்
விட்டதாக
தெரியவில்லை
உடல்
நடுக்கம்

ஊமை
பேசுவதாக
எனக்குள்ளே
எழுந்தது
எண்ணங்கள்

சட்டென
அலறும்
தொலைபேசி
அதிர்சியின்
உச்சத்தில்
வழிந்தோடும்
வியர்வையில்
குளித்தது
அந்த
தொ(ல்)லைபேசி

அழைத்தது
அவளென்றதும்
கொஞ்சம்
அமைதியானது
மனது

வீட்டிற்கு சொல்லிவிட்டேன்
நமது
காதலை
விரைவில்
சேதி வரும்
காத்திரு
என்றாள்

வீட்டிற்கழைத்த
முன்னரா?
பின்னரா?

நீண்ட
மௌனத்திற்கு
பிறகு
முன்னரென்றாள்

இதயம்
ஆட்டம்கண்டு
இமைகளை
இருட்டாக்கி
காதுகளை
செவிடாக்கும்
காட்சிதனை
காண்பதில்தான்
உனக்கின்ப
மெனில்
இப்போதே
மணமுடித்து
விடலாம்
மணவாழ்வில்
இப்படியே
விளையாடி
விடலாம்

குரும்புத்தனம்
இல்லா
காதல்
குற்றால
அருவியில்
குளிக்க
மறுத்திடுமாம்!

Comments

 1. குரும்புத்தனம்
  இல்லா
  காதல்
  குற்றால
  அருவியில்
  குளிக்க
  மறுத்திடுமாம்!// அழகான வார்த்தை ஜாலம்.

  ReplyDelete
 2. வணக்கம், வலைச்சரத்தில் உங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு
  http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_4.html#comment-form

  ReplyDelete
 3. வணக்கம்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் பிரதிபா அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்

  வலைச்சர தள இணைப்பு : என்னைக் கடந்து செல்பவனே

  ReplyDelete
 4. மிக்க நன்றி தோழமைகளே!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்