மனதும் மலரிதழும்

மாற்றத்தை
மாலையாக
கோர்க்கிறது
மனது,,,

என்ன விந்தையிது!
மலர்களில்
கூடவா
வெட்கம்
கசியும்,,,

வியப்பில்
விழுந்த
மனதை
மலரிதழ்
மடியினில்
தாங்கியது,,,

மனதோடு
மலரிதழ்
இனிக்கும்
லீலைகளை
தொடங்கியது,,,

ஊரைசுற்றி
ஒரே இறைச்சல்
மனதில்
மட்டும் மௌன
அமைதி,,,

மனதை விட்டு
விலகிச் செல்கிறது
சுற்றியிருந்த
விழிகளின்
மௌனம்
இரண்டும்
மனம்விட்டுப்
பேசுவதனால்,,,

மெல்ல
அவிழ்க்க
தொடங்கியது
அதற்கான
மொழியை
மலரிதழ்
மனதிடம்,,,

என்
மலரிதழில்
வெட்கம்
கசிவதை
கண்டாயே
மனதே,,,

வேறொன்றுமில்லை
உன் மனதிற்கு
பிடித்தவளே
என் மலரிதழில்
முத்தமிட்டாள்,,,

அவளின்
கைகள் என்னை
பறிக்க
மறுத்துவிடுகிறது,,,

என்தாய்
செடிவேருக்கும்
எனக்குமிருந்த
உறவை
மீட்டெடுக்கவே
அவள்
கூந்தலுக்கு
என்மீதிருந்த
ஆசையை
அடக்கி பொய்க்கோபத்தை
கூந்தலின் மீது
தெளிக்கிறாள்,,,

ஈரக்கூந்தலின்
நீலிக்கண்ணீரில்
அவள்
முதுகும்
நனைந்திடக்
கண்டேன்,,,

அவள் முத்தமிட்ட
நொடி பொழுதில்
என் விரிந்த
இதழ்கள் தான்
இவைகளை
எல்லாம்
நோட்டமிட்டது,,,

மனது கசியும்
வெட்கத்தை
இப்போது
மலரிதழ் கண்டது,,,

இரண்டும்
இன்பத்தில் உறைந்து
உரக்கச் சொல்கிறது
இவள்
காதலுக்கு(க)
பிறந்தவளென்று,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்