நீலக் கரையோரம்

நீலக் கரையோரம்

அப்பாவியாய்
முகபாவனையில்
ஜொலிக்கிறது
அந்தி வானம்

அதன் வெண்ணிற வேர்கொடியினை
கொள்ளையடித்த
கள்வனாய்
மலர்கிறது
நீலக் கரையோரம்

கடலோரக்
கவிதைகளாய்
நீலக் கடற்கரை
மணலெங்கும்
வந்துபோன
பாதச் சுவடுகள்

யாரும்
பார்த்திடவில்லை கண்ணழகால்
கவர்ச்சி வீசும்
காந்தச்
சொரூபத்தின்
காவயத்
தலைவனை
ரசிக்கும் போக்கோடு ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கும்
மீன்களின் துள்ளல்களோடு
அவற்றின்
கண்களில்
மிண்ணுகிறது
அந்நீல
வண்ணம்

சுகவாசம்
பறிபோகாமல் சுறுசுறுப்பாய்
அந்நீல வண்ண
கரைகளைத்
தொட
துடிக்கும்
மீன்களுக்கு
பரிசு ஏதும் கொடுக்காதீர்கள்

பிரியம்
காட்ட
வேண்டுமெனில்
போடாதீர்கள்
மீன் வலையை

வயிற்று
பிழைப்புக்கெனில்
நீல வண்ணம்
பாய் விரிக்கும்

பொழுது போக்குக்கெனில்
நீல வண்ணம்
நிஜத்தில்
துடிக்கும்

பல
முகங்கொண்டு முகங்காட்டும்
நீலக் கரையோரம்
நீளமாய்
பயணிக்கிறது
வாழ்வியலின்
வழித் தேடல்கள்

தொலையாது
இனியும்
தூரத்து
வழித் தடங்கள்,,,

Comments

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்