கைபேசி அழைப்பொலியும் தொந்தரவும்

நாம் ஏதேனும் விஷயங்களை செயல்படுத்த யோசிக்கும் பொழுது நமக்கு முன்னரே
நமது கைகள் முதலில் தேடுவது கைபேசியைத்தான்
என்றாகிவிட்டது மனிதச் செயல்பாடு. எங்கும் எதிலும் மைல்கல்லாக அமைந்து
விட்ட கைபேசியானது மனிதனின் அறிவியல் படைப்பில் மகத்தானது . இன்னும்
சிறிது காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எதுவென மாணவர்களிடம்
மதிப்பெண் வினா? எழுப்பினால் . "ஸ்மார்ட் போன்" என்றெழுதி அதற்கு ஏன்
மதிப்பெண் வழங்கப்பட வில்லையென ஆசிரியரை மிரட்டினாலும் மிரட்டுவார்கள்
இல்லையெனில் கத்தியாலும் குத்துவார்கள். இது உலக நடப்பு .
சரி விஷயத்திற்கு வருவோம் . கைபேசியை எங்கெல்லாம் எப்படியெல்லாம்
பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் சில வரைமுறைகள்
உள்ளது . உதாரணத்திற்கு எரிபொருள் வங்கிகளில் கைபேசி பேசத்தடை,
மருத்துவமனைகளில் கைபேசி பேசத்தடை, வங்கிகளில் கைபேசி பேசத்தடை , இன்னும்
இவ்வாறான பல வரைமுறைகளை நமக்கு நாமே வகுத்துக்கொள்கிறோம் அதன் அவசியம்
உணராதவர் பயன்படுத்திக்கொண்டேத­ான் இருக்கிறார்கள்
அவ்வாறுதான் "பொதுக்கூட்டங்களிலும­்
கலை இலக்கிய அவையிலும் கைபேசி பயன்படுத்தப்படுகிறது­"
இப்போது எதைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது­ என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
உளவியல் ரீதியாக பொதுக்கூட்டத்திலோ இலக்கியமேடைகளிலோ
இன்னும் பல கூட்டங்களிலோ கைபேசி அழைப்பு யாருக்கேனும் வருகின்ற பொழுது
அவையில் பேசுபவர் எடுத்துரைக்கும் கருத்துக்களை பேச மறந்து விடுவார்
என்பது தெளிவு. அவ்வாறான அவை பேச்சாளரின் கருத்துக்களை செயலிழக்கும்
கைபேசி அழைப்பினை ஒலிக்க விடுதல் என்பது அவ்வவை கூட்டத்தில் கைபேசி
ஒலிக்கச் செய்தவர் பங்குபெறாமலே இருப்பதற்குச் சமம்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கைபேசி அழைப்பொலிகளை அவர்களுக்கு
பிடித்தமானதாக வைத்திருக்கிறார்கள் . அவ்வாறு தங்களுக்கு பிடித்தமான
அழைப்பொலி மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம்,அதை விட்டுத்தள்ளுங்கள் அது
அவரவர் விருப்பம் கேட்டால் "தனிமனித சுதந்திரம்" என்பார்கள். உண்மைதான்
தனிமனித சுதந்திரம்தான் அது ஆனால் நிதர்சன அமைதியாக நடைபெறும் ஒரு
கூட்டத்திலோ அல்லது அவையிலோ நீங்கள் ஏற்படுத்தும் தனிமனித சுதந்திர
கைபேசி அழைப்பானது அவையில் கூடியிருக்கும் ஒட்டுமொத்த சனகூட்டங்களையும்
தொந்தரவு செய்கின்ற போது அது தனிமனித சுதந்திரத்திலிருந்து­ விலகி பொது
மக்கள் தொந்தரவாக மாறி உங்களுக்கு பிடித்து போன அழைப்பொலியானது பெரும்
இறைச்சலாக மாறுகின்றது என்பதை ஏன் புரிந்துகொள்ள மறந்தீர்கள் அல்லது
மறுக்கிறீர்கள் . எப்படியான மெல்லிசை அழைப்பொலியை நீங்கள்
வைத்திருந்தாலும் அது அந்தச்சூழலில் "இறைச்சலாக"தான் பார்க்கப்படும்
அவ்வாறு இருக்கையில் அதனை விரும்பிச்செய்யும் உங்களின் மனதில் எந்த
கருத்திற்காக நீங்கள் அவை கூட்டத்தில் கலந்து கொண்டீர்களோ அக்கருத்தின்
முழு அளவையும் அக்கைபேசி அழைப்பொலி அழித்து விடும் என்பதனை மனதில் கொண்டு
ஆகச்சிறந்த நடைமுறைகளை நீங்களே வகுத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான்
அனைவரின் விருப்பம்.
இன்றை ஸ்மார்ட் போன் தொடுதிரை வசதி கொண்ட யுகத்தில் பல உறவுகளை
தொலைதூரத்தில் துரத்திவிடுகிறோம் என்பதனை மனதில் கொண்டு நிகழும் அல்லது
நிகழ்ந்து கொண்டிருக்கும் பொதுக் கூட்டங்கள் மற்றும் இலக்கிய அவையிலேனும்
தலைகுனிந்து தொடுதிரை கைபேசியில் மூழ்கிவிடாதீர்கள் . பிறகு வாழ்நாள்
முழுக்க தலைநிமிரவே முடியாது நம்மால்,,,
ஆகவே வேண்டுகோளாகவும் ஓர் அரைகூவலாகவும் இதனை ஏற்று
முடிந்தளவு கைபேசி அழைப்பொலியை ஏற்க மறுத்து முக்கிய அழைப்பெனில்
சத்தமில்லாமல் இவ்வாறு இன்ன இடத்தில் இருக்கிறேன் என்று ஃஹெட்செட் மூலமாக
பேசுங்கள் . இல்லை அது அவசர அழைப்பில்லையென அறிந்தால் "குறுஞ்செய்தி
அனுப்புங்கள் முடிந்தளவு அக்கூட்டங்களில் கைபேசியை அணைத்து வையுங்கள்"
அவ்வாறு அணைத்து வைப்பது சரியல்லவென கருதினால் தயவு கூர்ந்து கைபேசியை
ஒலிக்க விடாமல் அதிர்வலையிலிலேயோஅல்ல­து அமைதி விருப்பத்தையோ
தேர்ந்தெடுத்து அச்சூழலுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் . இதனால்
கருத்துக்களும் உறவுபிணைப்புகளும் நம்மிடையே பரவி புதியதொரு சிந்தனையில்
நமை இட்டுச்செல்ல நமக்கு நாமே தூன்றுகோலாய் இருப்போம்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்