நிராகரிப்பின் வலி

ஒரு
கொரூரத்தின்
உச்சத்தில்
மிச்சமாகும்
கண்ணீரை
சேமித்து
வைத்திருக்கிறேன்,,,

சேவகனாக
இல்லாத போது
சிந்திய
கண்ணீரில்
கலந்துள்ள
குருதிவாடை
குத்தும்
ஊசியாகிவிடுகிறது,,,

ஏதும் இயலாத
கையறு
நிலையிலே
கடந்தோடிய
பயணங்கள்,,,

மரணம்
வதைசெய்யும்
மல்லிகை
வாசத்தை
நுகரந்து
மயங்கி
விழுந்தனவாம்
வண்டுகள்,,,

என்ன செய்ய
ஏதாவது
வழிச்
சொல்லுங்களேன்,,,

குருதி வாடை
குடலை
பிரட்டினாலும்
நினைவலைகளை
நிராகரிப்பது
தவறன்றோ,,,

அடுத்தவர்
பார்வைக்கு
நானொரு
தவமிருக்கும்
துறவி,,,

எனக்கு மட்டுமே
தெரியும்
ஏந்திய கண்ணீரில்
கலந்துள்ள
குருதியின்
ஏக்கங்களை
சுமந்துள்ளேன்
என்பதும்,,,

எப்படி
சுமையினை
இறக்கி வைப்பதென
தெரியாமல்
தொடர்ந்தே
விழித்திருக்கும்
வழியறியா
வழிப்போக்கன்
நானென்பதும்
எனக்கு மட்டுமே
தெரியும்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்