அவளின் சொல் வீச்சம்பு

சொல் வீச்சம்புகளை
என்மீது வீசிவிடுகிறாள்
அவள்
என்ன செய்வதென்றே
தெரியவில்லை
எனக்கு

எங்கேயோ எழுதிவைத்த
ஏகாந்த வசனங்களை
என்னுள்ளே புதைக்கிறேன்

எங்கே கோபமிருக்கிறதோ
அங்கேதான்
வாழுமாம் அதீத அன்பு

மனதை தேற்றுவதில்
மயக்கமென்ன
வரவாப்போகிறது

சொல்லம்பை திசைதிருப்ப தென்றதலைத்தான்
துணைக்கழைக்கவா

சொல்லடி எனை சூரியனைபோல
சுட்டவளே

அடுத்த வாசகம்
படித்த பொழுதுகளில்
விடிவதே நரக
வேதனையடி
எனக்கு

யாதொருவரிடமும்
அளவோடு அன்பை
செலுத்தி விலகுதலில்
விடியலை தேடிடலாமாம்
திருத்தம் செய்துவிட
திண்டாடிக் கொண்டிருக்கிறேன்

உன்மீதான அதீத
அன்பினில்
அளவையை எப்படி
என்னால்
செலுத்திவிட முடியும்

சிறகொடிந்த பறவைகள்
சிங்காரித்து அழகுபார்த்திடவே
அனைத்துள்ளமும்
துடிக்கிறதே அன்றி

அதன் சிறகினில்
ஓரலகை எடுத்து
காயமுற்றதில்
இதமாய் தடவிடத்தானோ
யாருமில்லை
இங்கே

உன்னைக்கண்டேன்
உலகின் ஒளியாய்
கூண்டில் அடைக்கவில்லை
நீ

சிறகுகளை சேகரிக்கிறாய் அம்மியில்
மருந்தையும் நீயே அரைத்தெடுத்து
அழகான சிறகின் வலியையும்
தூரெறிகிறாய்
துடிக்கிறதென்
மனது

கருணையினை
நீ சுமந்து
காய்ச்சிய கம்பியினால்
எனை மட்டும்
சூடிடுவது ஏனோ

இவன் துடிக்கமழகை
தூரத்திலிருந்து
நீயும் ரசிக்கிறாயோ

வலிக்கத்தான் செய்கிறது
இருந்தும் வலிதாங்குவேன்
சொல்லம்பு வீசி
பெற்சலங்கையிடும்
உந்தன் பாதங்களில்
தொடங்குகிறது
என் காதலோசை

உள்ளத்தில் ஒருதீங்குமில்லா
உனையா
உதறித்
தள்ளிவிடுவேன்
ஒருபோதும்
நினைத்துவிடாதே
துளிகோபமேதும்
என்னிடமில்லை

என்னில் கலந்தவளே
நீ வீசிய சொல்லம்பை
மட்டுமே சுமக்கும்
இதயம் என்னில் இருந்தால் உயிரோடு
வீழ்ந்து விட்டிருப்பேன்

இல்லை உயிரை விடுவதாக இல்லை
தெரிந்து கொள்ளடி
என்னவளே
சொல்லம்பை மட்டுமே
சூரியனில் சுட்டெரித்து
உனக்காவே இன்னும்
உயிரோடிருக்கிறேன்
நான்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்