வளர்ந்து விட்டேன்

வளர்ந்து விட்டேன்
வானுயரத்தில்
விமானம் பறந்தால்
இன்னமும் எட்டிபார்த்துவிட
ஏங்குகிறது மனது

வளர்ந்து விட்டேன் செடிகளின்
அடர்த்தியில்
மறைந்துள்ள ஓணானை இன்னமும்
தூரோகக்
கண்ணோடு
பார்க்கத் தூண்டுகிறது மனது
அணில்தான் கருணையின் பிறப்பிடமாம்

வளர்ந்து விட்டேன்
திரண்ட கூட்டத்தின்
நடுவே
திருவிழாவை
மறந்துவிட்டு
சின்னச் சின்ன திருட்டுகளை
இன்னமும்
செய்யச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் வாழ்க்கையே விளையாட்டாகிவிட விளையாடும்
தருவாயில்
இன்னமும் போங்காட்டம்
ஆடச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் இன்னமும்
ஆணோடு பெண்ணும்
பெண்ணோடு ஆணும்
பழகுவதை சந்தேகத்துடனே பார்வையை திருப்பச் சொல்கிறது மனது

நான்
வளர்ந்துவிட்டேனா
எனும் கேள்வியை
மனதிடம் வைக்கையில்

இளம்பருவம் எதை வியப்பில் ஏற்றியதோ அதுவாகவே நீயிருக்கிறாய் அதுதவறில்லை

நில்!

இறுதியாக ஒன்றைச் சொன்னாயே உடன்படவில்லை
நான்

இன்னமும் வளராத
ஆறறிவு வெற்றுடம்புதான் நீ
வளரவேயில்லை
வளரவிடவும்
முயன்றதில்லை

முகத்தைப்பார்
ஆணுக்கு பெண்
பெண்ணுக்கு ஆண்
அப்படியே கண்ணாடித் திரையில் தெரியும்

விலகிப் போ
சந்தேகப் பார்வையை விட்டொழிந்தால்
நீயும்
வளர்ந்த மனதனே! சொல்லி முடித்தது
மனது,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்