தமிழகத்தில் இந்துத்துவத்தின் தொடர் தாக்குதல்

தமிழகத்தில் இந்துத்துவத்தின் தொடர்
தாக்குதல்

இந்துத்துவம்
தொடர்ந்து இந்து மக்களை
தாக்குகிறது. நான் ஏற்கனவே " மாதொரு பாகன் கடந்து போன காலச்சுவடு" என்கிற
தலைப்பில் சொன்னது போல மாதொருபாகனென்ற இந்து நாவலுக்கெதிராக
இந்து எழுத்தாளர் தாக்கப்படுகிறார் இதே முறைதான் புலியூர் முருகேசன் தாக்குதலும்
அதனை தொடர்ந்து இந்துத்துவ கூட்டணியில் இடம்பெற்ற "மோடி" இல்லை "மோதி"
யென்று தமிழகத்திற்கு அறிமுகம் செய்த புதிய தலைமுறை தொலைகாட்சி ஊழியர்
தாக்குதலும் அதனை தொடர்ந்து மீண்டும் அதே புதிய தலைமுறை தொலைக்காட்சியின்
மீது இன்று அதிகாலை 3 மணி அளவில் புதிய டிபன் பாக்ஸ் குண்டுகள் வீசப்பட்ட
நிகழ்வு, (இதற்கு பொறுப்பேற்று மதுரை நீதிமன்றத்தில் இந்து இளைஞர் சேனா
அமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் சரணடைந்து உள்ளார்) ஒரு விதத்தில்
கார்ப்பரேட்டுகளின் கைகூலியாக மீடியாவானது அறியப்பட்டாலும் அவர்களின்
பணியினை தடுக்கும் விதமாக கட்டவிழ்த்து விடப்படும் ஆதிக்க இந்துத்துவ
தாக்குதல்களை வண்மையாக கண்டிக்கப் பட வேண்டும். இது புதிய தலைமுறை தொகா
விற்கு நடந்ததுதானே என்று மற்றவர் TRPயை உயர்த்தப் புறப்படுவதை
நிறுத்திக்கொண்டு. இம்மண்ணில் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்த
மாமனிதர்களையும் அவர்களின் சமூக எழுச்சிக்கான போராட்டங்களையும் இனியும்
ஊடகம் வெளிச்சத்தில் கொண்டுவர முற்பட வேண்டும். மேலும் பு த தொகா
நிறுவனர் பாரி வேந்தர் இதற்கு முன் தேர்தலுக்காக தேர்ந்தெடுத்த கூட்டணி
‪#‎ RSS‬ ‪#‎ BJP‬யைத்தானே
ஒழிய அவரொன்றும் முற்போக்கு சிந்தனைகளுடைய கட்சியில் இடம்பெற்றிட வில்லை
. யார் எதிரி என்பதை இனியாவது அவர் கூர்ந்து கவனிப்பார் என நம்புகிறேன்.
ஆக இவர்கள் ஏன் இதுதான் இந்துவத்துவமெனும்
அடக்குமுறைக்கெதிராகத­ெளிவடையவில்லை என்கிற கேள்வி எழுகிறது . இதுதான்
இந்து மத ஆதிக்கம் எனப்படுகிறது இதிலேயே புரிந்து கொள்ளலாம்
அடக்குமுறைகளை கையாளுவதிலும் அவ்வடக்குமுறையின்பால­் எழுகின்ற வன்முறையை
கட்டவிழ்த்து விடுவதிலும் ஆர்.எஸ். எஸ் என்கிற இந்துமத பற்றாளர்கள்
சளைத்தவர்களில்லை என்பதனை உணர்வார்களா என்றும் தெரியவில்லை.
இதே அடிப்படையில் தான் இந்துத்துவம் தான் உறுவாக்கிய சாதியத்தை
நிலைபெறச்செய்ய அப்பாவி மக்களின் மீது வன்முறையை திணிக்கிறதெனும்
உண்மையையும் உணர்வார்களா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
ஊடகங்களும் , அரசியலாளர்களும் , ஒன்றுபட்ட சமூகத்தில் உழைக்கும்
வர்க்கங்களும் தங்களை அடிமைபடுத்தும் சக்தி யாரென்று அறிவார்களா?
பொருத்திருந்து பார்ப்போம் .

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்