திறவுகோல்

எத்தனையோ
பெண்கள்
என் மனச்சிறையில்
மையல்
கொண்டிருந்தாலும்
நீயொருவள்
மட்டுமே
நீடித்திருக்கிறாய்
ஆயுள் கைதியாக,,,

உனது கண்களில்
வீசிய
கதிர்வீச்சால்
என்
மனச்சிறைகள்
தூளாகிறது,,,

விடுதலைக்கு
துடிக்கிறாய்
நீ
விடுவதாக
இல்லை
நானும்,,,

எப்படி விடுதலை
கொடுக்க முடியும்
என்னால்,,,

வழக்கின் மூலமே
நானாகிறேன்
வழக்குறைஞனும்
நானாகிறேன்
நீதிபதியாகவும்
நானாகிறேன்
காதலின்
சாட்சியாகவும்
நானாகிறேன்,,,

இப்படி
அனைத்தும்
நானாகி
இருக்கையில்
நம்
காதலுக்கேதடி
விடுதலை,,,

இம்மனச் சிறைச்சாலையில்
உல்லாசமாய்
உலகம் பாராத
சுதந்திரத்தை
உன்னோடு
கலந்து
கானல்
நீரினைபோல்
காதலைச் சுமந்த
என்னால் மட்டுமே
தந்திட இயலும்,,,

காதலின் கடைசி
திறவுகோல்
கல்லறை
என்பார்கள்
இல்லையென்கிறேன்
நான்,,,

என் மனச்சிறை
திறவுகோல்
உன்னிடமே
இருப்பதனால்,,,

இதுதான்
காதலின்
சாட்சியென
தீயினில்
வேகவும்
நான் தயார்,,,

திறவுகோல்
கொண்டு
திறந்துவிடாதே
காதலை
சுமக்கும்
என்மனச்
சிறையை,,,

Comments

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்