ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல்.1

சிதறும் உறவுகளால்
நிகழ்காலத்து காலவோட்டத்தினை நினைக்கையில் எங்கேயோ விழும் இடியானது மனித
தலைகளின் மீது விழுவதுபோல் பல்வேறு சம்பவங்களை இச்சமூகம்
சந்தித்துக்கொண்டிருக­்கிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு, ஆசிரியர்கள்
மாணவர்களுக்கான உறவு , இளைஞர்கள் சமூகத்துக்கான உறவு ,கணவன் மனைவிக்கான
உறவு , என்று அனைத்தும் கேள்விக்குறியாகி இறுதியில் சமூகத்திற்கும்
மனிதனுக்குமான உறவு, என்ற முடிவில் புவியுலகு நம்மைநோக்கி கேலிப்பார்வை
வீசுவதை தவிர்க்கமுடியாததாகி விடுகிறது . ஒரு குழந்தையின் அழுகுரலை
அடக்கும் தாயைபோல் அல்லாமல் நமக்கும் இந்த சமூகத்திற்கும் இருந்த தொடர்பு
நிலை முழுவதுமாக அறுந்துபோகிறது. சிதறும் உறவுகளின் காரணகாரியம் எது?
எதனால் உறவுகள் சிதைவடைகிறது ? அதற்கான தீர்வுகள் என்ன ? என்பதை
எள்ளளவும் கவனியாமல் இயந்திர வாழ்க்கையை யாரோ இயக்க பொம்மைபோல நாமும்
கடந்து போகின்றோம் அவ்வாறான மனநிலையினை மாற்றிக்கொள்ளவும் இயலவில்லை.
ஒருநூற்றாண்டுக்கு முன்னால் பிற்போக்கான சூழல்கள் பல இருந்தாலும் அடுத்த
தலைமுறையினரை வளர்த்தெடுப்பதில் முற்போக்கு சூழலுடனே வளர்த்தெடுத்தார்கள்
, ஆசான்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த தொடர்புநிலையை பாட்டி
தாத்தாக்கள் சொல்ல கேட்டிருப்போம் அவ்வளவு நெருடலாகவும்
உணர்வுப்பூர்வமாகவும்­ இருக்கும். ஆனால் இன்று ஆசான்களுக்கும்
மாணவர்களுக்கும் இருக்கும் தொடர்பினை யாரிடம் கேட்டுத் தெரிந்து
கொள்வார்களோ தெரியவில்லை. திருமணம் முடிந்த அடுத்த நாளே முதிரோரில்லச்
சாலைகளின் முகவரிகளைத் தேடும் பணியை செய்துகொண்டிருக்கிறத­ு இந்த வளரும்
சமூகம்.இதற்கிடையில் பெற்றோர் பிள்ளை, பேரப்பிள்ளை உறவுகளை பிள்ளைகளிடம்
பறிக்க மும்முயற்சியாக இம் முதியோரில்ல தேடுதல் தொடக்கமாக அமைந்து
விடுகிறது. இவ்வாறு நகரும் இச்சமூகத்தில் ஆசிரியர் மாணவர் மோதல் ஆசிரியர்
மீது தாக்குதல் , மாணவர்கள் ஆயுதங்களை பள்ளிக்கு எடுத்து வருதல்,
திருமணமான அடுத்தநாளே விவகாரத்துநோட்டீஸ், மாணவிகள் மற்றும் பெண்கள்
மீதான பாலியல் வன்கொடுமைகள், என அடுக்கிக்கொண்டே போன அடுத்த தலைமுறை
குற்றங்களின் ஆணிவேரை களையாமலும் களைய முற்படாமலும் பயணிக்கையில் நேரம்
போதவில்லை என்ற சப்பைக்கட்டு காரணங்களாலும் வாழ்க்கையை தொலைத்து
நிற்கிறது இந்தச் சமூகம். ஒவ்வொரு சாதியக் கலவரங்களிலும் சாதியம்
தவிர்த்து உயிர்கள் பலியாவதையும் நாம் கண்கூடாக
பார்த்துக்கொண்டிருக்கிறோம் இதற்கான சாத்தியக்கூறுனை உறுவாக்கிவிடும்
உறவுநிலைச் சிதறல்களை கண்டறியாமல் சமூக சமத்துவம் அமைவதென்பது
சாத்தியமாகிவிடாது . ஆகவே சமூகத்தின் உறவுகளை தக்கவைப்பதன் மூலமாக மனித
வாழ்வியலை வளமாக்கிவிடலாம். ஒட்டுமொத்த சமூகத்திற்கான உறவுநிலைச் சிதறலை
குறிப்பிடாமல் ஏன் ஒடுக்கப்பட்ட உறவுநிலைச் சிதறலை குறிப்பிட்டெழுத
வேண்டுமென எண்ணலாம் . சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின்
வாழ்வினில்தான் அதிகப்படியான உறவுநிலைச் சிதறல்களை காணலாம் . ஏன் உயர்
பணக்கார அல்லது ஆதிக்கத்தில் உறவுகள் சிதைவடைவது இல்லையா எனவும்
ஒதுக்கிவிட முடியாது முதல்படிநிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய
ஒடுக்கப்பட்டோர்களின் வாழ்வியலில் ஏற்படும் உறவுச் சிதறல்களை களைய
முற்பட்டால் தானாக ஆதிக்கம் அதன் ஆதிக்கத் தன்மையிலிருந்து விடுபட்டு
சமூகத்தின் உறவுகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் என்பதே நிதர்சனம் .
மேலும் இட ஒதுக்கீடுக்கான சர்ச்சைகள் எழும்போதெல்லாம் கிரிமிலேயர்கள்
எனப்படும் இட ஒதுக்கீட்டால் பயனுற்று தன் பொருளாதார வலிமையினால் மீண்டும்
அதே இட ஒதுக்கீடு கோருவோர்களை புறக்கணிக்கும் ஒதுக்கப்பட்டவர்கள் ஏன்
புறக்கணிக்கிறார்கள் என்கிற காரணத்தையும் அறிந்து விட வேண்டுமதனால்
ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறலாக இதற்கு தலைப்பெழுதுவதில் தவறில்லை
எனத் தோன்றுகிறது. எந்தச் சமூகம் முதலில் சிதைவடைகிறதோ அச்சமூகத்தை
எழுதுவதில் என்ன தவறு இருக்கப்போகிறது. அம்பேத்கரும், பெரியாரும்,
மார்க்ஸியமும் வர்க்கச்சுரண்டலுக்கெதிராக ஒன்றானர்வர்களே என்றாலும்
தங்களுக்கான பொருளுக்தியில் மாறுபட்டவர்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்
அதன் பொருட்டே ஒட்டுமொத்தச் சமூகத்தையும் எழுச்சியடையச் செய்தவர்கள்
அவர்களாகத்தானே இருக்கிறார்கள் ஆகவே ஒரு குறிப்பிட்டச் சமூகத்தில்
மாற்றம் நிகழாமல் ஒட்டுமொத்த சமூகத்திலும் மாற்றம் ஏற்படப்போவதில்லை
என்பதனால் தான் இதற்கான தேவையினை கருத்தில்கொண்டு ஒடுக்கப்பட்டோரின்
உறவுநிலைச் சிதறலாக எழுதப்படுகிறது.

தொடரும்........

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்