Posts

Showing posts from March, 2015

பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு?

Image
இது என்னுடைய பழைய முகநூல்(facebook)பதிவு. 4Nov2014 அன்று எழுதியது.
குமுதம் இதழில் கமல்ஹாசன் அவர்களின் பேட்டியொன்றை அப்போது படிக்க
நேர்ந்தது அதன் விளைவாக பதிவிட்டிருந்தேன். பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு?

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நல்ல (சிறந்த)நடிகர் நல்ல இயக்குநர்
சமூகசேவையில் அக்கரையுள்ளவர் அவ்வளவே அதையே காரணங்காட்டி நடிகர்
கமல்ஹாசன் பகுத்தறிவாதியென மதிப்பிடுவதென்பது
ஆகாதொன்றாக தெரிகிறது. சுய சிந்தனையில் அவர் ஒரு பகுத்தறிவாளரா என்கிற
கேள்வி எழத்தான் செய்கிறது. ஏனெனில் தொடர்ந்து தன் படங்களில் "சைவ
,வைஷ்ணவ மோதல்களை காட்டியே அவர்களுக்குண்டான இணக்கத்தை ஏற்படுத்தும்
முயற்சியில் தான் கமல் அவர்களின் சுயமாக இருக்கிறது . "எட்டில் ஐந்துஎண்
கழியுமென்றால் ஐந்திலெட்டு எண் கழியாது" "எல்லாமுடைய சிவனே போற்றி"
என்பதை வில்லத்தனமாகவும்,இதுபோன்று பல நுனுக்கமான எல்லா குறியீடுகளும்
இன்னும் அவரின் படங்களில் வரிசை கட்டிநிற்கும் இந்த இந்துத்துவ சைவ
வைஷ்ணவ சமாச்சாரங்களை திரையில் மிளிரச்செய்வதுதான் பகுத்தறிவுபோலும்
இதற்கிடையில் "கடவுள் இல்லையென்றுச் சொல்லவில்லை இருந்தால் நல்லதெனத்தான்

நுங்கு வண்டி

Image
மாற்றமில்லை
மாற்றமென்றே
மனதேற்றமில்லை
வற்றிய நீரில்
வழிந்தோடும்
கழிவுகளைபோலே
மனிதனை
நுகர்கிறது
சாலைகள்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

இவனொரு
கிராமத்துவாசிதான்
தொலைந்து
போனதே
கிராமத்தோடு
கிழக்கு வாசலும்

கோடையில்
எரியும் உடம்புக்கு
எதற்கிந்த உடை

தேவையில்லை
நுங்கு வண்டியோடு
நாங்களும்
கருத்திருப்பது
அழகுதான்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

சிறைபட்டு
பெற்றோரால்
அடிபட்டு
அவர்களெழுதும்
அதிகாரத்தில்
அடைபட்டு
வளரும்
தளிர்களை விட

ஆலமர விழுதுகளில்
ஊஞ்சல் கட்டி
ஊமைக் கனவுகளை
சாக்கில் மூட்டைகட்டி
கூட்டாஞ்சோருக்கு
கூடி நிற்கும்
எம் இளம்பிஞ்சு
குஞ்சுகளுக்கோர்
கூடு கட்டி
வாழும் பருவமேண்டும்
வழிமறித்தல்
நியாயம் தானோ

பனையோரும்
பொழுதுகளில்
பசியறியாத
வயிற்றினையும்
வந்துதைப்பது
நியாயம் தானோ
எம் பால்யத்தை
பறிப்பதில்
தானா பட்டாசு
வெடித்து
கொண்டாடுகிறீர்

வேண்டாம்
விட்டுவிடுங்கள்
இன்றைய
நுங்குவண்டி
நாளைய விமானமாகலாம்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

டாஸ்மாக்கெனும் சாக்கடையில்

Image
விரலில் மையிட்டு
விழுந்து கிடக்கிறான்
டாஸ்மாக்கெனும்
சாக்கடையில்,,,

தூக்கி தோள் கொடுக்க
கூச்சமெடுக்கிறது
அவன் வாயில்
வந்துவிழும்
வாந்தியிலும்
விழுந்த சாக்கடையின்
நாற்றம்
தெறிக்கத்தான்
செய்கிறது,,,

குடித்திருக்கிறானவன்
தன்னை மறந்து
தன்னுற்றத்தாரை
மறந்து
தன் சமூகத்தையே
மறந்து
தவழ்ந்து தவழ்ந்து
சாலையையும்
சாக்கடையாக்கி விடுகிறானவன்
ஒவ்வாத மதுவின்
வேலையிதுவென
அறிந்தும்
அவ்வப்போது அவனும்
குடிப்பெருமையும்
பேசிவிடுகிறான்,,,

இவனும் இவ்வாழ்வை
புசிக்க விடாமல்
அடுத்தவரின் வாழ்வையும்
அழித்துவிட்டு
வேகமெடுக்கிறான்
வண்டியில்,,,

விழும் மரணச்சத்தங்கள்
இவன் காதுக்கு
மட்டும்
விழவில்லையே
எப்படி?

அவன் மட்டுமா
குடிபெருமை
பேசுகிறான்
இல்லவேயில்லை
டாஸ்மாக்கில்
தன்னை விற்று
போலி மகிழ்சியில்
போதை வேண்டும்
போலி கவலையிலும்
போதை வேண்டுமாம்
இவர்களுக்கு,,,

எதுவும் நிரந்தரமில்லை
மரணம் தவிரவென தெரியாமல்,,,

மரணவேதனையானும்
மன்றாடி வாங்கிய
மதுபாட்டில் முத்தமிட்டு
மனதை இளகுவாக்குகிறதாம்
இளிச்சவாய
சமூகம்,,,

அரசும் ஆதரவாய்
நிற்கையில்
அவர்களும்
என்ன செய்வார்கள்

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .4 (பொருளாதார நிலை மற்றும் ஊடகப்பொறுப்புநிலை)

குடும்ப உறவுநிலைச் சிதறல்களுக்கு முக்கிய பங்காக மேற்கண்ட இரண்டையும்
குறிப்பிடலாம் பொருளாதார நிலை இதில் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
விடுகிறது என்று கூடச் சொல்லலாம் என்னதான் கடும் உழைப்பினை செலவிட்டாலும்
அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிலையையே மக்கள் பெற்றுள்ளனர் ஒரு
மனிதனுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவன்தன்
குடும்பச் சுமையை பிரித்தாளும் சக்தியாக மாற்றியக்கொள்ள இயலாதென்பது
இன்றையச் சூழலில் வெட்டவெளிச்சமாக்கப்ப­ட்டுள்ளது ஒரு மனிதன் தன்
குடும்பச் சுமையை இலகுவாக்க உழைக்கின்ற போது ஊதியத் தட்டுபாட்டால்
தன்குடும்ப உறுப்பினர்களை வெகுவாக தளர்த்திவிட நினைக்கிறான் அதன் பின்
தன்னுடல் தன்வாரிசு தன்மனைவி என்ற சூழலில் அவன் வாழமுற்படுகிறான் இதன்
விளைவாகத்தான் இன்று முதியோரில்லங்கள் பெருகிக்கொண்டிருக்க காரணமாக
அமைகின்றது இது நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் நடவடிக்கையாக
இருக்கின்றது இதுவே ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்கள் தனக்கே
வருமானமில்லாச் சூழலில் அல்லாது உழைப்பிற்கான ஊதியப்படி தனக்கான
குடும்பச் சூழலை தாங்கிப்பிடிக்க போதுமானதாக இல்லாநிலையில் குடும்ப

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .3 (கல்வி மற்றும் சுய அறிவின்மை)

ஒரு குடும்பம் எந்தச் சூழலிலும் சிதறாமல்
இருப்பதற்கு அவர்களின் சுயபுத்தியும்
அறிவுத்திறனும் வளர்த்தெடுக்கப்பட
வேண்டும் அதற்கு முதன்மையாக அவர்கள்
கல்வியறிவு பெறுதல் வேண்டும் ஆனால்
அக்கல்வி பெறுவதிலும்
முரண்பாடுகளை வைத்துள்ள நாம்
எப்படி சுயசிந்தனையுடன் நடந்துகொள்ள
முடியும் இதுதான் குடும்பம் இப்படித்தான்
குடும்பம் இருக்க வேண்டுமென்ற
சூழலை கல்வியறிவில்லாமல் அவர்களால்
பிரித்தெடுத்து பகுத்தாய்வு படுத்த
முடியாது இதற்கு ஆதிகாலம் முதல்
அண்மைக்காலம் வரை கல்வியில் உள்ள
ஏற்றத்தாழ்வுகளும் காரணமாக
அமைகின்றது ஒரு சாரருக்கு கல்வி கற்கும்
உரிமையும் மறுசாரருக்கு அதற்கான
உரிமை மறுப்பும்
அன்றிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது கலை இலக்கியம்
தமிழ்க்கலாச்சாரம் பேணிகாத்த ராஜராஜ
சோழகாலத்தில் தான்
தமிழ்க்கல்வி புறந்தள்ளப்பட்டு சமஸ்கிருதம்
வளர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் தான்
குருகுலக்கல்வியில் வருணபேதம்
அதிகமாக அமல்படுத்தப்பட்டதென்றும்
வரலாறு குறிப்பிடுகின்றது இது தமிழ்மொழிச்
சிதைவு என்றும் சொல்லிவிட
முடியாது தமிழுக்கும் முக்கியதும்
கொடுக்கப்பட்டது ஆனால்
சமஸ்கிரதமொழியின்
சார்பினை தமிழ்ம…

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .2 (சமூக கட்டமைப்பின் சாரம்) :

Image
உறவுகள் சிதறிக்கொண்டிருக்கும்
இன்றையச் சூழலில் அதற்கான
காரணங்களைத் தேடி புலப்படுத்த
வேண்டியது அவசியமாகிறது இதன்
மூலக்காரணி அல்லது கரு என்னவென்று பார்த்தோமானால்
முதல்தொடக்கமாக "சமூக கட்டமைப்பு" தான்
மேலோங்கி நிற்கிறது ஒரு சமூகம்
எவ்வாறு உறுவாக்கப்பட்டது அதன்
சாரம்ஸம் என்ன அது எந்தநிலையில்
உறவுச்சிதறல்களுக்கு உருதுணையாக
இருக்கிறது என்பதை நாம் அறிய
வேண்டும் அந்த நிலையில் ஒரு சமூகம்
எந்த அடிப்படையில்
உறுவாகிறது என்று பார்த்தோமானால்
பெரும்பாலும் அது நகரமாக இருந்தாலும்
சரி கிராமமாக இருந்தாலும்
சரி வளர்ச்சிபெற்ற ஒர் நவநாகரீக நகரமாக
இருந்தாலும் அவை கட்டமைக்கப்படும்
விதம் வருணாசிரம சாதியப்
படிநிலை எவ்வாறு படிப்படியாக
பட்டியலிடுகின்றதோ அவ்வாறே சமூக
கட்டமைப்பும் படிப்படியான
படிநிலைகளுடனே தான்
கட்டமைக்கப்படுகிறது உதாரணமாக ஓர்
கிராமத்தை எடுத்துக்கொண்டோமானால்
அங்கே முதலாவதாக குடியிருப்பவர்கள்
பிராமிணர்கள் இரண்டாவதாக அந்த
கிராமத்தில் எந்த ஆதிக்க சாதியினர்
(வருணாசிரம அடுத்த படிநிலையாளர்கள்)
எவரோ அவர்கள் இருப்பார்கள் இது "ஊர்"
என்று அழைக்கப்படும்
மூன்…

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல்.1

சிதறும் உறவுகளால்
நிகழ்காலத்து காலவோட்டத்தினை நினைக்கையில் எங்கேயோ விழும் இடியானது மனித
தலைகளின் மீது விழுவதுபோல் பல்வேறு சம்பவங்களை இச்சமூகம்
சந்தித்துக்கொண்டிருக­்கிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு, ஆசிரியர்கள்
மாணவர்களுக்கான உறவு , இளைஞர்கள் சமூகத்துக்கான உறவு ,கணவன் மனைவிக்கான
உறவு , என்று அனைத்தும் கேள்விக்குறியாகி இறுதியில் சமூகத்திற்கும்
மனிதனுக்குமான உறவு, என்ற முடிவில் புவியுலகு நம்மைநோக்கி கேலிப்பார்வை
வீசுவதை தவிர்க்கமுடியாததாகி விடுகிறது . ஒரு குழந்தையின் அழுகுரலை
அடக்கும் தாயைபோல் அல்லாமல் நமக்கும் இந்த சமூகத்திற்கும் இருந்த தொடர்பு
நிலை முழுவதுமாக அறுந்துபோகிறது. சிதறும் உறவுகளின் காரணகாரியம் எது?
எதனால் உறவுகள் சிதைவடைகிறது ? அதற்கான தீர்வுகள் என்ன ? என்பதை
எள்ளளவும் கவனியாமல் இயந்திர வாழ்க்கையை யாரோ இயக்க பொம்மைபோல நாமும்
கடந்து போகின்றோம் அவ்வாறான மனநிலையினை மாற்றிக்கொள்ளவும் இயலவில்லை.
ஒருநூற்றாண்டுக்கு முன்னால் பிற்போக்கான சூழல்கள் பல இருந்தாலும் அடுத்த
தலைமுறையினரை வளர்த்தெடுப்பதில் முற்போக்கு சூழலுடனே வளர்த்தெடுத்தார்கள்
, ஆசான்களுக்கும் மாணவர்களுக…

ஹைக்கூ "அவளே வரைகிறாள்"

Image
நிழலில்
இலைச்
சருகுகள்
நிர்வாண
கோலத்தில்
மரம்
____

அஞ்சும்
கரும்புனல்
எங்கே
வடித்தோம்
சிற்பத்தை
தேடுகிறது
மரங்கொத்தி
____

அவளை
அவளே
வரைகிறாள்
வாசலில்
கோலமாக
____

சிசுக்கள்
சுவாசிக்குமுன்
வெடித்து
விட்டன
வன்முறைகள்
___

பேருந்துக்கு காத்திருக்கவில்லை நடைபாதை
எறும்புகள்
___


கருப்பு ரோஜாவே நிகரானவளும் மனமொடிந்ததால் முதிர்கன்னி
ஆனாயோ
___

அதிகாரத்தோடு
கேட்கிறான்
பிச்சைக்காரன்
வரதட்சணையை

___*___

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஐடி 66ஏ?

Image
தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 எ செல்லாது அரசியல் அமைப்பு
சட்டத்திற்கு முரண்பாடாக உள்ளது - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு ... !
இப்படியான நற்செய்தியினை கேட்டு இச்சட்டத்திற்கெதிராக­
முகபுத்தகத்திலும்,ட்­விட்டரிலும் எழுதிவந்தமையால் ஒரு வாழ்த்துப்
பதிவினை போடலாமென்று இரண்டு சமுக வலைதளங்களையும் திறந்தேன் . என்னைப்போலே
பலரும் கருத்துரிமை வென்றதென உச்சநீதிமன்றத்திற்கு­ நன்றி
தெரிவித்திருந்தார்கள­். அந்நன்றியின் விதம் தான் மிகவும் ஆபத்தாக
அமைந்திருக்கிறது.
பெரும்பான்மையான சமூக வலைதள பதிவர்கள் இனி சுதந்திரமாகச் செயல்படலாம் ,
யாரையும் எப்போது வேண்டுமானாலும் வம்பிழுக்கலாம், அவர்களின் மீது
ஆணித்தரமான அவதூறுகளை பரப்பிவிடலாம் என்கிற பானியிலேயே
எழுதியிருக்கிறார்கள்­. வேதனையிலும் ஆச்சர்யமானதொன்று என்னவெனில் அவர்களை
அவர்களே பழித்துக்கொள்ளுதல் எப்படி இவர்களால் செய்யமுடிகிறது என்பதுதான்.

யானை தன்தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளுமாம் அது ஆணவத்தாலோ
கிருக்குத்தனத்தாலோ அல்ல அதன் உடம்பில் வாழ முற்படும் ஒட்டுண்ணிகளை
அழித்திடவே அப்படிச் செய்கிறது . ஆனால் மனிதன் தன் தலையில் தானே
மண்ணள…

ஹைக்கூ "ஒரே குடையில்"

Image
துரத்துகிறேன்
தூங்க மறுக்கிறது
காதல்
விடியற்காலை
கனவுகள்
___

விழித்தெழுந்த
கண்
வாசலில் கோலம்
உணர்ந்த
நிமிடங்கள்
உறங்காத
பெண்ணினம்
____

இரவு
நட்சத்திரங்கள்
அப்படியே
அம்மாவின்
மடியில்
____

எழுந்திரு
வயல்வெளி
அழைக்கிறது
அடுத்தநாள்
விலைநிலமாக
____

புலம்புதை
நிறுத்தவில்லை
நிலா
அவளை மட்டுமே காதலிப்பதால்
____

கண்கசங்கி
பனிதுளிகள்
இன்னும்
பூமிறங்காமல்
கதிரவன்
___

குடை
மிளகாய்
இனிக்கிறது
வாழ்ந்துதான்
பாருங்களேன்
___

மகிழ்சியில்
மரத்து
வேர்கள்
ஒரே குடையில்
நனைகிறது
பூக்களும்
இலைகளும்
____

கானாதொன்றை
கண்டது
சாலைகள்
எங்கும்
மரணத்தில்
தூவிய
மலர்கள்

____***_____

அவளின் சொல் வீச்சம்பு

Image
சொல் வீச்சம்புகளை
என்மீது வீசிவிடுகிறாள்
அவள்
என்ன செய்வதென்றே
தெரியவில்லை
எனக்கு

எங்கேயோ எழுதிவைத்த
ஏகாந்த வசனங்களை
என்னுள்ளே புதைக்கிறேன்

எங்கே கோபமிருக்கிறதோ
அங்கேதான்
வாழுமாம் அதீத அன்பு

மனதை தேற்றுவதில்
மயக்கமென்ன
வரவாப்போகிறது

சொல்லம்பை திசைதிருப்ப தென்றதலைத்தான்
துணைக்கழைக்கவா

சொல்லடி எனை சூரியனைபோல
சுட்டவளே

அடுத்த வாசகம்
படித்த பொழுதுகளில்
விடிவதே நரக
வேதனையடி
எனக்கு

யாதொருவரிடமும்
அளவோடு அன்பை
செலுத்தி விலகுதலில்
விடியலை தேடிடலாமாம்
திருத்தம் செய்துவிட
திண்டாடிக் கொண்டிருக்கிறேன்

உன்மீதான அதீத
அன்பினில்
அளவையை எப்படி
என்னால்
செலுத்திவிட முடியும்

சிறகொடிந்த பறவைகள்
சிங்காரித்து அழகுபார்த்திடவே
அனைத்துள்ளமும்
துடிக்கிறதே அன்றி

அதன் சிறகினில்
ஓரலகை எடுத்து
காயமுற்றதில்
இதமாய் தடவிடத்தானோ
யாருமில்லை
இங்கே

உன்னைக்கண்டேன்
உலகின் ஒளியாய்
கூண்டில் அடைக்கவில்லை
நீ

சிறகுகளை சேகரிக்கிறாய் அம்மியில்
மருந்தையும் நீயே அரைத்தெடுத்து
அழகான சிறகின் வலியையும்
தூரெறிகிறாய்
துடிக்கிறதென்
மனது

கருணையினை
நீ சுமந்து
காய்ச்சிய கம்பியினால்
என…

பெற்றோர்களே உயர்வாக தங்களை காட்டிக்கொள்ள பிள்ளைகளை பலியிடாதீர்கள்

Image
எனது குடும்பம் அப்போது நடுத்தர
வர்க்க குடும்பம்தான்,அ ரசுடன்
இணைந்த தன்னாட்சி கிருஸ்த்துவ
பள்ளியில் நான் படித்தேன் . சிறு
வயதில் சைக்கிளை ஓட்டும்
பயிற்சிக்காக பக்கத்தில் இருக்கும் ஒரு
பாய் கடைக்குச்சென்று பள்ளி
வேளைநாளில் பெற்றோர் கொடுக்கும்
கைச்செலவு காசினை அப்படியே
சேமித்துவைத்து எப்போது சனிக்கிழமை
வருமென காத்திருந்து விடிந்தவுடனே
ஒரு மணிநேரத்திற்கு பத்துரூபாயென
பாயிடம் சைக்களை வாடகைக்கு
எடுத்துக்கொண்டு படாத
அடிகளெல்லாம் பட்டு அந்நாளை
கழிப்பது என்பதே அலாதி பிரியம் தான்
(வாடகை சைக்கிளுக்கு வெள்ளி இரவே
பலபேர் முன்பதிவு செய்துவிடுவார்க
ள்) அப்படியாக சைக்கிள் ஓட்டக்
கற்றுக்கொண்டு வீட்டில் சைக்கிள்
வாங்கிக்கொடுவென அடம்பிடித்தால்
அடிவிழும் . அடிவிழாத நேரம் அது
தேர்வு நேரமாகத்தான் இருக்கும்
நிபந்தனைகளுடன் சிரித்துச் சினுங்கி
கொஞ்சிபடியே அப்பாவும் அம்மாவும்
சொல்வார்கள் ."செல்லம் படிச்சி நல்லா
மார்க்கெடுத்து பத்தாவது பாஸாகி
ஏரியாவுல முதலாளா வருவியாம்
அப்பா உனக்கு சைக்கிள்
வாங்கித்தருவாரு ம்"இப்படியாக ஓடும்
பாஸாகியும் சைக்கிள் வராது
மதிப்பெண் குறைவு அ…

திக அறிவித்த தாலியறுப்பு மாட்டிறைச்சி போராட்ட அறிவிப்பு காது கொடுப்பார்களா கருத்துக்களுக்கு

Image
வருகின்ற ஏப்ரல் 14 அண்ணல்
அம்பேத்கர் பிறந்தநாளன்று
மாட்டிறைச்சி மற்றும் தாலியறுப்பு
போராட்டத்தை நடத்தப்போவதாக திக
தலைவர் தோழர் பேரா. வீரமணி
அவர்கள் அறிவித்திருக்கி றார் .
அதன்பொருட்டு திக வின் அனைத்துத்
தோழர்களுக்கும் மற்றும்
முற்போக்காளர்கள ுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டு போராட்ட களத்தில்
ஒன்றினைந்து செயல்பட புறப்பட
தயாராகிறார்கள். இங்கு தமிழகத்தில்
இப்போராட்டத்தின ் அவசியக்
காரணங்கள் நாம் அனைவரும்
அறிந்ததே,,மகாரா ஷ்ட்ர மாநில
மாட்டிறைச்சி தடையினை
நீக்கக்கோரியும் , அத்தடையினை
உடனே தமிழகத்தில் செயல்படுத்த
துடிக்கும் இந்துத்துவ
பாசிஸ்ட்டுகளை எதிர்த்தும்,மார ்ச் 8
ம் தேதி உலக மகளீர் தினத்தன்று
மகளீர் "தாலி"குறித்தான புதிய
தலைமுறை தொலைகாட்சி விவாத
நிகழ்சிக்கெதிரா க ஊடகவியளாளர்
தாக்குதலும், அதனைத் தொடர்ந்து
அத்தொலைக்காட்சி அலுவலக டிபன்
பாக்ஸ் வெடிகுண்டுச் சம்பவத்தை
நிகழ்த்திய இந்துத்துவ ஆர்எஸ்எஸின்
பாசிசப்போக்கினை கண்டித்தும்
இப்போராட்டம் அறிவிக்கப்பட்டத
ு."தாலியறுப்பு"
திகவின் தாலியறுப்பு போராட்டத்தை
ஆதரிப்பதற்கு முன் அதன் மீதான
விமர்சன…

மாட்டிறைச்சியும் மனித மனங்களும்

Image
இங்கே மகாராஷ்ட்ர மாட்டிறைச்சித் தடை குறித்து எழுதப்போவதில்லை அது
குறித்து பல்வேறு பதிவர்கள் மாட்டிறைச்சி தடையினை ஆதரித்தும் எதிர்த்தும்
பதிவிட்டிருக்கிறார் . ஒவ்வொரு மனங்களும் ஒரே மாதிரியான சிந்தனையில்
இருப்பதில்லை அதனால் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவதில் எதை அதிகப்படியான
வருகையாளர்கள் வாசிக்கத்தொடங்குகிறா­ர்களோ அதுவே சமூகமாற்றத்திற்கான வழி
. இன்றைய தினத்தின் தகவலின் படி மாட்டிறைச்சி தடைக்கெதிகராக பொதுநல
வழக்குகளும் போடப்பட்டுள்ளது என்பதை தெரியபடுத்தியிருக்கி­றார்கள்
விரைவில் ஏதேனும் தீர்வு எட்டப்படுமோ அல்லது வெட்டப்படுமோ சட்டமியற்றிய
மகாராஷ்ட்ர மாநில அரசிடமே விட்டுவிட்டு வந்து விடலாம் .
"எனக்கு மாட்டிறைச்சி மிக பிடிக்கும் வாரத்தில் ஒரு நாளேனும் மகிழ்சியாக
சமைத்து சாப்பிட்டு விடுவேன்"
பொறுங்கள் இன்னும் சில நொடிகளில் மனித மனங்கள் பேசத்தொடங்கும்,
மேற்குறிப்பிட்ட விருப்பத்தகவலை கண்டதும் விரைவாக உங்களின் மூளை
செயல்பட்டு "இவன் இன்னகுலம்,இன்னகோத்தி­ரம், இன்னசாதி, இன்னபிரிவென்று
உடனே வகுத்து பல கணக்குகள் மனதில் போட்டு உடனே தீர்வை எட்டிவிடுகிறது
பார்த்தீர்களா, இது த…

சங்கராச்சாரியார் வாய் திறக்கிறார் எடு சர்க்கரையை

Image
இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று இதில்
ஆணுக்குப் பெண் சமம்
ஆணால் முடியுமென அனைத்தும் பெண்ணால் முடியுமென் பெண்ணினம் தற்போது தான்
மெய்பித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தியா வல்லரசை
நோக்கி பயணித்துக்கொண்டிருக்­கிறது . ஆனால் இந்தியா எப்போதும்
பிற்போக்குச் சிந்தனையில்தான் பிழைப்பை ஓட்ட வேண்டும் . அதற்கு மாறாக
முற்போக்குச் சிந்தனையில் பெண்ணினிம் போகக்கூடாது அவ்வாறு பெண்ணினம்
செயல்படுதவதென்பது இந்துத்துவ மதத்திற்கு எதிரானது என்று வாய்கிழிய
கத்தும் இந்துத்துவ வாதிகள் தான் "இந்து மதம் பெண்ணினத்தை போற்றிக்
காக்கிறது" என்று வாய் கூசாமல் புளுகுமூட்டையை அவிழ்த்துவிடுகிறது .
பெண்ணினத்தை அடிமைபடுத்துவதில் உலக மதங்கள் அனைத்தும் ஒரேச்
செயல்பாட்டினை கொண்டிருந்தாலும்"இந்­துத்துவம்" அதற்கும் மேலாக ஒருபடி
பிற்போக்குத்தனங்களில­் முன்னேறியிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.
"விதவை பெண்கள் "தரிசு நிலம்"
வேலைக்கு போகும் பெண்கள் "விபச்சாரிகள்"
-சங்கராச்சாரியார்-"
இது இந்துத்துவத்தை கட்டிக்காத்திடும் பிற்போக்குவாத மதத்தலைவரின்
வாயிலெழு…

வேர் முளைத்த விழுதுகள்

Image
மரங்கள் தவமிருக்கின்றன
மனிதன் வெட்டாமல்
இருப்பதற்கு,,,

இப்பிரபஞ்சத்தில்
பாலூட்ட தாயேதும்
கிடைக்கவில்லை
என்பதால்தானோ
கிழக்கில் உதிக்க
சோம்பல்படுகிறான்
இளஞ்சூரியன்,,,

எத்தனை எத்தனை
மலர்கள் தாய்மரம்
முன்னே தரையோடு
மடிந்து கிடக்கிறது
தயவுசாட்சனை
பார்ப்பதிலென்ன
தன்மானமா போய்விடப்போகிறது
மனிதா,,,

பிரளய பிம்பங்களை பிய்த்துப் பார்த்துப்
பேசாத சிற்பமாய்
போலி முகங்கொண்டு
பிரகாசிக்கிறாயே
மனிதா,,,

தேவதைகளான
மரங்கள்
உனக்கு மட்டும்
பேயாக தெரிவது
ஏனோ,,,

நாடு வளம்பெற வேண்டுமெனில்
மரத்தின்
வேர்களில் பூஜையிடாதே
அது புரட்டுக்கதைகள்,,,

மஞ்சளாடை மரத்திற்கு
அணிவிக்காதே
அது மூடத்தனத்தின்
உச்சமென எண்ணிவிடு,,,

ஒருவன் உழைக்க
மறுத்து உருவத்தை
சிதைக்கிறான்
வேரின் விழுதுகளில்
கோடரி கொண்டு
சாமி இங்குண்டென
சாம பொழுதில்
புளுகுகிறான்,,,

திருந்த மாட்டாயோ
மனிதா
என்னைய அழிக்கிறாய்
இதோ நாங்கள்
ஒன்றுகூடி உங்களை
அழிக்கப் போகிறோம்
ஆக்ரோஷ வார்த்தைகளோடு
மரங்கள் புரப்பட்டால்
மனிதா ஆயிரமென்ன
பல்லாயிரம் யுகங்கடந்தாலும்
இத்தாய் மண்ணில்
கானாமல் போய்விடுவாய்,,,

கண்களைத் திற

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா திண்ணியம்?

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா திண்ணியம்? தொடர் சாதிய வன்கொடுமைகளுக்கு பலியாவதை விட இம்மண்ணை விட்டு மரணத்தைத்தேடி செல்வதே காலச்சிறந்தது . எத்தனை வலிகள் சுமந்தாலும் இவர்கள் அடிமைகள் இவர்களை அடிமைபடுத்துவதே முறையென்று தங்களின் ஆதிக்க அடக்குமுறையை மென்மேலும் செய்துகொண்டே இருக்கிறார்கள் இவர்கள்தான் இம்மண்ணின் மைந்தர்களென வலம் வரும் தமிழர்கள். தங்களின் இந்துத்துவம் கண்டெடுத்த மனுசாஸ்த்திர வருண சாதியத்தை அழியாமல் காத்துக்கொள்வதில் அப்படியென்ன தேவை இருக்கின்றதோ தெரியவில்லை. சாதியத்தை எதிர்த்து இங்கே எவ்விதமான எழுத்துகளும் இல்லை அவ்வாறு எழுதாதவர்களுக்கு அச்சாதியிலேயே அடக்குமுறை ஏதேனும் வந்தால் மட்டும் உடனை "இது பெரியார் பிறந்த பூமிடா" என்று போலிப்புரட்சி மொழி பேசுவார்கள் . உண்மையில் இவர்கள் பெரியாரையும் , மார்க்ஸியத்தையும், அம்பேத்கரியத்தையும் எழுத மறுப்பவர்கள். இந்நிலைதான் இன்றை தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது. சாதியத்தை எதிர்த்த எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்களை மறைத்தே வைத்திருக்கிறது இந்தச் சமூகம் . மார்க்ஸியத்தை பேசுவோர் மாவோ வை பேசுவதில்லை ,பெரியாரியத்தை பேசுவோர் அம்…

வளர்ந்து விட்டேன்

Image
வளர்ந்து விட்டேன்
வானுயரத்தில்
விமானம் பறந்தால்
இன்னமும் எட்டிபார்த்துவிட
ஏங்குகிறது மனது

வளர்ந்து விட்டேன் செடிகளின்
அடர்த்தியில்
மறைந்துள்ள ஓணானை இன்னமும்
தூரோகக்
கண்ணோடு
பார்க்கத் தூண்டுகிறது மனது
அணில்தான் கருணையின் பிறப்பிடமாம்

வளர்ந்து விட்டேன்
திரண்ட கூட்டத்தின்
நடுவே
திருவிழாவை
மறந்துவிட்டு
சின்னச் சின்ன திருட்டுகளை
இன்னமும்
செய்யச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் வாழ்க்கையே விளையாட்டாகிவிட விளையாடும்
தருவாயில்
இன்னமும் போங்காட்டம்
ஆடச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் இன்னமும்
ஆணோடு பெண்ணும்
பெண்ணோடு ஆணும்
பழகுவதை சந்தேகத்துடனே பார்வையை திருப்பச் சொல்கிறது மனது

நான்
வளர்ந்துவிட்டேனா
எனும் கேள்வியை
மனதிடம் வைக்கையில்

இளம்பருவம் எதை வியப்பில் ஏற்றியதோ அதுவாகவே நீயிருக்கிறாய் அதுதவறில்லை

நில்!

இறுதியாக ஒன்றைச் சொன்னாயே உடன்படவில்லை
நான்

இன்னமும் வளராத
ஆறறிவு வெற்றுடம்புதான் நீ
வளரவேயில்லை
வளரவிடவும்
முயன்றதில்லை

முகத்தைப்பார்
ஆணுக்கு பெண்
பெண்ணுக்கு ஆண்
அப்படியே கண்ணாடித் திரையில் தெரியும்

விலகிப் போ
சந்தேகப் பார்வையை விட்டொழிந்த…

கைபேசி அழைப்பொலியும் தொந்தரவும்

Image
நாம் ஏதேனும் விஷயங்களை செயல்படுத்த யோசிக்கும் பொழுது நமக்கு முன்னரே
நமது கைகள் முதலில் தேடுவது கைபேசியைத்தான்
என்றாகிவிட்டது மனிதச் செயல்பாடு. எங்கும் எதிலும் மைல்கல்லாக அமைந்து
விட்ட கைபேசியானது மனிதனின் அறிவியல் படைப்பில் மகத்தானது . இன்னும்
சிறிது காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எதுவென மாணவர்களிடம்
மதிப்பெண் வினா? எழுப்பினால் . "ஸ்மார்ட் போன்" என்றெழுதி அதற்கு ஏன்
மதிப்பெண் வழங்கப்பட வில்லையென ஆசிரியரை மிரட்டினாலும் மிரட்டுவார்கள்
இல்லையெனில் கத்தியாலும் குத்துவார்கள். இது உலக நடப்பு .
சரி விஷயத்திற்கு வருவோம் . கைபேசியை எங்கெல்லாம் எப்படியெல்லாம்
பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் சில வரைமுறைகள்
உள்ளது . உதாரணத்திற்கு எரிபொருள் வங்கிகளில் கைபேசி பேசத்தடை,
மருத்துவமனைகளில் கைபேசி பேசத்தடை, வங்கிகளில் கைபேசி பேசத்தடை , இன்னும்
இவ்வாறான பல வரைமுறைகளை நமக்கு நாமே வகுத்துக்கொள்கிறோம் அதன் அவசியம்
உணராதவர் பயன்படுத்திக்கொண்டேத­ான் இருக்கிறார்கள்
அவ்வாறுதான் "பொதுக்கூட்டங்களிலும­்
கலை இலக்கிய அவையிலும் கைபேசி பயன்படுத்தப்படுகிறது­"
இப்போது எதைப்பற…

பூக்களின் மௌனம்

Image
வண்டுக்குத் தேனாக
பூஜைக்கு மலராக மங்கையர்க்கு
மாலையாக

மறைந்துபோன
மனிதச் சொல்லாடல்
மறைந்து போய்
பிணமென பெயரிட்டதில் மலரஞ்சலியாக

பல கோண
காட்சிதரும்
பூக்களே
நீங்கள் மட்டும்
மௌனம் சூடிக்கொண்டதேனோ!

ஏதேனும் காரணமுண்டோ
மௌனம்
கலைத்துவிட
வழியேனுமுண்டோ

சூரியக் கருவறையிலே
கல்லறையாகாதோ
பூக்களே உங்களின்
மௌனம்
இதழ்களின்
மௌனம் கலைத்து இருண்டுலகில்
வெளிச்சம் பரப்பலாம்

இன்னும் சாதனைகள்
பலபுரிய
பாறையான மனதை
பக்குவமாய்
திறந்தெழுந்து
நீங்கள் சூடியுள்ள உங்களுக்கு
சூட்டிய
மௌன மாலையை
இப்போதேனும்
அவிழ்த்து வீசிவிடுங்களேன்

மௌனமாய்
மலர்ந்தது போதும்
மலர்களே
எழுந்திருங்கள்
பிறவி எடுத்ததே
பிழைக்க வழிதேடத்தானே
பரந்த பூமி
அழைக்கிறது

ஓய்வை விரும்பாதவர்கள் நீங்கள்
சிரித்து மகிழுங்களேன் மலர்களே கொஞ்சமேனும் மௌனம்
களையுங்களேன்!

விழிகளின் வெளிச்சத்தில்

Image
விழிகளின் வெளிச்சத்தில்

பிரியமானவளே
உனக்கொரு
இனிய
எச்சரிக்கை
இம்சையெனவும்
பாவித்துக்கொள்,,,

நடுநிசியில்
என் கனவினில்
உன்னதக்
கதவுகளின்
வெளிச்சத்தில்
உன் விழிகளை
திறந்து காட்டி
என்னிமைகளை
திறக்கும்
முயற்சியில்
மூழ்கிப்போகாதே,,,

உனது
விழிகளின் வெளிச்சத்தில்
விடிந்துவிட்டதென
என் வீட்டில்
உள்ளவர்கள்
எழுந்து விடப்
போகிறார்கள்!

உன் இமைகள் எப்போதும்
மூடியே இருக்கட்டும்
கனவிலும்
உனை விட்டு
விலகிடமாட்டேன்
நான்!

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம்

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம்

எப்பொழுதும் மக்களுக்கான அவசியப் பணிகளையும் அடிப்படைத் தேவைகளையும்
பூர்த்தி செய்திடவே "அரசு" என்கின்ற அதிகாரத்தை மக்கள்
தேர்ந்தெடுக்கிறார்கள­். ஆனால் தொடர் சர்வாதிகார போக்கில்
முதலாளித்துவமாக அரசு செயல்படும் போதுதான் போராட்டம் என்கிற ஒன்றை மக்கள்
கையிலெடுக்கிறார்கள் . அதன் அவசியத்தை ஆளும் அரசு நினைத்தால் தக்கத்தொரு
தீர்வினை மக்களுக்கு அளிக்கலாம் .ஆனால் ஆளும் அரசானது தொடர் மக்கள் விரோத
போக்கினை கைவிடுவதாகத் தெரியவில்லை.
தமிழகத்தை பொருத்தமட்டில் இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கெதிரான
போக்கினை கையாள்வதில் ஒன்றுக்கொன்று பிணைப்புடனே செயல்படுகிறது .
வெளியுலகத்தில் இத்திராவிட கட்சிகள் எலியும் பூனையுமாக தெரிந்தாலும்
உள்ளுக்குள் மக்களை அடக்கியாளும் முதலாளித்தவ யுக்தியினைத்தான்
கையாள்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் நமக்கு எழுந்திடவில்லை.
இவ்வுலகில் ஆரோக்கிய உடலமைப்பை கொண்டுள்ள மனிதர்களே வாழ்வாதாரத்திற்காக
தங்களின் வாழ்க்கையை தொலைத்து வறுமையில் வாடுகின்றச் சூழலில்,
உடற்கூறு குறைபாடுடைய கண்பார்வையற்றோரின் நிலமை எப்படியிருக்கும…

உதடுகள் காமத்தை பேசட்டும்

Image
என் வலைப்பூவில் நுறாவது கவிதையிது
இதுவரை எனை எழுதத் தூண்டிய என் வலைப்பூவின் "வருகையாளர்கள்" அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன். "அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் நன்றி!" கொஞ்சம் தாமதமாகத் தான் நான் வலைப்பூவில்
எழுதத் தொடங்கினேன் . அதற்கான வாய்ப்பு அப்போது அமையாவிட்டாலும் இப்போது
அமைந்ததை எண்ணி பெருமகிழ்சி அடைகிறேன் . கவிதைக்கு இனி நகரலாம் ."உதடுகள்
காமத்தை பேசட்டும்"

சுவற்றில்
ஒட்டுண்ட
பல்லி போல
படுக்கையில்
உன்னோடு
ஒட்டிக் கொள்கிறேன்,,,

என் ஆடைகளை
அவசரபடாமல்
அவிழ்கிறதுன்
கைகள்,,,

ஆடை விலகிய
வெட்கத்தில்
கண்மூடுகிறது
வானம்,,,

கூச்சத்தின்
உடலசைவை
ஊமை விழிகளால் நோட்டமிடுகிறாய்
நீ,,,

உன்
விரல் கோதும்
என் கூந்தலில்
வானம்
உடுத்திய கார்மேக உடைகளின்
கூட்டங்கள்
விளையாடுகிறது,,,

உடைகள்
விளையாடுவதை
சொக்கிய
இன்ப
மயக்கத்துடனே
ஓரக்கண்ணால்
நானும்
ரசித்துவிடுகிறேன்,,,

உச்சந் தலையில்
தொடங்கிய
முத்தம்
மெட்டியொலியில் சங்கமிக்கிறது
மெதுவாக
என் உடலெங்கும் வெதுவெதுப்பாய்
பரவுகிறது
போதவில்லை
என்கிறது
பு…

காலி வயிறு

Image
வயிற்றுக்கும்
வாழ்வுக்கும்
இணைப்புப்
பாலமான
இயற்கையே

இருப்பதை உண்டு
இல்லறம் பேண
எங்களுக்கும்
ஆசைதான்

என்ன செய்ய
உழைத்து
வியர்த்த உடம்பில்
உயிரை
வஞ்சிக்கிறது
உருண்டை
உலகத்தில் ஓரினம்

முதலாளி
என்றொரு பெயர்
இனத்திற்கு
பொருத்தம்தான்

துயரம் துடைக்கப்
புறப்படும் எம்மின
பெண்களின்
கற்பினை கேட்கிறது
முதலாளியினம்

அடங்காத பசிவேறு
அலைய வைக்கிறது
எம்மின குழந்தைகளை

அலைகடலில்
நுரை
ததும்புதல் போல
அரளி விதையால்
உயிர் துறக்கிறார்கள்
அவர்களும்

தற்கொலை என்கிறார்கள் பலர்
பட்டினிக் கொலையிதுவென்று
பார்வையை
திருப்புவார்களா
எனவும்
தெரியவில்லை

விவசாயம்
விட்டொழித்து
விழுமங்களை
சேகரித்து
நகர்புறம் தொலைய
எத்தனிக்க
எண்ணிடும்
போதெல்லாம்
எட்டி உதைக்கிறது
எங்களின்
வி(லை)ளைநிலம்

அனாதைக்கு
ஆதரவு தாராயோ
நகர் புறம் நோக்கி
நீங்களும்
போகலாமோ
எனை உழுவதை
தவிர வேறொன்றும்
தெரியாதே
உங்களுக்கென
புலம்பித் தள்ளுகிறது
பூர்வீக விளைநிலம்

பட்டம் பெற்ற
பலகோடி இளைஞர்களும்
அயல்நாடைத்
தேடி
அழிந்துபோனார்கள்
அணையா
விளக்காக எங்கும்
விரித்தோங்குகிறது
முட்புதற் காடுகள்

தவற…

தாய்த் தொடுதலின் தேடல்

Image
தாய்த் தொடுதலின் தேடல்


மெய்யுடல்
மேம்பட்டிருந்தது
யார் முதலில்
தொடுவதென்பதில் தூரிகை
தாமதித்துதான்
போனது

புத்தம் புதிதாய்
பூமிபார்த்தவுடன்
அழுவதில்
ஆனந்தமே
அணைத்து கொள்ள
எனதருகே
நீயிருக்கையில்

நான் எதை முதலில்
தொட்டிருப்பேன்
தெரியவில்லை
இதய துடிப்பு
யூகித்துக் கூறிற்று

இவன் என் குழந்தையென
காட்டிய
ஆள்காட்டி விரலைத்தானே
முதலில் நான்
தொட்டிருப்பேன்

மொட்டவிழ்த்து
முகமலரும்
மலரை போல
என் முகமப்போது
மலர்ந்தது தானே

சொல் அம்மா
எப்படி உணர்ந்தேன்
உன் முதல்
தொடுதலை
நான்

திங்களவனை
வணங்கி
வாழும் உயிர்களில்
அன்பு நிறைந்தோடும்
ஆகாச வெளி
உறவுகள்
ஒன்றோடொன்று
ஒட்டிக்கொள்வதுபோல்
உயிர் கொடுத்தாளே
இயற்கை அன்னை
அவளை விடவும்
அழகாய் நானும்
சிரித்தேனா?

இல்லை
ஏழைத்தாய்க்கு
பிறந்து விட்டோமென
எண்ணெயில்
வெடிக்கும்
கடுகுகளாக
வெடித்துக்
காரந்தள்ளும்
சினமுகத்தோடு
இருந்தேனா?

இல்லை
மழைவராத
மேகம் பார்த்த
மயில் சோக
முகத்தோடு
இருந்தேனா?

சொல் அம்மா
எப்படி உணர்ந்தேன்
உன் முதல்
தொடுதலை
நான்

வாய்வராதே
உனக்கு
எப்போதும்
நான் சிரித்திட
வேண்டும்
அதை நீயும்

மனதும் மலரிதழும்

Image
மாற்றத்தை
மாலையாக
கோர்க்கிறது
மனது,,,

என்ன விந்தையிது!
மலர்களில்
கூடவா
வெட்கம்
கசியும்,,,

வியப்பில்
விழுந்த
மனதை
மலரிதழ்
மடியினில்
தாங்கியது,,,

மனதோடு
மலரிதழ்
இனிக்கும்
லீலைகளை
தொடங்கியது,,,

ஊரைசுற்றி
ஒரே இறைச்சல்
மனதில்
மட்டும் மௌன
அமைதி,,,

மனதை விட்டு
விலகிச் செல்கிறது
சுற்றியிருந்த
விழிகளின்
மௌனம்
இரண்டும்
மனம்விட்டுப்
பேசுவதனால்,,,

மெல்ல
அவிழ்க்க
தொடங்கியது
அதற்கான
மொழியை
மலரிதழ்
மனதிடம்,,,

என்
மலரிதழில்
வெட்கம்
கசிவதை
கண்டாயே
மனதே,,,

வேறொன்றுமில்லை
உன் மனதிற்கு
பிடித்தவளே
என் மலரிதழில்
முத்தமிட்டாள்,,,

அவளின்
கைகள் என்னை
பறிக்க
மறுத்துவிடுகிறது,,,

என்தாய்
செடிவேருக்கும்
எனக்குமிருந்த
உறவை
மீட்டெடுக்கவே
அவள்
கூந்தலுக்கு
என்மீதிருந்த
ஆசையை
அடக்கி பொய்க்கோபத்தை
கூந்தலின் மீது
தெளிக்கிறாள்,,,

ஈரக்கூந்தலின்
நீலிக்கண்ணீரில்
அவள்
முதுகும்
நனைந்திடக்
கண்டேன்,,,

அவள் முத்தமிட்ட
நொடி பொழுதில்
என் விரிந்த
இதழ்கள் தான்
இவைகளை
எல்லாம்
நோட்டமிட்டது,,,

மனது கசியும்
வெட்கத்தை
இப்போது
மலரிதழ் கண்டது,,,

இரண்டும்

எது தாய்மை

Image
"எது தாய்மை"

விட்டில் பூச்சிகள்
வீடெங்கும்
நிறைந்திருக்க,,,

உள்ளே
நுழைந்தவளோ
விளக்கேற்ற
மறுக்கிறாள்,,,

முற்றிப்போன
வாசல் மரத்திலோ
முளைக்க
துடிக்கிறது
முதுமையின்
சித்தாந்தங்கள்,,,

அவளும் பெண்
இவளும் பெண்
இருவரும்
நின்றார்கள்
அமைதியை
தொலைத்து,,,

அடிக்கடி
வெடிக்கிறது
சமையலறை
அடுப்புகள்
இது அவளுக்கு,,,

உதவாத பொருளெல்லாம்
ஓரிடத்தில்
தஞ்சம் புகுவதுபோல
முடிவினில்
முதியோரில்லம்
இது இவளுக்கு,,,

கூட்டுக்
களவாணியவன்
இரண்டிற்கும்
இசைந்து
கொடுக்கிறான்,,,

குடும்பம் சிதையுண்ட
குப்பை மேட்டில்
குழந்தை,,,

தாய்ப்
பாலில்லை
தவிக்கிறது
குழந்தை
அழகை
மெழுகேற்றுகிறாளாம்
அவள்,,,

நோயுற்று
தாய்ப்பால்
தெம்பற்று
மெலிந்தே வளர்கிறது
குழந்தை,,,

முடிவென்ன
தெரியுமா?
முற்றத்து கொட்டகையில்
கூட
அவளுக்கு
இவளுக்கும்
அவனுக்கும்
இடமில்லை,,,

இப்படியே
தொடர்கிறதே
இரக்கமற்ற
ஈன
வாழ்க்கை,,,

இப்போது கூட
விடியலாம்
தாய்க்குலமே
தாய்மையை
கைவிடாதீர்கள்,,,

பெண்ணிற்கு
பெண்ணே
எதிரியாம்
எழுதியவனின்
பேனா
உடைய வேண்டாமா,,,

தாய்ப்பாலில் தானே
தாய்மை உணர்வு
சிற…