முகநூலின்(facebook) 3முகங்கள்

எங்கேனும் காலம் கொடுத்த வரமாக தீடீரென நம் சொந்தங்களையோ , நண்பர்களையோ
சந்திக்க நேரிடுகையில் நாவிலெழும் நலவிசாரிப்புக்குப் பதிலாக முதலெழும்
வார்த்தை "பேஸ்புக்கில் இருக்கீங்களா" என்பது தான் , இன்னும் விடைபெறும்
பொழுது கடவுச்சொல்லை கொடுப்பீர்களா? என்று கேட்பார்களோ! என்கிற
பயத்திலேயே கடந்து போகிறது அச்சந்திப்பு ,அப்படியான சூழலில் தான்
இன்றையச் சமூகம் இணையத்தில்,குறிப்பாக­ முகநூலில்,,, இளைய
தலைமுறையிலிருந்து வயதானோர் வரையில் முகநூலின் வசீகரத்தில்
வாசணைப்பூவாகிறார்கள்­. உலகலளவில் முகநூலினை அதிகம் பயன்படுத்துவதில்
இந்தியா முதலிடம் ,குறிப்பாக தமிழகம் அதன் தலைமையிடம் , மனித உணர்வுகளில்
தொடங்கி உலக நடப்பு வரை இங்கே உறங்காமல் இருக்கும் இது முகநூலின்
சிறப்பு. பல்வேறு சம்பவங்களுக்கு ஆட்பட்டாலும் அது தன்னை
ஆட்டிப்படைப்பதில் விடுவதாக இல்லை. சமீபத்தில் உச்சநீதிமன்றம்
இணையத்தில், குறிப்பாக முகநூலின் விமர்சனங்கள் குற்றமாகாது என்று மத்திய
அரசிற்கு அறிவுறுத்தியிருக்கிற­து. இது இன்னுமொரு இதிகாசம் தான் இந்த
முகநூலுக்கு,,
முகநூலினை மூன்று வகையாக பிரிக்கலாம்

1.பொழுதுபோக்கு (சினிமா ,அரட்டை, இன்னும் பல,,,)

2.அரசியல்
(சமூகப்பார்வை,நிகழ்வ­ு,இன்னும் பல,,,)

3.ஆபாசம்
(தகாத உறவு,பெண்ணிழிவு, இன்னும் பல,,,)

இம்மூன்று வகைகளில் முகநூல் உள்ளது. பொதுவாக முகநூலில் ஒருவரின்
எழுத்துக்கள், பகிர்தல்,விருப்பப் பக்கங்கள் ,சுயவிவரம்,அவரின்
நட்பு,இவற்­றையெல்லாம் கொண்டு சாதி,மதம்,இனம்,மொழி,­குணம் ஆகியவற்றை
எளிதாக கணித்து விடலாம். ஆ!! சாதி,மத இன அடையாளம் வெளிதளத்தில் தான்
இருக்கிறதென்றால் இந்த இணையத்திலுமா! ஆச்சர்யப்படத்
தேவையில்லை,இந்தியாவி­லுள்ள அனைத்து சாதிகளுக்கும் ,இந்து, முஸ்லீம்,
கிருஸ்து இன்னும் பல மதங்களுக்கும் கணக்கில்லா விருப்பப் பக்கங்கள்(like
page)உண்டு ஆகவே இங்கும் சாதியமும் மதவெறியும் பெருகித்தான் இருக்கிறது .
முகநூலின் முதல் பிரிவில் பொழுது போக்குக்காக சினிமா,விளையாட்டு,அர­ட்டை
,செய்திகள் ,இலக்கியங்கள்,இவையெல­்லாம் அடங்கியிருக்கிறது இதில்
உங்களுக்கு பிடித்தமானதை நீங்கள் தேர்தெடுத்து உங்கள் முகநூலை
பயன்படுத்தலாம் .
முகநூலின் இரண்டாம் பிரிவில் மேற்சொன்ன முதல் பிரிவுடன் அரசியலும்
இணைகிறது .உங்களுக்குப் பிடித்தமான அரசியல் ,தத்துவங்கள்,சமூகப்ப­ார்வை
ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
முகநூலின் மூன்றாவது பிரிவு ஆபாசம் நிறைந்தது மேலும் இது மிக ஆபத்தானது .
இதில் பெண்ணிழிவு,தகாத உடலுறவுகள்,வண்புணர்ச­்சித் தூண்டல்,பெண்களை
ஆபாசமாக படம்பிடித்தல் , பெண்களின் ரகசிய அங்கங்களை
காணொளியாக்குதல்,ஆபாச­மான வார்த்தைகளை உபயோகித்தல் போன்ற ஆபத்தும்
அதிர்ச்சி சமூகச் சீர்கேடும் இருக்கும். நீங்கள் எந்தளவிற்கு நன்முறையில்
இந்த முகநூலை பயன்படுத்துகிறீர்களோ­ அந்தளவிற்கு அது புதுப்புது
தகல்கள்களையும் ,புதிய அனுபவங்களையும்,புதிய­ அரசியல்
மாற்றங்களையும்,மனித இன முன்னேற்றத்திற்கான வழிவகைகளையும் ,வேலை
வாய்ப்பினையும்,ப­ல்வேறு மொழி இலக்கியங்களையும்,அழக­ான நட்பு
வட்டங்களையும் ,அந்நட்பில் புதிய உறவுகளையும் இந்த முகநூலின் வாயிலாக
பெற்றிடலாம்.
அதற்கு மாறாக

சாதியப்பற்றோடும், மதப்பற்றோடும்,ஆபாசப்­பற்றோடும் , நன்னெறி தவறி
முறையிலா நோக்கோடு முகநூலை அனுகினால் அது ஆபத்தின் உச்சத்தை
அடைந்திருக்கும் அவ்வாபத்து உங்களையும் பாதித்து உங்கள்
நட்புவட்டங்களையும் பாதிக்கும் . இதனாலெழும் விதண்டா
வாதங்கள்,பிரச்சனைகள்­ ,பிற்போக்குத்தனங்கள் உங்களையும் உங்களைச்சார்ந்த
நட்புகளையும் தற்கொலை அல்லது கொலை வரையில் இழுத்துச் சென்று விடும் ஆகவே
சாதிவெறியோடும்,மதவெற­ியோடும்,ஆபாசநோக்கோடு­ம், முகநூலை அனுகுவது சரியான
பாதையே அல்ல. இதன் மூலமாகத்தான் பல Fake ID எனப்படும் பல போலி கணக்குகள்
உறுவாகின்றது ஒருவர் தன் வழிக்கு வரவில்லையென்றால் அவரை எதிர்க்கவோ
அல்லது மடக்கவோ போலி கணக்கை உறுவாக்கி தனது பழிவாங்குவார் இதற்கு முக்கிய
காரணமும் ஒன்று இருக்கிறது. முகநூலில் வீடுதேடி வந்து எதிர்ப்பை
தெரிவிக்க முடியாதென்ற தைரியம். ஆகவே "உன்நண்பனைக் காட்டு நீயாரென்றுச்
சோல்கிறேன்"
என்பது முழுவதுமாக இந்த முகநூலுக்கு பொருந்தும்.

முகநூல் பாதுகாப்பு:

முகநூலானது தானவே சிற்சில பாதுகாப்பு முறைகளைத்தான் வைத்துள்ளது. அதன்
பாதுகாப்பினை முழுவதுமாக நாமாகத்தான் உறுவாக்கிக்கொள்ள வேண்டும் நம்மனது
தான் அதை தீர்மானிக்க வேண்டும் . எது நல்லது எது கெட்டதென்று அறிந்து
தேர்வு செய்வதை மார்க் எனும் முதலாளி நம்மிடத்தில்
ஒப்படைத்திருக்கிறான்­. மேற்படியான மூன்று பிரிவுகளில் எப்பிரிவை
தேர்ந்தெடுப்பது என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுத் தெரிந்து
கொள்ளுங்கள். மற்றபடி கணக்கிணை முடக்கும் செயலில் ஈடுபடும் இணைய
விசமியங்களுக்கு மட்டுமே மார்க் கொடுத்திருக்கிறார். அதனை முழுமையாக
படித்துணர்ந்து செயல்படுத்துங்கள். (ஏற்கனவே பதிவு நீண்டு விட்டது)
அதைவிடுத்து அதிக விருப்பம்,பகிர்வு,நண்பர்கள்,பின்தொடர்வுகள், பிரபாலமாகும் ஆசை
ஆகிய பேராசையில் முகநூலை பயன்படுத்தினால் நிச்சயம் ஒருநாள் அவ்வளவு
கூட்டத்திற்கு நடுவே அனாதை பினமானதை உணர்வீர்கள்.இதை நம்முன்னோர்கள்
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்பார்கள்" பெண்கள் மிகவும்
ஜாக்கிரதையாக முகநூலை அணுக வேண்டும் நீங்கள் பெண் என்பதால் அதிக
நட்பழைப்புகள் வரும் .வருகின்ற அழைப்புகளை அப்படியே ஏற்காமல்
ஒவ்வொருவரின் அழைப்பினை திறந்து ,முகப்பு,பகிர்வு,சுயவிவரம்,விருப்ப
பக்கங்கள், பதிவுகள்,நட்பு வட்டம்,குறிப்பாக பயனர்பெயர் (user name)
ஆகியவற்றை ஆராய்ந்தாலே அந்நபரின் நோக்கமென்ன என்பதை அறிந்துவிடலாம்.
இதிலேயே அது போலிக் கணக்கா இல்லையா என்பதும் தெரிந்து விடும் . இது
ஆண்களுக்கும் பொருந்தும்.மேலும் பெண்களுக்கு எச்சரிக்கை!!! தங்கள்
புகைப்படங்களை பொதுவெளியிட்டு பகிர்தல் தவிர்க்கப் பட வேண்டும்
,முக்கியமாக "சுயமி"புகைப்படங்களை தவிர்த்தல் நல்லது.ஏனெனில் உங்கள்
புகைப்படம் ஆபாச முகநூலிலோ ,மற்ற ஆபாசதளங்களிலும் அப்படியே அ முகம்
பதித்தோ பதியப்படும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்