முதல் சந்திப்பு

கோர்வையாய்
வியர்வையை
கோர்த்தெடுக்கும்
கோடை காலம்
அது

இன்னும்
இமைகளை
மூடவில்லை
நான்

முந்தைய தினத்தில்
என்னை முழுதாய்
தின்றுக்
கொண்டிருந்தது திகட்டாத உதடுகள்

பார்வையிலொரு
பயத்தினை
கலந்து
பறந்தோடும்
பறவைகளை போலே
பார்க்கலாம்
நாளையென
பக்குவமாய்
எடுத்துரைத்து
ஏடுகளில் எழுதாத
முற்றத்து
முல்லைக்கு
திடீரென
கால்முளைத்து
கைகளில் சிறகுகள்
முளைத்தது போல்
சொல்லிவிட்டு
பறந்தாய்

அந்த நிமிடத்தில்
அது சொர்ப்பனமா?
சொர்க்க பூமியிலுள்ளோமா?
என எண்ணிப்
பார்ப்பதிலே
மலையேறிய
மாலைக்
கதிரவனையும்
மறந்தே போனேன்

ஓர் அரவமற்ற
அமைதி கருநிழல்
இரவினை
கடக்க நேரிடுகையில் கனவுகளும்
கல்லெறிந்து
துறத்தியது
இரவினை

சீக்கிரம்
விடிந்துவிடு
அவன் காதல்
சிகரத்தை
தொட்டுவிட
துடிக்கிறான்
கல்லெறிந்த
கனவுகள்
கடைசியாக
விடுத்த
இரவுக்கான
எச்சரிக்கை மட்டும்
ஏந்தி நிற்கிறது
எனதுடல்

மலரும் மொட்டுகளில் விலகிய பனியானது விடிந்தது பொழுதென வக்கனையாய்
எடுத்துரைக்க

வழிநெடுகிலும்
பூவிரிய
ஆளில்லா
அனிச்சை சூழலை
நானே உறுவகப்படுத்தினேன்

என்ன பேசுவது?
எப்படி தொடங்குவது? எவ்வாறு நடப்பது?
எவ்வகை வெளிபடுத்துவது? எதையும் விட்டு வைக்கவில்லை எல்லாவற்றையும்
எண்ணிப்
பார்க்கையில் எவற்றுக்கும்
விடை
தெரியவில்லை

திருவிழாவில்
தொலைந்த
குழந்தை மனம்
போல
குழந்தை தேடும்
தாயுள்ளம் போல
தவித்து கொண்டிருந்தேன் தரணியில்
புரண்டிருந்தேன்

பூமிக்கிறங்கிய
பூவுலக தேவதைபோல புன்னகையை சிதறிவிட்டபடியே
எனதருகே
வந்தமர்ந்தாய்

நாவெழவில்லை
இருவருக்கும்

அடிக்கடி என்னையும்
எனை சுற்றிய
பகலையும் பயத்துடனே பார்த்திருந்தாய் பத்திரபடுத்தி வைக்கச் சொல்கிறது பாவிமனது

உன் நாவிதழ்
முதலெழும் என
நானும்
என் நாவிதழ்
முதலெழும் என
நீயும்
முழுபிரம்மை
பிடித்திருந்தது

யார் தொடங்குவது
பூவிற்கு சமமானவள்
பெண்ணல்லவா
தொட்டால் சினுங்கி
பூ வினமல்லவா

நானே நாவிதழை
நடைபழக
விடவேண்டு மென்றென்னி
உன் பெயரை
உச்சரிக்க
உதட்டினை விரித்தேன்

வெறுங்காற்று
வெண்னிலவை
தொடுகிறது

முழுதாய் வெளிவர
மறுக்கும் எனதொலி
எழுந்திருக்கும்
முன்பே
சட்டென எழுந்து
நின்றாய் நீ

நேரமாகிவிட்டது
வேற்று வாசிகள்
வரும் சத்தம் கேட்கிறது வருகிறேன் நானென
சொல்லி

மலர்விரிந்து கிடக்கும்
பூவுலகில் தேனைத்
தேடும் தேன்சிட்டாய்
சிறகசைத்து பறந்துவிட்டாய்

காலம் கடந்தோடி
கடலை அடைந்து
கதிரவன் காலில்
விலகி
உச்சந்தலையில்
ஓங்கிக் கொட்டுவதை
அப்போதான்
உணர்ந்திருந்தேன்

அத்தனை கனவுகளையும்
உடைத்தெரிந்தேன்
இதுதான் காதலா?
இதுதான் காதலின்
மாயாஜாலமா?

காதலில் நாவெழாதெனும்
உண்மை அறிந்தவன்
உலக விஞ்ஞானிதான்

பெண்மை ஆராய்வதில்
பெற்று
விடுவானவன்
நோபல் விருதினை

முற்றிய விரக்தியுடனே
முடிந்துபோன நிகழ்வுடனே
முன்னேற மறுக்கிறதென்
கால்கள்

காத்திருக்கிறேன்
அடுத்தச் சந்திப்பு
எப்போது
அவசியம் பேசிவிட
வேண்டும் அவளிடம்

அதற்கு முன்பே
அவளை அனுகுவதெப்படி
அலைகடலின்
அனுபவத்தை
நானும்
அறிந்திடல்
வேண்டும்

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்