என் பார்வையில் "கடைசி மனிதன்"

தொட்ட இடமெங்கும்
தேள் கொட்டிவிட
கானுமிடமெல்லாம்
கல்லறைகளாக
காட்சி நெளிய
எழுதிவிடுகிறான் எழுதுகோல்
ஏதுமின்றி

சல சலவென
ஓயாமல் பேசிய
பொழுதுகள்...
சிறுகச் சிறுகச்
சிந்தியது அவனது பேச்சொலிகள்
பிரியங்களை பகிர்ந்த வார்த்தைகள்
அவனது ஆன்மாவிற்கு மட்டுமே பரிமாறப்பட்டன

நிகழும் பரிமாற்றத்தை உணர்ந்து அவ்வப்போது குறிப்பெழுதுகிறான் தரையில்

கூழாங்கற்கள் கல்லறைகளோடு
புணர்வதையும்
முத்தச்
சத்தங்களையும் முத்துக்களாக சேகரிக்கிறான்

மூழ்கிடாது அவனது காதல் நினைவுகள்
உறவுகளின்
சிதறல்கள்

கல்லறைகளில்
உலாவருகிறான்
ஒரு பேய்களையும் கானவில்லை
பேச்சி துணைக்கு
ஒவ்வொரு கல்லறையாக
அவனும் சென்று
மதி வரைந்த
ஓவியமாக மனதிலெழும்
எண்ணங்களை
மயான வெளியில்
பரப்பி விடுகிறான்

பாதைகள் வழிவிடவில்லை நித்திரை தொலைத்து நினைவுகளுடனே
நீண்ட நேரமாய்
அவனது மூச்சுக்காற்றுகள் மூர்க்கமாய் விழித்திருந்தது

எங்கும் சூழ்ந்திருந்த கருப்புடல்
இரவுகளை அவன்
கானவேயில்லை

அவன் முகத்தை
பார்க்க
நிலவுக்கும் ஆசையில்லை
மறைத்து கொண்டது மேகத்திரையில்

மோகனங்கள்
முளைக்கத் தொடங்கிய அதிகாலை
மணமணக்கும்
மல்லிகையின்
மீது பிறந்தது
காதல்
கதிரவனுக்கு
கதிர் வீச்சுகள்
மல்லிகை
பூவின் மேல்
மயக்கம்
கொண்டிருந்தது

தெளியாத மயக்கத்துடனே தேசத்தில் ஒளியினை உமிழ்ந்துக் கொண்டிருந்தது கதிரவன்
அவ்வொளியில் ஊடுறுவி அனலை குளிரச்
செய்துவிடுகிறது
எங்கும் வீசிக்கொண்டிருந்த அவனது
உயிர்காற்று

அனலுடலால் உயிர்காற்றின்
அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை

மல்லிகை மயக்கத்தில் விடைபெற்று
உயிர்காற்றுத்
தேடலில் இறங்கியது கதிரவனின் கதிர்கள்

இறுதியான தேடலில் தேர்ச்சி கண்ட
கதிரவன்
உயிர்காற்றின்

கலையிழந்த முகம்,
மூடாத விழிகள்,
இன்னும் பேசிக்கொண்டிருக்கும்­ அவனுதடுகள்,
வற்றியது கண்ணீரென காட்டிய கண்ணங்களை
கதிர்கள் கண்டதும்

யாரிவன்? யாரிடம் பேசுகிறான்? மண்தரையில் அவனது கை
எழுதுகிறதே! அடுக்கிய கேள்விகள்
ஆயிரம் முளைவிட

வேருக்கு நீராகரம்
தேடி அவனருகே சென்றது கதிரவன்

மனதிலெழுந்த
ஆயிரம் கேள்விகள் மரணித்துப் போனது அவனது
காட்சிதனை
கானுகையில்
கதிரவனும்
கண்கலங்கி போனது

உறங்க
மறுத்து கல்லறையில் காட்சிப்பொருளாகி குவிந்து கிடக்கும் பிணங்களுடன்
இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறான்

இவன்தான் உலகின்
கடைசி மனிதனென
உணர்கையில்
கதிரவனும் கண்கலங்கித்தான்
நின்றது,,,

Comments

 1. நல்லதொரு தலைப்பு...

  அழகிய கற்பனை...
  உலகின் கடைசி மனிதன் மிகவும் பாவம்தான்...
  அவன் சந்திக்கும் காட்சிகள் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும்...

  ReplyDelete
 2. சமூகதளத்தில் உலகின் கடைசி மனிதன் எந்த மனநிலையில் இருப்பான் என்பதை கேலி செய்துகொண்டிருந்தார்கள் அதனாலெழுந்த எண்ண ஓட்டம் தோழர்
  கவிதைக்கு கரம் சேர்த்தமைக்கு நன்றி தோழர்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்