பாசத்திற்குரிய பாட்டி

ஒரு
செல்லச் சினுங்களை சிறகடிக்க
விடுகிறாள்
தாய்மனம்
தனதுயிரை
துட்சமென
தூரேயும் எரிகிறாள்

சுமந்த வயிற்றிலேயே சுரண்டவளும் படுத்துறங்குகிறாள் பாசாங்கில்லா
மழலையவள்

சின்னச் சின்ன
சண்டைகளில்
சிதைந்து விடாத சிலைவடிக்கும்
சிற்பியின்
கைகளுக்கு
தங்க காப்பிடுகிறாள் தமையனவனிடம்
செல்லமாய்
சினுங்கி
விளையாடுகிறாள்

ஆர்ப்பரிக்கும்
ஆரவார கூச்சலிட்டு
அடுத்த யுகங்களை
அவளும் கடக்கிறாள் நண்பனவனிடம்
நஞ்சினை விதைக்காத அப்பாவி முகத்திலவள் அகிலத்தை
ஆள்கிறாள்

கைதொடும் இன்பம்
கலவியில் கரைபடிந்ததில்லை கடைசிவரையில்
கணவனவனிடம்
காலத்தை
செதுக்குகிறாள்

கானும் இடமெங்கிலும் கானக்குயிலாகி வாழ்வியலின்
வசந்தங்களை
பாடித்திரிகிறாள்

அவளே மீண்டும்
தாயாகிறாள்
வாழ்க்கையின் சுழற்சிதனில்
சுழன்றும் வருகிறாள்

பெற்றெடுத்த
பிள்ளைகளை
செல்லமாக திட்டியும் புதுவரவாம்
பிள்ளைகளின்
மனைவிகளை
அன்போடு
கண்டித்தும்
அவளும் பெண்ணென
அறிந்தே அவர்களுக்கே ஆதரவாகவும்
நிற்கிறாள்

உள்ளங்கால்
முதல்
உச்சந்தலை
வரையில்
பேரக்குழந்தைகளை பேணிக்
காத்திடுகிறாள் பேரக்குழந்தைகளின்
பேரன்ப
தூக்கத்திற்காக
கதை கதையாய் பேசியவள்

மீண்டுமவள்
மழலையாகும்
முதுமையினை
தொட்டு
முத்தமிடும் போது

மாறியதனைத்தும்
தலைகீழாக

தற்போதவள்
பேசும் பேச்சுகள் அனைத்தும் தனிமை அளித்த தண்டனையாகவே தெரிகிறது
அவளுக்கு

அந்தளவிற்கு
அனைத்தையும் இழந்திருந்தால்
அணைத்து ஆருதல் மொழி வீசக்கூட அவளருகே
ஆளேயில்லை

முதியோரில்லத்தில் புலம்பித் தவிக்கிறாள் புழுவாய் துடிக்கிறாள்
பாசத்திற்கேங்கும் பாட்டி!

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்