தெரேசா தேசத்துரோகியா?

தொட்டால்
தீட்டென்றாய்
துடிதுடித்து
போனோம்

அமரும்
திண்ணைகளில் தண்ணீருற்றி
கழுவினாய்
தலைவிதியென
தன்னையே
திட்டிக்கொண்டோம்

தாய் குலத்தை
தேவசாசி
தேவடியா
ளென்றாய்
துடைத்துக் கொண்டே தூரதேசமிதுவென
வாழ்வுதனை
வலிந்து பெற்றோம்

உங்களுக்கேன்
ரவிக்கை என்றாய் உடையிலும்
ஊடுறுவியது
சாதியொளி

கல்வி கற்க
ஆசை எங்களுக்கு
கல்லால் அடித்து விரட்டினீர்கள் முதுகெங்கிலும்
முளைத்த
கொப்பளக்
காயங்களில்
வழிந்த சீழுக்கு
மருந்திடகூட
மறுத்தது
இம்மானிட
பிறவி

மனிதனை
மனிதனே
தள்ளிவிட்டான் மரணக்குழியில்
குழிகளும்
குதூகலப்பட்டது

உங்களாலே
நாங்களோம்
தொழு
நோயாளியாக

தூரே
எரிந்தீர்கள்
தொடர்ந்து
பழகும்
வீட்டு
விலங்குகளும் வாய்விட்டே
சிரித்தது

எங்களின் பரிதாப
கோலம் அதற்கு பவளமுத்துக்களாக தெரிந்ததோ
என்னவோ

வீதியெங்கும்
ஒரே நாற்றம்
விரட்டப்பட்ட உடல்களில் வெளியெறிய
நாற்றம்தான்
அது

வந்தாள் ஒருவள்
தூரதேசத்து
பெண்ணவள்

வீதியிலறங்க தயங்கிடவில்லை
இவர்கள்
தொழுநோயாளி
எனும்போதிலும்
தொட்டே
தூக்கினாள்

வற்றிப்போன
எங்களின்
வயிற்றிற்கு
பிச்சைக்
கேட்டாளவள்

எச்சில்
உமிழ்ந்தார்கள்
பலர்

பரவாயில்லை
உமிழ்ந்த
எச்சில் எனக்கு
உடையேனும்
கொடுங்கள் அவர்களுக்கென்றாள்

உள்ளத்து அன்பால்
ஊரையே அழச்செய்தவள் அவளிறுதி
ஊர்வலமே
அதற்கு
சாட்சி

அவளொரு
அடுத்த
மதக்காரிதான்
அவள் உள்ளத்தில் எப்போதும்
மதவெறி
இருந்ததில்லை

மோகன் பகவத்தே அன்னை தெரசாவை தேசத்துரோகி,
மதவெறி
பிடித்தவள்
என்கிறீர்களே

கடலை விட
பெரிதான மூவாயிரத்துக்கும்
மேலான
மனுதர்மம்
ஈன்றெடுத்த
இந்துத்துவ
சாதிசனங்களை
என்றேனும்
தொட்டதுண்டா?
தன்மானத்தோடு
அவர்களின்
தோளோடு தழுவியதுண்டா?

தரணியில்
புரள்கிறது
உங்களின்
வேஷம்

விரைவில்
வெகுண்டெழுவோம் விழுதுகளையே
சாய்த்து விடும் எங்களுக்கு
இந்துத்துவ
ஆணிவேரை அசைப்பதென்பது
எங்களுக்கு
எளிதான
காரியமே!

காத்திருங்கள் புரட்சியொன்று
பூமியதிற
புறப்படுகிறது,,,

Comments

  1. அருமை தெரியாமல் அவதூறு சொல்கிறார்கள் வெட்கம்.
    அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்