இரு இலக்கியவாதி உரையாடலும் புலியூர் முருகேசன் தாக்குதலும்

இலக்கியவாதி 1 :
ஐயா!!நலமா?
நான்தான் இன்ன நபர்தான் பேசுரேன்
நீங்கள் பதிவுசெய்த வள்ளுவன் எந்தமதம் என்கிற பதிவுக்கான என் பதிலுரை
திருப்தி அளிக்குமாறு அமைந்ததா?

இலக்கியவாதி2 :
நன்று ஐயா!
தங்களால் வள்ளுவன் சமணரா பௌத்தரா சைவரா வைஷ்னவரா என்கிற எனது ஐயத்திற்கு
அவர் வைஷ்னவரே அதுவும் இந்துமதத்தினை உள்வாங்கிக் கொண்டவரே என்று எவ்வளவு
அழகாக விளக்கிச்சொன்னீர்கள்­ . இது குறித்து புத்தகமொன்றை
வெளியிடப்போகிறேன் நிச்சயம் தாங்கள் தான்
அணிந்துரை எழுதிட வேண்டுமென்பது என் அன்பு கட்டளை.

இலக்கியவாதி1: இருக்கட்டும் ஐயா நன்று , நான் எடுத்துரைத்த வள்ளுவன்
குறளில் அவர் வைஷ்னவரென்று ஒப்புக்கொண்டதில் மகிழ்சி எனக்கு ,
அதைவிடுங்கள் வள்ளுவன் கோயில் எங்கேனும் இருக்கிறாதா என்று கேட்டீர்களே !
நானும் சென்னை திருமயிலையிலும் , திருச்சியிலும் பெருமாள் பிள்ளையாக ஐயன்
காட்சியளிக்கிறார் என்று கூட சொன்னேனே அவ்விடங்களை சென்று ஐயன் அருளை
பெற்றீர்களா? அயன் வள்ளுவன் ஆசியை பெற்றீர்களா?
இலக்கியவாதி 2 . நீங்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று ஐயன் வள்ளுவனை
தரிசித்தேன் ஐயா இந்த இந்துமதம் தான் எத்தகைய சான்றோர்களை இம்மண்ணிற்கு
தந்துள்ளது . தாய்மதம் இந்து என்பது எவ்வளவு பெரிய உண்மை ஐயன் வள்ளுவனின்
திருக்கோயில்களை அறிமுகப்படுத்தியதற்க­ாக நன்றி ஐயா ! தங்கள் அனுமதியோடு
எழுதப் போகும் நூலிற்கு இதையே என்னுரையாக எடுத்தாளப்போகிறேன் .

சில வினாடிகள் இருவரும் பேசவில்லை

இப்போது முதல் இலக்கியவாதி பேசத்தொடங்குகிறார்.

இலக்கியவாதி1 :
ஐயா!! இந்த கலைஞரெனும் கருணாநிதிக்குத்தான் எவ்வளவு பெரிய துணிச்சல் இந்த
கிழடு தன்னை பகுத்தறிவாதியென்று சொல்லிக்கொண்டு நம்மதத்தையல்லவா
பின்பற்றி நாட்டை பிடித்தது நல்லவேளை இக்கிழடுவை விரட்டிவிட்டு மக்கள்
முதல்வர் அம்மாவை இம்மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.­ தூய்மையான இந்து
பற்றாளர் ராமாயணம் ,மகாபாரதம் ஆகிய நம் மூல இலக்கியங்களை கற்றோருக்கு
சிறப்புச்சலுகைகள் அளிக்கிறார் .
இலக்கியவாதி 2 . மிக உண்மை ஐயா அந்த கிழடு இருந்திருந்தால் இந்நாட்டையை
கூறுபோட்டு விற்றிருக்கும் ஏதோ எம்பெருமான் அருளால் மக்கள் முதல்வர்
அம்மா அவர்கள் நமக்குக் கிடைத்தார் . பிறந்த உன்னதத் தலைவர் மோடி அவர்கள்
பிரதமராகி நமக்கெல்லாம் புதியதொரு புத்துணர்ச்சி அளித்திருக்கிறார் .

இலக்கியவாதி1 : அப்புரம் இன்னுமொரு தகவல் ஐயா! அதை கேட்டதிலிருந்தே
நெஞ்சு வெடிக்கிறது . கோபம் கொழுந்து விட்டெரிகிறது . என்ன ஜனநாயக நாடிது
தற்போதீ கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் பறிக்கப்படுகிறதே
தொலைகாட்சியை பார்த்ததிலிருந்து தூக்கமேயில்லை
சக இலக்கியவாதியும் நம்மில் ஒருவருமான பெருமாள் முருகள் அவர்களின் மீதான
தாக்குதலைத் தொடர்ந்து இந்த இந்துக்கள் இப்போது ுரையூர் குணா, புலியூர்
முருகேசன் என்று எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டும் தாக்கப்பட்டும்
வன்முறையில் ஈடுபடுகிறார்கள் இந்த அரசும் இந்த முற்போக்குச்
சிந்தனையாளர்களான கம்யூனிஸ்டுகளும் , திக வினரும் இன்னும்பிற
முற்போக்குச் சிந்தனையாளர்களும் எவ்விதமான எதிர்ப்பையோ அறிக்கையோ
கொடுக்கவில்லை . டிவில பார்த்தீங்கனா முருகேசன் ரொம்ப சீரிஸா மருத்தவமனைல
அனுமதிக்கப்பட்டதா சொல்ராங்க , ஜனநாயக நாட்டில எழுத்தாளர்களுக்கு
பாதுகாப்பும் இல்லாம போச்சு , உரிமையும் போச்சு .

இலக்கியவாதி2 :
ஆமாம் ஐயா இதுக்கப்பரம் எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டார்
இப்போது வெறும் பெருமாள் முருகன்தான் என்று அவர் எழுதும்போதை கண்ணீர்
விட்டு அழுதேன் இப்போ என்னடான்னா தொடர்ந்து நம்ம மேல தாக்குதலை
கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்த அரசும் ,அரசோட சேர்ந்து கலைஞரும்
கலைஞரோட சேர்ந்து இந்த முட்டா மக்களும் நம்மள அழித்துக்
கொண்டிருக்கிறார்கள் மனம் பொருக்கமுடியவில்லை . யாராவது முற்போக்கு
சிந்தனையாளர்கள் கண்ணில் பட்டால் எங்களுக்காக ஏன் குரல் கொடுக்க
மறுக்கிறீர்கள் என்று நறுக்குனு நாலு வார்த்தை கேட்காமல் விட மாட்டேன்
."பெரியார் பிறந்த இந்த மண்ணில் தான் இப்படியான அராஜாகங்கள் நடக்கின்றது
"

இலக்கியவாதி1 : (மெல்லிய குரலில்) அப்படி ஏதும் அவசரப்பட்ட
வாய்விடாதீர்கள் நம்மக்கேன் வம்பு , இப்போது புத்தகம் வேறு வெளியிடுவதாக
கூறியிருக்கிறீர்கள் . பதிப்பகத்திற்கு ஏதேனும் தடைகளோ சிக்கல்களோ வரலாம்
அதனால் எதுவும் பேசாமல் எதையும் பார்த்த மாதிரி காட்டிக்காமல் தொடர்ந்து
எழுதிக்கொண்டிருங்கள்­ . (இப்போது மிக மெல்லிய குரலில்) அப்படி ஏதாவது
பிரச்சனை வந்திடுச்சினா பதிப்பத்த மட்டும் காட்டிக்கொடுக்காமல் இந்த
முட்டா முற்போக்கு வாதிகளை தூண்டி விட்டுட்டு ஏதாவது சாதி சங்கத்தில்
உங்களை இனைத்துக்கொள்ளுங்கள்­ .புத்தகமும் அமோகமாக விற்பனையாகும் . அப்போ
நான்! விடைபெறுகிறேன் ஐயா! ஏதாவது உடனடி தேவையென்றாலோ . சமூக வலைதளத்தில்
ஏதேனும் பரப்புரை செய்வதாக இருந்தாலோ என் நம்பருக்கு உடனே போன் செய்து
விடுங்கள் எந்நேரத்திலும் உதவி செய்ய காத்திருக்கிறேன் . நன்றி!

இருவரின் கைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அடுத்து இவ்வுரையாடல்
இலக்கிய நயத்துடன் பேஸ்புக்கில் பதிவிட அவரவர் மடிகணிணியின் முன்
அமர்ந்திருக்கிறாகள்.­ (இருவர் மனதிலும்) "நாங்கல்லாம் ஒரு புள்ளி
வைத்தாலே லைக்கா வந்து குவியும்"

"இதுவொரு கற்பனையே "

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்