மார்க்ஸின் மாணவன் லெனின்

"தலைக்கு மேல் பதவியின் அதிகாரம் இருந்தாலும்
தன்மானத்துடனும்
தகுதியுடனும் வர்க்க மக்களுக்கு இடையூரு ஏற்பாடாமலும் தனது அதிகாரத்தை
செலுத்த வேண்டும்" - தோழர் லெனின் வழங்கிய மார்க்ஸிய கற்றலின்
மகத்தான சொற்களாக
இதை பரப்புரை செய்திடல் வேண்டும்.
தோல்வியில் மார்க்சியம் என்று பல பரப்புரைகள் இங்கே பரவி கிடக்கிறது....
மார்கசிய தத்துவம் மார்க்சிய பேராசான்கள் மார்க்ஸ் எங்கெல்ஸ் இவர்களின்
கண்டுபிடிப்பல்ல...
சுரண்டல் சமூகத்தின் மூலவேரை காட்டி எங்கு கூலியுழைப்பு திருடப்படுகிறது
என்பதை கண்டறிந்து அதனை
விஞ்ஞான ரீதியில் மீட்டெடுப்பது உழைக்கும் மக்களின் அறவியலின் அரசியலை
விஞ்ஞானமாக்கினார்கள் ...
அதை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் தோழர் லெனின்...

அதற்கான சான்றாகக் கூட அவரின் முதலாளித்துவ எதிர்ப்பினை
சுட்டிக்காட்டிலாம் இம்முறையில் அவரது அரசியல் வரலாற்றினை புரட்டிப்
பார்த்துவிடுவது காலச்சிறந்தது.

உலகில் யாரும் செய்யாத சாதனையை செய்து காட்டியவர் புரட்சியாளர் லெனின்
இன்றளவும் உலக நாடுகளுக்கு புரியாத புதிராகவும் வியப்பூட்டும் விதமாகவும்
எப்படி இவரால் முடிந்தது என்ற கேள்வியில் விடை கிடைக்காமலும்
திகைக்கின்றன .
என்னிப்பாருங்கள-் ஒரு நாட்டை ஆளுகின்ற ஆளுங்கட்சி இருக்கின்ற வேளையில்
அங்கே இனி நான்தான் இந்நாட்டின் ஆட்சியாளன் இனி உங்களுக்கு குடியரசை
அளிக்கிறேன் என்று கூறினால் சாத்தியமாகுமா இல்லை நடக்குமா ஆனால் அதை
செய்து காட்டியவர். புரட்சியாளர் லெனின்
தனது புரட்சிப்படையுட-ன் 1917 நவம்பர் 7ல் சோவியத் காங்ரஸ் மாநாட்டை
பெட்ரோகிராடில் கூட்டுவதற்கு ஸ்டாலின் ரகசியமாக ஏற்பாடு செய்திருந்தார்
மாநாடு கூட்டப்பட்டது மொத்தம் 650பிரதிநிதிகள்-கலந்து கொண்டனர் அதில்
மொத்தம் 390பேர் லெனின் கட்சியை சேர்ந்தவர்கள் (அதாவது
போல்ஷ்விக்குகள்-). அதுவரை தலைமறைவாயிருந்த-லெனின் திடீரென்று மாநாட்டில்
கலந்து கொண்டார். ஏற்கனவே அவர் வகுத்துத் தந்த திட்டப்படி போல்ஷ்விக்
வீரர்கள் முக்கிய அரசு அலுவலகங்களையும்-, அரசு கருவூலங்களையும்-கைப்பற்றி
கொண்டனர் சர்வாதிகாரியான பிரதமர் கெரன்ஸ்கி தலைமறைவானார் .
இவையனைத்தும் மாநாடு நடந்துகொண்டிருக-்கும் போதே மின்னல் வேகத்தில்
நடந்தன அனைத்து இடங்களையும் கைப்பற்றிவிட்டோ-ம் என்ற தகவல் லெனினுக்கு
தெரிவிக்கப்பட்ட-து. அப்போது மாநாட்டில் இனி சகல அதிகாரங்களும்
மக்களுக்கே என்று தீர்மானம் நிறைவேற்றி லெனின் தலைமையில் புதிய மந்திரி
சபை அமைக்கப்பட்டது அதில் டிராட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரும் இடம்பெற்றனர்.
லெனின் தான் புதிய தலைவர் என மக்களுக்கு தெரிய 3 நாட்கள் ஆனது அதுவரையில்
கெரன்ஸ்கி தான் பிரதமர் என்று மக்கள் நினைத்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்