ஹைக்கூ -கிழிசலாடை-

ஹைக்கூ - கிழிசலாடை -


பசியில்
வற்றிய
வயிறு
வாய்பிளந்த
வரண்ட
-பூமி

___

நிலவின் மகளுக்கு
உடலெங்கும்
வரதட்சணை
சூடு
வானில்
-நட்சத்திரங்கள்

___

தாலிக்கு
பணம் கேட்டான்
உடலை
விற்ற
-விபச்சாரண்

___

எதற்கும் ஏங்கிடவில்லை
ஆனாலும்
வலிக்கிறது
வசைப்பேச்சு
வீதியுலா
வருகிறாள்
-முதிர்கன்னி

___

சோற்றை
சிதறவிடவில்லை
பணக்காரண்
நல்லது
வாசலோடு
விரட்டிய
அதே எச்சில்
கைகள்

___

மொத்தமாக
பெற்றிடாத
வருமானம்
வாழ்கிறது
மகிழ்ச்சியில்
-தினக்கூலி

___

ஏ!!
சூரியனே
சுட்டுக் வீழ்த்தாதே
வீதியெங்கும்
வாழ்கிறது
-கிழிசலாடை

___

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்