மாதொருபாகன் -கடந்துபோன காலச்சுவடு

மாதொருபாகன் -கடந்துபோன காலச்சுவடு


கொஞ்சம் இடைவெளியைத் தொடர்ந்தே இந்நாவலுடன் நான் பயணித்ததை பற்றி
எழுதுகிறேன் காலவோட்டத்தில் சர்ச்சைகளின் சூழிடமாக அமைந்துவிட்டபடியால்
அல்ல , அச்சர்ச்சைகளின் அவசத் தேவையை உணர்ந்தபடியால் எழுதும்
கட்டாயத்தில் உந்தப்பட்ட ஓர் ஊதுகுழலாகிப் போனதால் தேவை
அதிகரித்துவிடுகிறது . 2011 ஐந்தாண்டு கல்லூரியின் கடைசி நாட்களை
எண்ணிக்கொண்டிருந்த தருணம் அவ்வப்போது தலைபடும் தமிழுணர்வுப் பசியினைத்
தீர்க்க நூலகத் தஞ்சத்தில்
உட்புகுவது வழக்கம் . அந்தச்சூழலில் நூலக அலுவலரின் மேசையில்
அமர்ந்திருந்தது எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் .
வாசகனுக்கு உரித்தான சிந்தனையில் ஏதோவொரு யானைப்பாகனின் வாழ்வியலை
சித்தரிக்கும் நாவலாக இருக்கும் என்றென்னி அலுவலரிடம் அந்நாவலைப்
பெற்றுக்கொண்டு படிக்கலானேன் சரியாக மூன்று மணிநேரத்தில் வாசிப்பினை
முடித்த தருணத்தில் தான் உணர்ந்தேன் சிவனுக்கான பெயர் மாதொருபானென்று ,
நாவலை படிக்கும் போதே தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பானால்
குழந்தைகள் எழுந்து கேள்விகள் கேட்டுவிடுமோ! என்ற ஐயத்தில் அலறும்
தகப்பனைப் போலவே மாதொருபானையும் உணர்ந்தேன் . வேறொன்றுமில்லை படித்து
முடித்தவுடன் எழுந்த கேள்வியும் அதுவாகத்தான் அமைந்தது , ஏற்கனவே
இந்துமதக் கடவுளர்கள் எவ்வாறு பிறந்தார்கள் அவர்களை இந்துத்துவ மத
குருமார்கள் எவ்வாறு மக்களிடையே கற்பித்தார்கள் என்ற கேள்விகளுக்கே
விடைகானாத சூழலில் திருச்சங்கோட்டு மக்களின் மூன்று தலைமுறைக்கு முன்னால்
நம் முன்னோர்கள் யார்? முன்னோர்களின் தகப்பன் யார்? அத்தகப்பனோ தாயோ
முறையற்றோர் பிள்ளைகளெனில் நாமும் முறைதவறி பிறந்தவர்கள் தானா? என்ற
கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் நாவலின் தன்மை உணர்த்திற்று , சக
வாசிப்பாளர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இதுதானோ என்ற எண்ணம் கூட
அவ்வப்போது தலைபட்டது . வேறொன்றும் குறிப்பிட இயலவில்லை ,
முற்போக்கினையையும் நான் அறியவில்லை , ஓர் இந்து எழுத்தாளரின் இந்து
நாவலை இந்துமதத்தினர் எதிர்த்திருக்கிறார்க­ள் . வேறொன்றும் இந்நாவலின்
பிரச்சனைகளை அலசி ஆராயும் அளவிற்கு அனுபவ மார்க்ஸியமோ , திராவிடமோ, மற்ற
முற்போக்கு சிந்தனைகளோ தலைபடவில்லை, கடைசியாக காளியின் உயிரிலும்
பொன்னாவின் பண்பிலும் அழிந்து அடிபட்டதென்னவோ பெண்மைதான் . இதைவிட
வேறொன்றும் சொல்லும் அளவிற்கு சர்ச்சைக்குரிய நாவலகாக அதை பார்க்க
முடியவில்லை.

Comments

  1. correct.. well said comrade... Its totally time waste write - up....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்