சிறுமிகளைச் சீரழிக்காதீர்கள்!

சமீப காலங்களில் இந்திய தேசியத்தில்
அதிகப்படியான
வண்முறைகளுக்கு உட்படுத்தப்படும்
சிறுவர்சிறுமிகளை இச்சமூகம்
கண்டுகொள்ளவே இல்லை ஆங்காங்கே ஆசிரியர்களின்
அத்துமீறல் "குடி"மகன்களின்
வெறியாட்டமென சிறுவர்சிறுமிகள்
அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்
அடிக்கடி இச்சமூகம்
அழிவை நோக்கியே பயணிக்கிறது என்பதை இதன்
மூலம் தெரிந்துகொள்ளப்படுகிறது
நம் பண்பாட்டு நெறியடிப்படையில்
"மாதா,பிதா,குரு,தெய்வம்"
எனச்சொல்வதுண்டு
அம்மை அப்பனுக்கு அடுத்தப்படியாக ஆசானும்
அதன் பிறகே தெய்வம் என
போதிக்கப்படுகிறது அந்த அளவிற்கு ஆசான்கள்
போற்றப்படுகிறார்கள் அவ்வாறு போற்றப்படும்
ஆசான்கள் இன்றையச்சூழலில் எவ்விதமான
குற்றநடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என
நம்கண் முன்னே நடக்கும் பல
சீர்கேட்டு நடவடிக்கைகளை பார்க்கின்றபோது பெற்றோர்கள்
சிறுவர்
சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படுகிறார்கள்
எங்கே தம்பிள்ளைகள்
சீரழிந்து விடுவார்களோ அல்லது அர்த்தமற்ற
அறிவை பெற்று அழிந்து போவார்களோ என்று தினந்தினம்
வயிற்றில்
நெருப்புகட்டிக்கொண்டு மனதிற்குள்ளே அழுகிறார்கள்
முழுக்க முழுக்க இதில் சீரழிந்து போகும் சிறுமிகளின்
வாழ்க்கை இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது அதற்கான
தீர்வுகள் என்ன எம்மாதிரியான
நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் அரசின்
பங்கு என்ன போன்ற எத்தீர்வுகளையும்
அலசி ஆராய முடியாத
அடித்தட்டு நிலையைதான் நாம் பெறுகிறோம்
இதுபற்றி பேசகூட
கூச்சப்பட்டு நாவிழந்து மவுனித்து நிற்கிறோம்.
தன் பிள்ளைகளின்
சீரழிவிற்கு காரணமானவர்களை எதிர்க்க
முடியாத நிலமையும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட
அக்கொடுமைகளுக்கு எவ்வாறு ஆறுதல்
கூறுவதென்று கூட தெரியாமல்
விழிப்பிதுங்கி கண்ணீரோடு பல பெற்றோர்கள்
இங்கு வாழ்வினை தொலைத்து நிற்கிறார்கள்
சில சம்பவங்கள் ஊடகபார்வைக்கு வந்தாலும்
பல சம்பவங்கள்
வெளிச்சத்திற்கு வராமல்
பள்ளி நிர்வாகத்தாலும் அரசின்
ஆளுமையாலும் பணபலத்தாலும் மூடிமறைத்துக்
கொண்டிருக்கிறது ஆங்காங்கே நடக்கும்
சிறுமிகள் மீதான பாலியல்
வண்புணர்வு கொடுமைகள் அதனால்
பாதிக்கப்பட்ட சிறுமிகளின்
வாழ்வுகளுக்கு முக்கிய காரணம் இச்சமூகமும்
இச்சமூகம் சார்ந்த சூழலே காரணமாக
அமைகின்றது.
பொதுவாகவே இங்கே தகுதியான
ஆசிரியர்களை தனியார் மற்றும்
அரசு கல்வி நிறுவனங்கள்
நியமிக்கின்றனவா என்ற ஐயம்
ஏற்படுகிறது ஏனெனில்
ஆசிரியர்களை உறுவாக்கும்
கல்வி நிறுவனங்களே பணத்திற்கா இயங்கிகொண்டிருக்கிறது இங்கே அவ்வாறு அதிகாரத்தின்
பேராலும் பணத்தின் பேராலும் உறுவாகிய
ஆசிரியர்கள்
வருங்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும்
சிறுவர்களிடம் இப்படிக் கீழ்த்தரமான
செயல்களை கட்டவிழ்த்து விடுகிறது
இந்திய தேசியத்தில் மாதத்திற்கு 1020
மாணவிகள் 860 மாணவர்கள் பாலியல்
கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்
என்ற ஆய்வறிக்கை நம்மை கதிகலங்கச்
செய்கிறது இது வெளிச்சத்திற்கு வரும்
கொடுமைகள் மட்டுமே இன்னும்
மறைந்திருக்கும் கொடுமைகள்
எண்ணிலங்கா நிகழ்ந்துகொண்டுத்தான்
இருக்கிறது . சமீபத்தில் சேலத்தில் நடந்த
பள்ளிச்சிறுமி பாலியல் குற்றத்தில் பிடிபட்ட
ஆசிரியனின் வாக்குமூலம்
அதிரவைக்கிறது "வீட்டு அக்கம்பக்கத்துலேயும்
நெறைய பேரை இப்படி செஞ்சிருக்கேன்"
என்று வாக்குமூலம் அளிக்கிறான் அந்த
கயவன் . ஏற்கனவே இங்கே கல்வியில்
பின்தங்கியுள்ள இச்சூழலில் இம்மாதிரியான
குற்றங்கள் சமூகத்தை நரகத்தில் தள்ளும் வேலையில்
ஈடுபடுகிறது
கல்வி நிர்வாகங்களின் கவனத்திற்கு:
பணத்தாசையாலும் படையை திரட்டவேண்டியும்
எத்தகுதியுமில்லாத
ஆசிரியர்களை நியமிப்பதை அரசும் தனியார்
கல்வி நிறுவனங்களும்
நிறுத்திக்கொள்வது நல்லது
நியமிக்கப்படும் ஆசிரியர்கள்
மீது இரு நிர்வாகமும் அவர்கள் மீது ஏதேனும்
குற்றவழக்குகள் இருக்கின்றனவா அவர்களின்
நடவடிக்கைகள் என்ன அவர்கள் ஏதேனும் குற்ற
நடவடிக்கைகளில்
ஈடுபடுகிறார்களா நன்னடத்தை குறித்து அவர்களின்
பகுதிமக்கள் மனநிலையென்ன நிரந்தர
குடியிருப்பா அல்லது தற்காலிக
குடியிருப்பா முகவரின் தெளிவு என்ன
போன்ற விவரங்களை சேகரிப்பது நல்லது
ஒவ்வொரு பள்ளிச் சிறுவர் சிறுமிகளிடம்
அவ்வாசிரியர்களின் நன்னடத்தை குறித்து வினவ
வேண்டும் தினந்தினம் நிர்வாகம்
ஆசிரியர்களை கண்கானித்து அதற்கான ஓர்
அறிக்கையினும் தயாரித்தல் நல்லது .
மாதம் இருமுறை மாணர்கள்களிடமும்
ஆசிரியர்களிடமும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட
வேண்டும்
மாணவிகளுக்கு குட்டைப்பாவாடை,
வெள்ளைச்சீருடை அணிவிப்பதை முற்றிலுமாக
தவிர்கப்பட நடவடிக்கை எடுப்பது நல்லது
மற்றவர்களின் சிபாரிசுகள் மூலம்
ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதை விட
தனக்கேயான உரிமையின் பால் நிர்வாகம்
நேர்கானல் மூலம் ஆசிரியர்களை நியமித்தல்
நல்லது
இதை விட முக்கியமானது என்னவெனில்
தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள்
ஆங்காங்கே கூலிப்படைகள் மற்றும்
குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களிடம்
தொடர்பு கொண்டுள்ளதென
வெட்டவெளிச்சமாக
தெரிகின்றது இதற்கு காரணம்
தெரிந்தோ தெரியாமல் தன்னுடைய
கல்வி நிறுவனத்தில் நடந்தேறிய பாலியல்
குற்றத்திற்காக ஆசிரியரை காப்பாற்றும்
நோக்கிலும் கல்வி நிறுவனத்தின் பெயர்
மற்றும் மதிப்பு பாதிக்கப்படும் என்ற
சுயநலத்தினாலும்
அக்குற்றச்செயலை தொடக்கத்திலே மூடி மறைக்கவும்
வெளிவந்துவிட்ட பிறகு பாதிக்கப்பட்ட
பெற்றோர்களை மிரட்டி அடிபணிய வைக்கவும்
மேற்சென்ன
அடியாட்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது இது முற்றிலுமாக
தவிர்க்கப்பட வேண்டியது மற்றும்
கண்டிக்கத்தக்கது இச்செயலில்
நிர்வாகம் அதன் செயல்திறணை காட்ட
கடமைபட்டுள்ளது . மாணவிகள் யார்
மீதோ புகார் தெரிவித்தாலோ அல்லது குற்றம்
சுமத்தினாலோ அதனை கல்விநிர்வாகம்
விசாரணைசெய்து தக்க நடவடிக்கை எடுத்தல்
வேண்டும் (மாணவிகள் மீதான பாலியல்
சீண்டல்கள் பெரும்பாலும்
பள்ளி வகுப்பறையில் தான் நிகழ்கிறது )
தினந்தினம் ஒவ்வொரு வகுப்பாகச்
சென்று ஆசிரியர்களின் நடவடிக்கைகள்
மற்றும் கல்வி போதிக்கும் முறையை நிர்வாகம்
கண்கானிப்பது நல்லது
பெற்றோர்களின் கவனத்திற்கு:
முதலில் மாணவமாணவிகள்
மீது பெற்றோர்கள் முழுநம்பிக்கை வைத்திட
வேண்டும்
மாணவமாணவிகளின் நடவடிக்கைகள்
அவர்களின் செயல்கள் இதற்கு முன்
நடந்து கொண்டவிதம்
தற்போது நடந்துகொள்ளும் விதம்
ஆகியவற்றை உண்ணிப்பாக
கவனிப்பது பெற்றோர்களின் கடமை
பெற்றோர்கள் அதிகப்படியான
சுமைகளை பிள்ளைகளிடம் திணிக்க
முற்படாமலிருப்பது நல்லது
அவ்வப்போது கல்விநிர்வாகத்துடன்
தொடர்பு கொண்டிருப்பது பெற்றோர்கள்
கடமை
மாணவமாணவிகளின் உடல் ரீதியான
பருவமாற்றத்தினை அறிந்து அதற்கேற்றார் போல்
மாணவிகளுக்குத் தேவையான
கட்டமைப்பினை செய்திடல் வேண்டும்
ஏனெனின் மேற்சொன்ன
குட்டைப்பாவாடை வெள்ளைச்சீருடையின்
தவிர்ப்பிக்கான
காரணங்களை பெற்றோர்கள் அறிந்திடல்
வேண்டும் சென்ற காலங்களில்
ஒரு பெண் பருவம் எய்திடுவதற்கான
வயது அதிகப்படியாக இருந்தது அதன்
காரணம் அன்றைய உணவுப்பொருள்
உட்கொள்ளும் முறை மற்றும் அதற்கேற்ற
காலங்கள் அமைந்தன ஆனால்
இன்று ஒரு பெண் பருவம்
எய்திடுவதற்கான
வயது மிகக்குறைந்துள்ளது தற்போது 10,11,வயதியலேயே பெண்
பருவமடைந்துவிடுகிறாள் இதற்கு இன்றைய
உணவுமுறையும் காலச்சூழலும் காரணமாக
அமைகின்றது நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்வுமுறை மாறி ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்வுமுறையாக மாறிவிட்ட சூழலின்
காரணமாக உணவினையும் நாம்
கவனிக்காமல் விட்டதன் அதிர்ச்சிக்கான
விளைவுதான் இது ஆகவே பெற்றோர்கள்
பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் கவனமாக
செயல்பட வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறார்கள்.
நிர்வாகத்தின் செயல்திறண்
ஆசிரியர்களின் குணநலன்
ஆகியவற்றை அவ்வப்போது பெற்றோர்கள்
விசாரித்து தெரிந்துகொள்ள
வேண்டும்.
குற்றம் நடப்பதற்கான
அறிகுறிகளோ அல்லது குற்றம்
நடந்துவிட்டாலோ பெற்றோர்கள் உடனடியாக
கல்வி நிருவனத்திடமும் காவல்துறையிடமும்
தமது புகாரை பதிவு செய்திட வேண்டும் .
அரசு மற்றும் சமூகத்தின் கவனத்திற்கு :
அரசானது ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும்
ஆராயவும் அறிக்கை சமர்பிக்கவும்
நியமிக்கப்பட்டுள்ள அக்கல்வித்துறைக்கான
அமைச்சகம் முதல் கல்வித்துறை அலுவலகம்
வரையில் தன்பணியினை துரிதமாக முடுக்கிவிட
வேண்டும் சமூகத்தினரிடம்
அரசு தனிமைபட்டிருப்பதை தவிர்த்துக்
கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு தக்க
உதவிகளை செய்திட வேண்டும் அதே போல்
ஆசிரியர்களை தண்டிக்கும் கடுமையான
சட்டங்களையும் இயற்றுதல் வேண்டும்
ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளை துரிதமாக
முடித்து நீதியை நிலைநாட்டும்
கடமையினை அரசானது செய்திடல் வேண்டும்.
சமூகத்தினர் மக்களிடையே விழிப்புணர்வுச்
செய்திடல் வேண்டும்
ஆங்காங்கே மறைக்கப்பட்டுள்ள பாலியல்
குற்றங்களை வெளிக்கொணரும்
நடவடிக்கைகளை செய்திடல் வேண்டும் .
ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும்
(அரசுக்கல்வி உட்பட)
அரசானது வாரமொருமுறை ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்ட
வேண்டும் .அந்நிறுவனங்களில்
குற்றச்செயல் நிறுபிக்கப்பட்டால்
நிறுவனத்தின் மீது கடுமையான
நடவடிக்கை எடுத்தல் வேண்டும் .
அங்கீகாரமில்லாமல் அல்லது பணத்தால்
ஆங்கீகாரம் பெற்ற
கல்விநிறுவனங்களையும் ,ஆசிரியர்களை உறுவாக்கும்
அவ்வாறான கல்விநிறுவனங்களையும்
கண்டறிந்து கடுமையான தண்டனைகளை பிறப்பிக்க
வேண்டும்
சமூகமும் இதற்கான நடவடிக்கைகளில் அரசுடன்
இணைந்து செயல்படவேண்டும். பாலியல்
ரீதியான குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின்
பட்டங்கள் பறிக்கப்பட வேண்டும் மேலும் அவர்கள்
வேறெந்த கல்விநிறுவனத்திலும்
பணியாற்றா வண்ணம் தடைசெய்யப்பட
வேண்டும். இன்னும் பாலியல்
குற்றங்களுக்கெதிரான
அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசும்
சமூகமும் மேற்கொள்ள வேண்டும்.
இந்நாட்டின் அடுத்த தூண்களாக விளங்கும்
சிறுமிகள் படும் கஷ்டநஷ்டங்களில் நமக்கும்
பங்குண்டு எதன் அடிப்படையில் நாம் கல்வியில்
பின்தங்கியுள்ளோமோ
அச்சூழலுக்கெதிரான நடவடிக்கைகளை நாம்
செயல்படுத்தியே ஆக வேண்டும்
ஒவ்வொரு விதைகளும் விருச்சங்களாகும்
என்பது போது இச்சமூகத்திற்காக நாம் விடும்
வியர்வை தான் நம்வருங்கால
வாழ்வியலை படைக்கத் தேவைப்படுகிறது. பாலியல்
வண்கொடுமைகளை தகர்த்தெறிவது நம்
தேவையாக இருக்கிறது . இனியும்
இறைவனுக்கு நிகராக மதித்து போற்றப்படும்
ஆசிரியர்கள் செவிசாய்த்து கேளுங்கள்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு உங்கள்
வாழ்வினையும் தொலைத்து சிறுமிகளின்
வாழ்வையும் சீரழித்து அவர்களின்
பெற்றோர்களையும் அழவைத்துப்
பார்க்காதீர்கள்.உலகம் போற்றும் உயர்ந்த
இடத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்
இப்படி கீழ்த்தரமானச் செயலில்
ஈடுபட்டு உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்க­­
ள்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்