Posts

Showing posts from November, 2014

"நிலவும் நிழலும்"

Image
வானத்து
முழு நிலவின்
உடல் முழுதும்
வழியும் சீழுடனே
கலந்த குருதி வாடை!
பாவம் படுத்திருக்கிறாள் கடைசி காலத்தை எண்ணியபடியே!
இதயம் எழுப்பிய
அதிர்வுகளைத்
தாங்கிக்கொண்டே
அருகே சென்றேன்!
அழுகையும்,அலறலும்
ஒருசேர!
படுக்கையில்
கிடந்த நிலவின்
வலிமுனுகலை கேட்க
இருகாதுகள் போதவில்லை!
அவசரமாதலால்
அவசியமான
மருந்தை எடுத்துத்
தடவ எத்தணிக்க!
அருகிலேயே அதட்டியது அக்குரல்!
அடேய்!! நிறுத்து அவளைத்தொடாதே
என்றொரு குரல்!
குரலே காட்டிவிட்டது
அதன் திமிறை!
திரும்பி பார்க்கையில்!
தீராத பணப்பசியுடனே!
பாதாள பூதம்போலே!
ஒருவன்
நிழலாடுகிறான்
அவனொரு நிழலாதலால்!
கவனம் திரும்பாது கண்ணில் ஒளியேற்றி
மீண்டும் மருந்தை எடுத்தேன்
மீளாத்துயருக்கு சிறிதேனும் ஆறுதலுக்காய்!
நிறுத்து!
உன் செயலை!
நிரந்தரமாய் நீயும்போய்
சேருவாய்! நரிகளுக்கு
இரையாவாயென்று
எச்சரித்து சிரித்தது
அதே குரல்!
குரலின் வீரியத்தை
குரங்கும் அறிந்திருக்கும் போலும்!
அலறியடித்தபடி கீச்சிடுகின்றன அவைகள்!
மருந்திடத்தான் போகிறேன்!
தடைச் செய்ய நீயாரென்று கேட்டுவிட்டு! அவசியமான மருந்தை
அனுவனுவாக கைகளில்
ஏந்தினேன்!
அசுர …

பணப்பேயா பறத்தை!

Image
எத்தனை மொழிகள்
அத்தனையும்
நானறிவேன்!
என் மொழி
போலிச் சினுகல்
மட்டுமே!
நவநாகரீக
டாட்டூக்களை
கண்டதும்
கோபமெனுக்கு!
எவனோ! எப்போதோ!
வைத்த சிகரெட்
சூடுகளை விடவா
அழகானது அவையென்று!
வீசிவிட்ட பணம்
தெருவீதிக்கு
வந்துவிட்டாலும்!
தேவாங்கு பார்வையுடனே
பார்ப்பார்கள்!
இது தாசியின்
பணமென
கல்லாப்பெட்டியும்
கண்ணடிக்கும்!
ஆடைகள் வாங்கவே
ஆடைகளை
களைந்தேன்!
அவசர அவசரமாய்
இறங்கிய அவனுறுப்பு
அனுபவித்ததில்
அத்துணை மனைவியரின்
வலைகளையும்
நானறிவேன்!
பணப்பேயா
பறத்தை!
பட்டிமன்றம்
வையுங்கள்
அவைத்தலைவனும்
அவ்வப்போது
விருந்துண்ண வந்ததுண்டு!
கடைசியாக
செவிசாயுங்கள்!
பசிதீர்க்க
உங்கள் முன்னே பறத்தையாக
நானிருக்க பள்ளிச் சிறுமிகளை பாழாக்காதீர்கள்!
பாவம் அவர்கள்
வளரும் விழுதுகள்!

சில கல்லறைகள்

Image
வெட்கத்தில்
பனிதுளிகள்
பூக்களின்
அரும்பிதழ்
-முத்தம்

___

கல்லறைக்கு
வர்ணம்
பெயருக்கு
பின்னால்
-பிணங்கள்

___

ஒரே
அலங்கோல
காட்சி
அழுகையில்
அரசு
-மருத்துவமனை

___

கருவிழிதனை
காதலுக்கு
கொடுத்தாயோ
இப்படி
சிவந்துள்ளது
-முகம்

___

எத்தனை
வசைச்சொற்கள்
பிறந்தது
குற்றமா?
-பெண்

___

அடுப்படியில்
பூனை
துள்ளி குதித்தது
-டாஸ்மாக்

___

வாடாத
முகம்
வட்டமிடும்
கழுகுகள்
நிரந்தர இடம்
ஊரெல்லையில்
-கல்லறை

___

காதலும்
அறிவியலே
வாழ்க்கையில்
எத்தனை
-கண்டுபிடிப்பு

___

ஒரு
குறையுமில்லை
பிறந்தது
தன்னம்பிக்கை
மறந்தும் , மடிந்தும் போனது
-ஊனம்

___

வாசலில்
கோலம்
வீதியெங்கும்
திறந்த
-ஜன்னல்

___

ஹைக்கூ "பாலைவன நிலவு"

Image
இறுதி முடிவு
முதல் சந்தித்த
இடத்திலே
தொடங்கிற்று!
இனி சுமப்பது
நினைவுகளைத்தானோ!

_____

தாகம்
தணிக்காத
இரவுகள்
நிலவின் மீதான
-கோபம்

_____

கைகளை
கழுவிய
உறவுகள்
பறவைகளை
நம்பியே
-தனிமரம்

_____

வெட்கத்தில் செங்காந்தள்
அழகை
ரசித்தது
கார்த்திகை
மாதம்

_____

அஞ்சலி செலுத்தும்
தேனீக்கள்
வரிசையாக
வாகனம் மோதிய
வண்ணத்துப்பூச்சிகள்

_____

என் மீதான
இரக்கத்தை
கைவிடு
கைநழுவியபின்
காதலை
நினைத்தே
வாழ்கிறேன்!

_____

உள்ளம்
உறங்கவில்லை
ஊரெல்லையில்
ஓலம்
நாய்கள் ஜாக்கிரதை

_____

அதோபார்
யோக்கியன்
ஆட்காட்டியது
விரல்
மறந்து போன
ஓரெழுத்து
"அ"

_____

ஹைக்கூ "மூன்று கோடுகள்"

Image
"மூன்று கோடுகள்"


நடிக்க
தெரியாத
நாணல்
வலைந்து
கொடுக்கும்
-வாழ்வு
_____

புழுதியுடனே!
பறந்த
மண்
தேடியும்
கிட்டாத
விளைநிலம்
_____

பனிதுளிகளே
இரவோடு
ஆடுங்கள்
கண்திறந்தான்
கதிரவன்
_____

விடிந்ததும்
கானவில்லை
கணவன் ,
மனைவியரை
மூன்றாம்
கோட்டில் தனியே
-குழந்தை
_____

எல்லாம்
கண்துடைப்பு
நாடகமோ!
சாலையோர
-சந்திப்புகள்
______

வீதியெங்கும்
ஊமையான
மொழி
இனி எட்டாக்கனியா
நம்தமிழ்

_____

அதோ!
கடைசிக்
கல்லறையில்
காதல்
பிழைத்துக்
கொண்டது
-சாதிமதம்
_____

ஹைக்கூ "நேற்றைய காற்று"

Image
"நேற்றைய காற்று"


விடியும்
பூமி
எழமுடியாத
அதிகாலை
-உறக்கம்

_______


வீதியெங்கும்
அகல்விளக்கு
காலியான
கூடை
தீராத வறுமை

_______


தென்றலில்
தலைகோதும்
காற்று
காதல் இனி
வசப்பட்டுவிடும்

_______


நிராசைகளை
நீரில்
கழுவியது
நிலா
இனி எல்லா
இரவுகளுக்கும்
பரிசாகும்
வெள்ளி

______


பனிகளை
பாருங்கள்
படரும்
கொடிகள்
ஒட்டியானமாகும்

______


அவளின்
வருகையை
உணரவைத்த
காற்றிற்கு
நன்றி!

_______


மேடை முழுதும்
அலங்கார
விளக்குகள்
காற்றிற்கு
வேலையில்லை
ஏமாந்து போன
முகம்

_______நாட்டிற்கும்
வீட்டிற்கும்
இயற்கை விட்ட வேண்டுகோள்
காற்றை
காதலியுங்கள்

______


நேற்று பார்த்த
விதை
இன்று முளைத்தது
உயிருக்கு
ஊன்றுகோலானது
நேற்றைய காற்று

______

ஈழத்தலைவரின் படைச்சிறப்பு

Image
ஈழத்தின் இணையில்லாச் சொந்தம் மேதகு தலைவர் பிரபாகரனின் 26 Nov
பிறந்தநாளை தமிழகம் இதுவரைக் கண்டிராத முறையில் கொண்டாடப்பட வேண்டும்.
அதன் மூலம் ஈழத்துரோகிகளை இணங்கான வேண்டும். இதோ! மேதகு தலைவர் அவர்களின்
மரபுவழிப் படைப்பிரிவுகளைத் தான் இங்கே நான் சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
விடுதலைப்புலிகளின்
மரபுவழி இராணுவக் கட்டமைப்புக்கள்

"தரைப்படைகள்"
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி

தண்ணீர் சிற்பங்கள்!

Image
தண்ணீர் சிற்பங்கள்

நெடுஞ்சாலைக் கழுவி நெடுந்தூரப் பயணம்
ஏதோ! தடுக்கிறதே!
ஓ! அணைக்கட்டா!
குழந்தை வயிற்றில் உதைக்கும் உணர்வினை போல் நானுனை
உணர்ந்தேன்!
எங்கே?
நம் விளைநிலச் சொந்தங்கள்
ஒளித்து வைத்து விளையாடாதேயடி
கள்ளி!
திறந்து காட்டு
தீரட்டும் விவசாயப்பசி
அடடே!
கண்ணத்தில் முத்தமிடும் முகம் யாருடையது?
ஓ? மீன்குஞ்சுகளா!
பாசத்தில்
பாசாங்கில்லா
பாசப்பிறவிகள் நீங்கள்தானே!
துள்ளி குதிப்பதன் காரணமென்னவோ!
வானம்பாடி வாசலை நோக்கி வருவதைக் கண்டீரோ!
எங்கே?
நம் மீனவச் சொந்தங்கள் மடியில்
மறைக்காதேயடி கள்ளி! மாசற்ற நம்
உபசரிப்பில் உலகம் போற்றட்டும்! உழைப்பாளி உள்ளம்
குளிரட்டும்!
ஆகா!
இதுயென்ன?
எனை முழுதாய்
மூர்ச்சையடையச்
செய்யும் முழுயின்ப
உணர்வு!
யாரிவர்கள்?
ஓ!
காற்றும் அதனோடு கலந்தாடும் கடலுமா!
எனையே தனதாக்கிக் கொள்ள
வந்தீர்களோ!
இல்லை எனைக் குளிர்விக்க வந்தீர்களோ!
எங்கே?
நம் பூர்வக்குடி மக்களை
கூப்பிடுங்கள்! குதூகலத்தோடே தொடங்கட்டும்!
திருவிழாக் கொண்டாட்டங்கள்! நம்மிசைத் தாயினை அழையுங்கள்
தென்றலில் தேனொழுவட்டும்! தோல்விகள் யாவும் தூளாகட்டும்!
முழு நிலவு என்…

ஹைக்கூ "இருகயிறு"

Image
*தூரத்தில்
நிலவொளி
மங்கிற்று
திட்டியபடியே
மேகத்தை கடக்கிறது காதலிரவுகள்!*

__________

*பயத்தில் பதுங்கிய கிராமம்
எச்சரிக்கையா? ஊரெல்லையில்
-நாய்கள் ஓலம்*

__________

*பசி வயிற்றுக்கு
ஏது நிம்மதி!
பானையை திறந்தால் நீருக்கு பதிலாக கண்ணீரே
நிரம்புகிறது!*

__________

*வீசும் புயலுக்கு இரையான குடிசைகள் ஆங்காங்கே காத்திருக்கும்
ஆறடி நிலங்கள்*

__________

*விரக்தியில்
ஏழை
தற்கொலைக்கு தயாராகிறது
-பசும்பால்*

__________

*வெற்றிடத்து
சமையல்
காற்றும் காசானது உறையில்
-நொருக்குத்தீனி*

__________

*விசித்திர
ஆசை
விளம்பர அடிமை பலியான
பெண்கள்,
குழந்தைகள்*

__________

*மாட்டிற்கு
இருகயிறு
கழுத்தில்
தொங்கிய
-தாலி*

__________

சிறுமிகளைச் சீரழிக்காதீர்கள்!

Image
சமீப காலங்களில் இந்திய தேசியத்தில்
அதிகப்படியான
வண்முறைகளுக்கு உட்படுத்தப்படும்
சிறுவர்சிறுமிகளை இச்சமூகம்
கண்டுகொள்ளவே இல்லை ஆங்காங்கே ஆசிரியர்களின்
அத்துமீறல் "குடி"மகன்களின்
வெறியாட்டமென சிறுவர்சிறுமிகள்
அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்
அடிக்கடி இச்சமூகம்
அழிவை நோக்கியே பயணிக்கிறது என்பதை இதன்
மூலம் தெரிந்துகொள்ளப்படுகிறது
நம் பண்பாட்டு நெறியடிப்படையில்
"மாதா,பிதா,குரு,தெய்வம்"
எனச்சொல்வதுண்டு
அம்மை அப்பனுக்கு அடுத்தப்படியாக ஆசானும்
அதன் பிறகே தெய்வம் என
போதிக்கப்படுகிறது அந்த அளவிற்கு ஆசான்கள்
போற்றப்படுகிறார்கள் அவ்வாறு போற்றப்படும்
ஆசான்கள் இன்றையச்சூழலில் எவ்விதமான
குற்றநடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என
நம்கண் முன்னே நடக்கும் பல
சீர்கேட்டு நடவடிக்கைகளை பார்க்கின்றபோது பெற்றோர்கள்
சிறுவர்
சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படுகிறார்கள்
எங்கே தம்பிள்ளைகள்
சீரழிந்து விடுவார்களோ அல்லது அர்த்தமற்ற
அறிவை பெற்று அழிந்து போவார்களோ என்று தினந்தினம்
வயிற்றில்
நெருப்புகட்டிக்கொண்டு மனதிற்குள்ளே அழுகிறார்கள்
முழுக்க முழுக்க இதில் சீரழிந்து போகும் சிறுமிகளின்
வாழ்க்கை இன்…

ஆற்று மணலின் வேண்டுகோள்!

Image
நதிகளைத் தேடி
கடல் அலையும்
காலமிது
கானாமல் போனதேன்?
"விளைநிலங்கள்"
செய்நன்றி சேற்றுப்புழுதியிலே
சிக்கித் தவிப்பதுவோ!
புதையுண்டு கிடக்கிறது
நம் சீவ ரகசியம்!
பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரியாமல் கைகோர்க்கும்
கயவர்கள் இவர்கள் தானோ!
உயரத்திலேற்றி
ஊஞ்சலாடிய
மணலோ!
உருகுலைந்து
கண்ணீரை அத்தார்ச்சாலையில்
தெளித்தபடியே!
ஒப்பாரி வைக்கிறது ஆற்றுமணல்!
காதும் செவிடா?
கண்ணும் குருடா?
கடைசியாக
கையெடுத்து வேண்டுகோள் வைக்கிறது மணல்! கொஞ்சம் திரும்பியாவது
பாருங்கள்!
திருத்தங்கள்
நடைபெறட்டும்!
நம் ஆற்றுமணலின் வேண்டுகோள்
இதுவே!
கடத்தாதீர்கள்
பயிர்வளம் அழுகிறது!
அள்ளி ஏற்றாதீர்கள் அழகியச் சோலை
அவமானப்படுகிறது!
விற்காதீர்கள்
விவசாயி விம்மியழுகிறான்!
சலிக்காதீர்கள்
சவக்குழி எலும்புகள் எழுகிறது!
எங்களை ஆற்றோடே சேமியுங்கள்! கரையுடையும்போது
கரம்கொடுக்கின்றோம்!
வண்டலாகிய நான்
வாடலாமா!
விட்டுவிடுங்கள்! மனசாட்சியுடனே
மன்னனையும்
மதிப்போம் நாங்கள்
விட்டுவிடுங்கள்!
கையெடுத்து வணங்க கரமில்லை எங்களுக்கு!
ஆனால்!
கவிழாமல் சேர்ந்தணைக்கும்
(அக்)கரையுண்டு!
விட்டுவிடுங…