அம்மாவின் "முத்தம்"

தத்தி நடக்கையில்
தவறிய காலுக்கொரு
முத்தம்!

அடம்பிடிக்கையில்
அழுகைக்கொரு
முத்தம்!

அம்மா! என்றழைக்கையில்
இதழுக்கொரு
முத்தம்!

குறும்பு செய்கையில்
கைகளுக்கொரு
முத்தம்!

பொம்மை உடைக்கையில்
பொய்யழுகைக்கொரு
முத்தம்!

உறங்கும் வேளையில்
சிறு புன்னகைக்கொரு
முத்தம்!

பாலுக்கு அழுகையில்
பசிவயிற்றுக்கொரு
முத்தம்!

அப்பாவை விரல் காட்டியதில்
உடலெடுங்கும் முழு
முத்தம்!

முழுதாய் நானும்
வளர்ந்தேன் முடியவில்லை
முத்தமழை!

உணர்ந்தேன்!
உயிர்துடித்தேன்!
உலகை ரசித்தேன்!
உறவில் கலந்தேன்!
உண்மை உணர்ந்தேன்!

அரியணை அவசியமில்லை
அன்னைமடியே
ஆருதலென்று!

உயிர்கொடுத்த
உள்ளத்திற்கு
உயிர்மூச்சாய்
இனி காலம் முழுக்க உடனிருப்பேன்!

இறைவா! மன்னியும்
இனி இரு கை முதலில் அன்னையை வணங்கும்!
அதன் பிறகே உன்னை வணங்கும்!

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்