23/09/2018

அதில் ?


பெண் எனும் என்னில்
தீட்டும் புனிதமும்
குரூரமாக காமத்தை தாக்கிட
பசியென்று சொல்லி
வெறியோடலையும்
வாய் பிளந்த கோரைப்பற்களில் வழியும் குருதி காயும் முன்னே...
உன் கழுகு பார்வையில் முதலில் என் நிர்வாணம் பூசி...
பழி தீர்த்துக்கொள்ள
துளி விஷம்
தெளித்திடுவேன்
கண்டாலே தூக்கித் திரியும்
ச்ச்சைக்...
அதில்? ....

21/09/2018

பிரியமானவளே


அந்தி வானத்தில்
தவழும் பிறை
தோள் தொட்டு
தேடுவதற்குள்
என்னில் உட்புகுந்தாய்
அந்நேரத்தில் மலர்ந்த
மலரின்
ஸ்பரிசத்தை போல...
சொல்ல மறந்த கதைகள் என
ஏதுமில்லை நமக்குள்...
ஆம்...
நான் மரணித்த பிறகும்
உன் நினைவுகளினூடே
அவை அசைபோடுமல்லவா...
யாதொரு ஒளிவு மறைவுமற்ற
நேசத்தில் செதுக்கிய
காதலின் கூடு அது...
பிரியமானவளே...

14/09/2018

ராட்சஷி


எனக்குள் ஒலித்திடும்
ஜீவ நதிகளின் இசையினூடே
உன்னை தேடுகிறேன்
அனுதினமும் இம்சிக்கும்
உன் பேச்சொலிகளின் மயக்கத்தில்
நித்தம் அலைகிறேன் ஒரு
பித்தனாக...
பசி மறந்து... தூக்கம் மறந்து...
என் துக்கத்திலும் நீ.. கலந்து...
ஒவ்வொரு நொடிகளிலும்
உன் பெயரையே உச்சரித்து
வாழ்தல் பிடிக்கிறது‌‌.‌‌..
ஆமாம்...‌‌
காதல் எப்போது வந்தது எனக்குள்
என்று மட்டும் புலப்படவேயில்லை
இன்று வரையில்...
உனக்கும் அப்படித்தான்
என்றுணர்ந்து உச்சிமுகர்ந்து
மிச்சங்களை வாரி இறைக்கிறேன்
முத்தங்கள் என்றுணர்வாய் நீ...
மூச்சின் வெப்பம் தணிவதற்குள்ளாக
நாம் விழித்துக்கொள்ளுதல் வேண்டாம் விடிந்த பின்னாலும்... 
இமைகளை மூடிக்கொண்டே
நினைவுகளின் பகிர்தலில் ஒன்றாய்
படுத்திருப்போம்...
பேரன்பின் பெருங்கனவு நமக்குள்
காட்சிகளாகட்டும்
ராட்சஷியே.‌‌..
Related Posts Plugin for WordPress, Blogger...

அதில் ?

பெண் எனும் என்னில் தீட்டும் புனிதமும் குரூரமாக காமத்தை தாக்கிட பசியென்று சொல்லி வெறியோடலையும் வாய் பிளந்த கோரைப்பற்களில் வழியும் குரு...