02/07/2016

கபாலியும் கொலையும்

நான்
கபாலி
திரைக் காவியம்
பற்றியும்

ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும்
ஓயாது
மந்திரங்களோதும்
பலகோணத்து
புது படங்களை
பற்றியும்
பேசிக்கொண்டிருந்தேன்

இடையிடையே
அரட்டையும்
அங்கலாய்ப்புகளும்
அடுத்த சூப்பர் ஸ்டார்
தலயா தளபதியா?
என்கிற ஆராய்ச்சி
விவாதங்களுடனும்
அந்த பயணங்களில்

எனதருகில்
ஒரு தற்கொலை
ஒரு படுகொலை

கண்டும்
காணாமல்
நகர்ந்து விட்டேன்

உடனே
விமரிசனம் எழுதியாக
வேண்டுமே

அதுபற்றியல்லாமல்
திரைக் காவியங்களை
பற்றி
தல தளபதிகளை
பற்றி,,,

சுவா(தீ)க்களோ
வினுபிரியாக்களோ
ஜிஷாவோ
நிர்பயாக்களோ
நிர்வாணமாய்
பிணமாய்
கிடந்தாலும்

என் பக்கங்களை
நிரப்பியாக
வேண்டும்
என் விமரிசன
காணொளிகளை
ஏற்றியாக
வேண்டும்

சமூக நீதிகள்
செத்துக் கிடப்பதாய்
பேச
எனக்கொன்று
வாய்த்திருக்கிறது
சென்சார் போர்டு
என்கிற பெயரில்
அதுமட்டுமே
போதுமெனக்கு
பெண்ணியம்
பேசிடவும்
போர்க் கொடி
தூக்கிடவும்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...