02/07/2016

மாவோ எனும் மாமனிதன்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியினை விரும்பும் கம்யூனிஸ பாட்டாளி
வர்க்கத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருங்கிணைத்தலை
,வழிநடத்தும் பண்பு கொண்ட ஒரு தலைமை வாய்ப்பதற்கு அவர்களின் புரட்சிக்கு
ஏற்ற வெற்றிபெற்ற செயல்திட்டங்களே உதாரணமாய் அமைகின்றது. அந்த வகையில்
ஓர் தலைமை மட்டுமே செயல்திட்டத்தினை தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து
புரட்சியை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸியம், லெனினியத்திற்கு
செழிப்பூட்டும் வகையில் பாட்டாளி வர்க்கத்தின்
மீது அக்கறையோடு செயல்பட்ட கம்யூனிஸ சீன புரட்சியாளர்தான் தோழர் மாவோ
எனும் மாசேதுங் . "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என சோஷியலிஸ வேட்கையினை
கம்யூனிஸப் பாதையை கொண்டு சீனத்தை செதுக்கினார் மாவோ, வெறும் சிற்பங்களாக
அல்லாமல் ஒவ்வொரு சிற்பத்திற்குள்ளும் சமூகம், சகோதரத்துவம், பெண்ணியம்,
சோஷியலிஸம், கம்யூனிஸமென தொழிலாளர் வர்க்கத்தின் அத்துணை உரிமைகளையும்
அவர்களுக்குள் புகுத்தி புரட்சிகர கம்யூனிஸத்தை சீன தேசத்திற்கு
மட்டுமல்லாது மற்ற ஏனைய உலக தேசங்களுக்கெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தத்தின்
ஆகப் பெரும் முன்னுதாரணமாய் எடுத்துச் சென்றவர் மாவோ. ஏனைய கம்யூனிஸ்ட்
தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள்
மார்க்சிய லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும்
விளக்கினார். சீனாவில் ஒருசக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன்
தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு
கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது
எதிரிக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டி
ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகுமுதலாளித்துவத்தையும்
இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பறிய சாதனையாகும்.
ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும்,
தந்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில்
நகரங்களை கைப்பற்றி முழுத்தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை
ஏற்படுத்தியதுமற்றுமொரு சாதனையாகும். அதனடிப்படையிலேயே மாவோயிஸத்தின்
பாதை கிராமங்களை நோக்கியதான பாதை என்பார்கள்.
அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத
சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையின் கீழ்
ஐக்கியப்படுத்தி ஜனநாயகப் புரட்சியை வென்றெடுத்து, அதன் அடுத்தகட்டமான
சோசலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை, விடுதலைக்காக போராடும் அனைத்துலக
மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.
சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோசலிச நாடாக்க நடவடிக்கை
எடுத்தமை, சோவியத் யூனியன் தலமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில்
உருவெடுத்த நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை
என்பன மூலம் மாக்சிய லெனினியத்தையும், புரட்சிகர
இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு
வழிகாட்டியாக மாவோ விளங்கினார். மாவோ சாதனையாளனல்ல உலக சரித்திரத்தை
புரட்டிப்போட்ட ஒரு சாதாரண கம்யூனிஸ பற்றாளன். அவரின் சாதனைகளை வெறும்
சாதகமாகவே பயன்படுத்துவது என்றுமே அபத்தமாக இருக்கும். புரட்சிகர
சோஷியலிஸ கம்யூனிஸத்திற்கு ஒரு பகுத்தறிவாளனாய், புரட்சியாளனாய் மாவோவை
பின்பற்றுதலே உலகின் ஆகச் சிறந்த பல சாதனை புரட்சிகளுக்கு வழிகாட்டுதலாக
அமையும்.

- 26 December 2011 அன்று எனது பேஸ்புக் (facebook) பதிவிலிருந்து,,,

எதிர்வினைகள்:

2 comments:

  1. நண்பரே,

    ஹிட்லரை ஏகத்தும் வசை பாடும் பொது புத்தியில் வளர்ந்தவர்களாகிய நாம் காம்யுனிஸ்ட்வாதிகள் ஸ்டாலின், மாவோ தன் நாட்டு மக்களுக்கு செய்த துரோகம், அநியாயம் பற்றி மட்டும் பேச மறுப்பது ஏன்? மாவோ ஒரு படு பயங்கர கொலைகாரன் என்ற கருத்து இங்கே இருக்கிறதே? அதைப் பற்றி உங்கள் எழுத்து என்ன சொல்கிறது?

    ReplyDelete
  2. நாஜி ஹிட்லர் எங்காவது ஒரு இடத்தில் அதிகாரப் பூர்வமாக சோஷியலிஸ மக்களாட்சி குடியுரிமையை வழங்கியிருக்கிறார்? என்று வரலாற்றுப் பதிவு இருக்குமேயானால்
    ஹிட்லரையும் ஏற்றுக் கொள்வேன் தோழர்! ஏனைய இனவாதங்களை ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு,,,

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...