08/05/2016

சுமக்கும் சிலுவை

நான் சிலுவையை சுமக்கின்றபோது எழும் பூமியதிரும் சிரிப்புகளை உற்று கவனிக்கவும் செவி மடுக்கவும் அப்போதெனக்கு தோன்றவில்லை அது தேவைகள் பூர்த்தியான தெனாவட்டு சிரிப்புகளென சிந்தையில் முன்பே சுருக்கென குத்தி விட இலக்கு ஒன்றேதான் இப்போதெனக்கு ஆறுதல் அதுவே பாதி வழியை கடந்த பின்னர் என்னுள் நானே என் நரம்புகளினூடே எழும்பும் உரத்த முழக்கங்களால் சிலுவையே உடைபடும் நிலைகொள்ள முதல் கேள்வி எழுகிறது என்னுள் எங்கே நான் சிலுவையை இறக்கி வைப்பது? சற்றும் பதிலுக்கு காத்திருக்கவில்லை எனை அடிமையாக நடத்தும் அதே ஆதிக்கத்தின் தோளில்தான் இறக்கிவைக்கிறேன் விழும் அடிகளைத் தாங்கி திருப்பி அடிக்காமல் விடுதலை பிறக்காது என் தோழா!

எதிர்வினைகள்:

2 comments:

  1. இது வரிகளா?வலிகளா?

    ReplyDelete
  2. ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருக்கும் வலிகளை வரிகளாக்கினேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...