13/05/2016

மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நெல்லையில்,,,

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர்
விஸ்வநாதன், இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்
தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க பிரிவைச் சேர்ந்த சங்கர்
என்பவரின் மகள் காவேரியை காதலித்து வந்துள்ளார். இதற்கு காவேரியின்
வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி விஸ்வநாதனும்
காவேரியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இந்நிலையில்
காவேரியின் தந்தை விஸ்நாதனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல்
விடுத்துவந்தார். இதுகுறித்து விஸ்வநாதன் குடும்பத்தினர் காவல் துறையில்
புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆத்திரம் அடங்காத காவேரியின் தந்தை வெள்ளியன்று விஸ்வநாதனின்
சகோதரி கல்பனாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமைலையில் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்தி
அதிர்ச்சியலைகள் அடங்குவதற்குள் தமிழகத்தில் மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை
அறங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தீக்கதிர்

எதிர்வினைகள்:

2 comments:

  1. தலித்துன்னு ஏன் சொல்றீங்க தமிழன்னு சொல்லலாமே? பின் எப்படி சாதி ஒழியும்?

    ReplyDelete
  2. உங்களை சொல்லி குற்றமில்லை சமூகம் அவ்வாறான பார்வையை கொண்டிருக்கிறது "தலித்" என்பது சாதியல்ல அது சமத்துவத்திற்கான வழியினை ஈட்டிச்செல்லும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான பொதுவான பெயர். முதன்முதலில் சொல்லை பயன்படுத்திய ஜோதிராவ் பூலே இவ்வாறு குறிப்பிடுகிறார் : கல்வியை மறுக்கும் ஆதிக்கத்திற்கு பலியாகும் அனைவருமே தலித்துகள் என்கிறார், இதில் பெண்களையும் உள்ளடக்கியே அவர் சொல்லை பயன்படுத்துகிறார்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...