17/05/2016

தென்றல் காற்று

அமைதிப்
பெருவெளியில்
அடங்காமல்
சுற்றிச் சுழலும்
தென்றல் காற்றுக்கு
நான் அடிமை

சீற்றமில்லை
புழுதிகள்
கொஞ்சமுமில்லை
வெண்ணிற ஆடையால்
சலித்தெடுத்து
வடித்தாலும்

உட்புகுந்து
வெளியேறுகையில்
உள்ளத் தூய்மையை
திறந்து காட்டி விட்டு
செல்கிறது எந்தன்
தென்றல் காற்று

மூக்குடைந்து போன
முகங்களுக்கு
வேண்டுமானால்
காற்று வெறும்
நாற்றமாகலாம்

யாருமறியா
சாமத்தில் அடர்த்தியான
அந்த பூவனத்தில்
பூத்துக் குலுங்கும்
மலர்களின் மணத்தை
கவர்ந்து

தன்னை
ரசிகிறவர்களின்
மனங்களை கவரும்
வர்ணஜால
வித்தைகளை தனக்குள்
இருத்தியிருக்கும்
தென்றல் காற்றுடனே
திகட்டாத
வேட்கைதனில்
மூழ்கியிருக்கும்
எவரும்
காதலிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள்
தென்றல் காற்றை
இப்போதுதான்

நானோ
முந்திப் போகிறேன்
அவர்களுக்கு
முன்னரே காதலிக்கவும்
செய்கிறேன்
என் ஆன்மாவின்
அடுத்த வாரிசு
தென்றல் காற்றாக
இருக்க வேண்டுமென்கிற
ஒரு சின்ன
நப்பாசையோடு,,,

எதிர்வினைகள்:

4 comments:

  1. அருமை நண்பரே...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...