23/05/2016

தமிழக முதல்வரின் "முதல் கையெழுத்து"

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் தனது முதல்வர் பதியேற்பினை
முடித்துக்கொண்டு நேராக தலைமைச் செயலகம் சென்ற தமிழக முதல்வரும் அதிமுக
பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படியான­
திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
* விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி
*அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்
*தாலிக்கு 8 கிராம் தங்கம்
*படிப்படியான மதுவிலக்கு அடிப்படையில்
1. தொடக்க 500 டாஸ்மாக் கடைகள் மூடல்
2. டாஸ்மாக் கடை நேரக் குறைப்பு பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடல்.
என கோப்புகளில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
அனைத்தும் வரவேற்கத்தக்கதென்றால­ும் காலம் பொறுத்திருந்தே எதையும்
தீர்மானிக்க முடியும். விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் படி
அனைத்து விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் உரிய காலத்தில் கடன்
தள்ளுபடிக்கான திட்டநலன் சென்று சேர வழிவகை செய்யப்பட வேண்டும். எதற்கும்
"கமிஷன்" என்கிற முந்தையகால அதிமுக ஆட்சி அனைவரும் அறிந்ததே! ஏழை விவசாய
பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்தாரத்திற்கு அலைந்து திறிந்து கடனை வாங்கி
பயிர் செய்கையில் நட்டமடைந்து பெற்ற கடனுக்கு வட்டி கட்டமுடியாமல்தான்
தற்கொலை என்கிற விபரீத முடிவை எடுக்கிறார்கள். அவர்களிடமே சென்று
அதிகாரிகளும், ஆளும் அரசின் கட்சி நிர்வாகிகளும் "இவ்வளவு கமிஷன் கொடு!
அம்மா திட்டத்தின் படி உன் கடனை தள்ளுபடி செய்கிறேன்" என மிரட்டும்
பொதுவான போக்கை களைத்து நியாயமாக அனைத்து விவசாயிகளுக்கும் உரிய
நேரத்தில் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.திருமணத்திற்கு தங்கத்தாலி
வழங்குவது வரவேற்புக்குரியது என்றாலும். தாலி மட்டுமே திருமணப்
பந்தமில்லை மாறாக சாதிமறுப்பு திருமணங்களை ஊக்குவித்தும், காதல்
திருமணத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆணவக்கொலைகளை தடுக்கும்
நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபடுமா? என்பது தெரியவில்லை, தங்கத்தால்
பெருமுதலாளிகள் கொழுத்து வளர்வார்களே தவிர இருமணங் கலந்த உண்மைத்
திருமணங்களை சாதியத்தாலும் மதத்தாலும் இங்கே கொலைசெய்யப்படுவதை தடுத்து
நிறுத்திவிட முடியவில்லை.அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம்
இலவசம்? என்பது வாடகை வீடுகளுக்கு பொருந்துமா? ஏனென்றால் தரவேண்டிய
வீட்டுக்குரிய வாடகைத் தொகையை விட மின்சாரக் கட்டணத்தைதான் முதலில்
கேட்கிறார்கள் வீட்டு உரிமையாளர்கள். வீடற்ற வாடகை வீட்டுத்தாரர்களுக்கு­
இந்த இலவச மின்சாரம் எந்த விதத்தில் பயன்படப்போகிறது என்பதையும்
பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் கடைத் திறப்பு நேரம் குறைக்கப்பட்டாலும் இரவு பத்து மணி என்பதே
விபரீத நேரம்தான். இரவு நேர கடைத்திறப்பு நேரத்தை இன்னமும்
குறைத்திருக்கலாம் . போலவே முதல்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
என்பது வரவேற்கத்தக்கதாகவும்­ பாராட்டுதலுக்கும் உரியது . எனினும்
உற்பத்தியை குறைத்தலுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாக மது ஆலைகளை
மூடும்படியான செயல்திட்டத்தை வகுத்து கையெழுத்து இட்டிருக்கலாம்.
அனைத்திற்கும் நாம் பொருத்திருந்து பார்க்கத்தானே வேண்டும்
ஐந்தாண்டுகளில் தொடக்க முதலாண்டுதானே இது,,, பார்ப்போம்,,, முதல்
கையெழுத்து தமிழத்தின் தலையெழுத்தை மாற்றுமா? என்று பொருத்திருந்து
பார்ப்போம்.

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...