22/05/2016

என் காமத்தின் பிறப்பிடம்!

என் கனவில்
தோன்றும் காட்சிகளை
ஓவியமாய்
தீட்டி வைத்துள்ளேன்
மனதிற்குள்

அனைத்திலும்
அழகானவனாய்
அதிசயங்களாய்
பிரளயங்களின்
பிரபுத்துவனாய்
உன்னை
தானாக வரைகிறதென்
தூரிகை

என் வார்த்தைகள்
வண்ணங்களாகியும்
அலங்கரிக்கிறது
உன்னை

அனுதினமும்
உன்னையே நினைத்து
வெடித்துச் சிதரும்
என்
காமத் தீஞ்சுடரை
விளையாடத் தீண்டி
காதலாக

கைகோர்த்தும்
கட்டிப்பிடித்தும்
கண்களிரண்டையும்
முத்தங்களால்
நனைத்தும்
உதடுகளை கடித்தும்
சுவைத்தும்
உச்சி முகர்ந்தும்
என் உயர்ப்பூவை
தட்டியெழுப்பியும்

நானிருந்த தவத்தை
கலைத்திட வேண்டாமா
நீயென

ஏங்கிய
அடுத்த நொடிகளிலே
தீட்டிய
ஓவியத்திலிருந்தும்
நானிருந்த கனவு
உலகத்திலிருந்தும்
வெளியேறி
உயிர்பெற்று
என்முன்னால்
திடீரென
நீ தோன்றுகையில்
தாங்குமா
என் இதயம்

ஓர் அடர்வனத்தில்
வழித்திசை காணாமல்
அலைந்து திரிந்து
திடீரென கண்களுக்கு
விருந்தாய் அகப்படும்
ஒற்றையடி பாதையை
நோக்கி ஓட்டமெடுக்கையில்
உயிர் மூச்சு வாங்குமே
அதுபோலவும்

எத்தனையோ சுமைகளை
தாங்கும் பூமியதன்
நில வெடிப்பிலிருந்து
வானெங்கும் பரவுமே
அனல் காற்று
அதுபோலவும்

என் முன்னே
காதலின் பித்தனாய்
காமத்தின் தலைவனாய்
பூத்திருக்கும்
உன்னைக் கண்டதும்

தீராத
என் நினைவுப் பசியினை
நிஜத்தோடு சேர்த்து
புசித்திட அப்படியே நிர்வாணமாய்
நின்றுனை
கட்டியணைக்கிறேன்
காதலா!

அதீத
உணர்ச்சிவசத்தால்
உனை அழுத்தி
அரவணைக்கையில்
என் கைவிரல்
நகங்கள்
உன் தேகத்தை
பதம்பார்க்கலாம்

வலியால் நீயும்
அவஸ்தை படலாம்
அனுபவி
என் தலைவா

அவ்வலி உனக்காக
நான் சேமித்து
வைத்தவை
அன்பினால் நான்
உனக்குத் தரும்
அதிசய ரசமது

எனக்கு தெரியும்
என் நகம் குத்தும்
அந்த வலியை
அமுதமாய்
நீ பருகுகிறாயென்று

என் உள்மனம்
ஒன்றைச் சொல்ல
விரும்புகிறது

இன்னும் நெருக்கமாய்
இடைவெளிகளற்று
என்னை
இறுக்கி அணை

உன் காதோரம்
உதிக்கிறேன்
வார்த்தைகளை

என் காதலனும்
நீதான்
என் கன்னிக்கு
சொந்தக்காரனும்
நீதான்
என் மொத்த காமத்தின்
பிறப்பிடமே
நீதானென்று மட்டும்,,,

எதிர்வினைகள்:

6 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...