14/05/2016

சாதிகளின் அடிப்படையில் வகுப்பறைகளை பிரிக்கும் அவலம்

சாதியம் பார்க்கும் சமூகத்திற்கு கல்வி ஒரு கேடா! சுயமாய் சிந்திக்கும்
பகுத்தறிவுக்கு முன்னால் "சாதியம்" தையல் அறுந்து பிய்ந்து போன
செருப்பாகவே இருக்கும் அதனை உபயோகிக்க முடியாது, உபயோகித்தாலும் எவ்வித
பிரயோஜனமின்றி அணிந்த கால்களுக்கு தீங்கையே விளைவிக்கும். ஒருவன் மெத்தப்
படித்திருந்தாலும் கல்வியால் அவன் வாழ்வும் அறிவும்
வளர்ச்சியடைந்திருந்த­ாலும் அவன் மனதிற்குள் சாதிய துவேஷ வஞ்சம்
இருக்குமேயானால் அவன் மனித இனத்திலிருந்து விலகி கல்வியறிவற்ற மிருக
இனத்திற்கு ஒப்பாகிவிடுவான். மிருகங்கள் கூட இவ்வுலகில்
வாழத்தகுதியானவைதான் ஆனால் சாதியத்தை உயர்த்தி பிடிப்பவன்
வாழத்தகுதியற்றவனாகிவ­ிடுகிறேன், அவ்வாறான வாழத்தகுதியற்றவனே ஒரு
கல்வியாளனாகவும், அக்கல்வி நிறுவன முதல்வராகவும் இருப்பானெனில் இளைய
தலைமுறைக்கு எவ்வாறு அவனால் பகுத்தறிவை ஊட்டிட முடியும்? அதற்கு மாறாக
சமூகத்தை சீரழிக்கும் சாதிவெறி கொண்ட இளைய தலைமுறை சமூகத்தைதானே அவனால்
வளர்த்தெடுக்க முடியும், அப்படியெனில் இந்தியம் முழுக்க முழுக்க
பிற்போக்குச் சிந்தனையில் கொண்ட சீரழியும் சமூகத்தை நோக்கியே பயணிக்கிறது
என்பது இச்சம்பவம் நமக்கு தெளிவுபடுத்துகிறது, ஐதராபாத் பல்கலையில்
ரோஹித் வெமுலா மீது
கல்வி நிறுவனம் கட்டவிழ்த்து விட்ட சாதிய வண்மமும் அதனால் ஒரு ஆராய்ச்சி
மாணவனை இழந்து தவிக்கும் தாயின் கண்ணீரையும் எப்போது நாம் துடைக்கப்
போகிறோம் , இல்லை கல்வி நிறுவனங்களின் சாதிவெறியாட்டம் தொடர்ந்தேதான்
பயணிக்குமா? உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில் உள்ள சேத் புல்சாந்த்
பாக்லா இன்டர் காலேஜ் முதல்வர், ராதேஷ்யம் வைஷ்ணவ், சாதிகளின்
அடிப்படைகளில் வகுப்பறைகளை பிரித்ததற்காக மாவட்ட நீதிபதி அவினாஷ்
கிருஷ்ணன் சிங் அவரை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவினாஷ் கிருஷ்ணன் கூறுகையில், பொது, ஓபிசி மற்றும்
எஸ்.சி என்று சாதிகளின் அடிப்படையில், 9-ம் வகுப்பு மாணவர்களை வகுப்பு
பிரிவுகளாக செக்ஷன் ஏ, பி, சி என்ற வகையில் பிரித்ததாக சேத் புல்சாந்த்
பாக்லா இன்டர் காலேஜ் முதல்வரின் மீது எங்களுக்கு புகார் வந்தது. அதில்
பொதுப்பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் பாலானோர் பிரிவு ஏ-விலும்,
ஓ.பி.சி பிரிவினைச் சேர்ந்த பெரும் பாலான மாணவர்கள் பிரிவு பி-யிலும்
மற்றும் எஸ்.சி பிரிவினைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் பிரிவு சி-லும்
அமரவைத்துள்ளதாக கூறினார்.
இதனடிப்படையில் அந்த கல்லூரி முதல்வரையும் மற்றும் அந்த வகுப்புகளைச்
சேர்ந்த வகுப்பாசிரியர்களையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும்,
மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக
தெரிவித்தார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திற்கு உடனடியாக மாணவர்களை
"சமமாக" பிரிக்கும்படி தான் உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்வினைகள்:

2 comments:

 1. சாதி பார்த்து பார்த்து சாணிய விட நாற்றம்
  எடுப்பதே நம் நாட்டில் வந்த மாற்றம்

  ReplyDelete
 2. உண்மை தோழர்!
  தங்கள் வருகைக்கு
  நன்றி!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...